Tag Archives: #lockdown

தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு மாநிலத் தலைவர் கடிதம்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்
மாநிலத் தலைவர்- இந்துமுன்னணி

01.06.2020

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

சென்னை

அன்புடையீர் வணக்கம் ,

பொருள்: தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி கோரிக்கை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரொனா கொடிய நோயை தமிழக அரசு கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.நான்கு கட்டங்களாக மத்திய அரசும் , மாநில அரசும் ஊரடங்கை அமுல்படுத்தி தற்போது படிப்படியாக சில தளர்வுகள் கொடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள்.

நமது தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த பூமி. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும் தெய்வபக்தி கொண்டவர்கள். தமிழகத்தில் எல்லா விதமான குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில்களை மையமாக வைத்தே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் கடந்த 60 நாட்களாக கோவில்களிள் மக்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருக்கின்றனர். இந்த கொரோனாவால் பல்வேறு பொருளாதார பாதிப்புகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு மனநிம்மதி கொடுக்கும் இடம் கோவில்கள்.

இந்த ஐந்தாவது கட்ட த்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் கோயில்கள் திறக்கலாம் என்று கூறியுள்ளது . இதனடிப்படையில் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் கோயிலைத் திறக்க அந்தந்த அரசுகள் முடிவு செய்து இருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் கோவில்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களை விட இந்து கோவில்களில் சுலபமாக சமூக இடைவெளி கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழிபாடு செய்ய வசதி உள்ளது. ஆகவே மக்களின் உள்ளக் குமுறல்களை கொட்டுவதற்கான இட மான கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்கு திறந்துவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி

தாயகப் பணிகளில்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

மாநிலத் தலைவர்

தலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
2/131, பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி மாவட்டம்
9486482380

பெறுநர்
உயர்திரு.தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு

ஐயா

இரண்டு தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் SS காலனி அருகில் உள்ள அன்சாரி நகர் 4வது மற்றும் 5 வது தெருவில் இருக்கும் இஸ்லாமியர்கள் 144 தடை உத்தரவை மீறி சுமார் 600 க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி ரோட்டில் தொழுகை நடத்திக் இருக்கின்றனர். தொழுகை நடத்துவதற்கு முன்னேற்பாடாக சாலை முழுவதும் தொழுகை நடத்த சிகப்பு கம்பளம் விரித்து டியூப்லைட் மற்றும் இதர சீரியல் லைட்டிங் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
காவல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் இத்தனை ஏற்பாடுகளுடன் தொழுகை நடப்பது நிச்சயம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை 144 தடை உத்தரவு இந்துக்களுக்கு மட்டும்தான் என்று மதுரை மாநகர காவல்துறையினர் முடிவுசெய்து விட்டார்களோ! என்ற ஐயம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேளை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகர காவல்துறை கமிஷனர் அவர்களும் நீங்கள் தொழுகை நடத்துங்கள் நாங்கள் ஒரு வளக்குப் போட்டுக் கொள்கிறோம் என்று மறைமுகமாக பேசி முடிவெடுத்து கொண்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது!
உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகளான மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மதுரை மாநகர கமிஷனர் அவர்களும் இவ்வாறு கவனக்குறைவாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

குறிப்பு : நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் இன்று (22/05/2020) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

நகல்
1) மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள்

2) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு

முதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

23.05.2020

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழக அரசு- சென்னை
அன்புடையீர் வணக்கம்,
பொருள் : கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் நாட்டில் பல்வேறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றார்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோவில்களை மையமாக வைத்து பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
கடந்த 60 நாட்களாக ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் திருவிழாக்கள், கோவில் கொடை சமயத்தில் மூன்று நாட்கள் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என அந்தந்த ஊர்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, கும்மியாட்டம், இசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, பறையாட்டம், காவடியாட்டம், நாட்டுக்கூத்து கிராமிய நடன நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு கலைஞர்கள் (தப்பாட்டம், மேளம் அடிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், சின்ன சின்ன கலைகள்) மூலம் அன்றாட வருமானம் பார்த்து வந்தார்கள்.
கடந்த இரண்டு மாத காலமாக இந்த திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தினால் இந்த கலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அன்றாட உணவுக்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லை.
இந்த லட்சக்கணக்கான கிராமிய கலைஞர்களுக்கு அரசு உடனடியாக தலா ₹5000, அரிசி-பருப்பு, அத்தியாவசியப் பொருட்களும் உடனே வழங்கி கிராமியக் கலைஞர்களின் சிரமங்களைப் போக்க உதவி செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுகொள்கிறேன் .
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநில தலைவர்
இந்து முன்னணி

முதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்
இந்து முன்னணி பேரியக்கத்துடன் இணைக்கப்பட்டது.
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600 002. தொலைபேசி : 044 28457676, 9841769852

த. மனோகரன்
மாநில தலைவர்

மாண்புமிகு தமிழக முதல்வர்
உயர்திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,வணக்கம்.

பொருள்: ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க அனுமதி அளிப்பது வேண்டி.

தங்களின் தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் கொரானா நோய் தொற்றின் பாதிப்பை குறைக்க பலவிதமான வழிமுறைகளை கையாண்டதின் விளைவாக, தமிழகத்திலும், பாரதத்திலும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அரசு, பலவிதமான நிவாரண உதவிகள் செய்து வந்தாலும், பல லட்சம் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடரும் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். தாங்கள் அளித்த நிவாரண உதவிகள் கிடைத்தாலும், ஆட்டோ பராமரிப்பு, அதற்குரிய தவணை தொகை மற்றும் குடும்ப செலவினங்கள் ஆகியன தொழிலாளர்களை பெரும் கவலை கொள்ள வைக்கிறது.

எனவே, ஆட்டோ இயங்குவதற்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் வழிகாட்டுதலுக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறுகிறோம்.
நன்றி,

என்றும் தேசியப் பணியில்
த. மனோகரன்
மாநிலத் தலைவர்

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறப்பு சலுகையா?? இந்து முன்னணி கண்டனம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள்.

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் அந்த வைரஸ் பரவுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது வெளிநாடுகளில் இருந்து அந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள (சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசா மூலம்) வந்த நபர்கள் தான். அவ்வாறு சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து திட்டமிட்டு இந்த கொடிய நோயைப் பரப்பியவர்களுக்கு, அவர்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக சிறையில் கூட அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது வெட்கத்திற்கும், வேதனைக்குரிய செயலாகும்.

ஈரோடு மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து (தாய்லாந்து) சட்ட விரோதமாக வந்து தங்கியிருந்த இஸ்லாமியர்களை சில நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் (தாய்லாந்து நீதிமன்றமும் இவர்களை கொரானா தொற்று முடியும் வரை அங்கேயே சிறையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது) அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீவிரவாதிகளுக்கு (சட்டவிரோதமாக சுற்றுலா விசா மூலம் வந்து மதப்பிரச்சாரம் செய்பவர்களும் நோய்த்தொற்று ஏற்படுத்துபவரும் தீவிரவாதிகள் தான்) சிறையில் ரம்ஜான் தொழுகை செய்வதற்கு ( கொண்டாடுவதற்கு) சிறப்பு ஏற்பாடு சிறப்பு உணவு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

ஒரு நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களுக்கு சலுகைகள் வழங்குவது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத மிகப்பெரும் அதிசயமாகும். தேசப் பாதுகாப்பிற்கு முறையாக செயல்படாத‌ ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக இந்து முன்னணி கண்டிக்கிறது.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ! பாலிமர் தொலைக்காட்சி மிரட்டும் மத அடிப்படைவாத கும்பலை கைது செய்க – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கை

23.04.2020

தமிழ்நாட்டில் மிகக் குறைந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பாலிமர் செய்தி சேனல்.
எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் நடுநிலையோடும், நேர்மையாகவும் செய்திகளை பாலிமர் செய்தி தொலைக்காட்சி அளித்து வருகிறது.
இதன் விளைவாக தமிழ்நாட்டின் முதல் செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரானா தொற்று மிக அதிக அளவில் பரவுவதற்கு தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக இருந்ததையும்,மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்ததையும், தேவையான காலகட்டத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வு செய்தியை பாலிமர் தொலைக்காட்சி உடனுக்குடன் கொடுத்து வந்தது.

எதையும் மதரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து பழகிப்போன தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் எப்படியாவது பாலிமர் தொலைக்காட்சியை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நிர்வாகத்தை மிரட்ட துவங்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் இன்னொசெண்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்தையும், விஸ்வரூபம் போன்ற திரைப்படைத்தையும் எதிர்த்து எதுபோன்ற மிரட்டல்களை விடுத்தார்களோ அதே பாணியில் தற்போது அதன் தலைமை செய்தியாளர் வேல்ராஜ், மற்றும் அவர் சார்ந்த பாலிமர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

உண்மை செய்தியை வெளியிட்டதற்காக ஒரு செய்தி தொலைக்காட்சியை குறிவைத்து மதவெறி கும்பல் நடத்தும் இந்தத் தாக்குதலை எந்த அரசியல் கட்சியும் கண்டிக்க முன்வராதது அவர்களின் தரம் தாழ்ந்த ஓட்டு அரசியலை காட்டுகிறது.

எதற்கெடுத்தாலும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் இடதுசாரி அமைப்பினர் கருத்து சுதந்திரத்திற்கு சவால் விடும் பாசிச சக்திகளை கண்டிக்க முன் வராதது ஏன்? என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.

குறிப்பிட்ட மதத்தினர் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அரசியல் கட்சிகள் செயல்படுவது நியாயம்தானா?

ஊடகத் துறையைச் சார்ந்த சங்கங்கள் மூத்த ஊடகவியலாளர்கள் பாலிமர் தொலைக்காட்சியின் மீதான தாக்குதல்களை கண்டிக்காமல் இருந்தால் ஊடகத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மக்கள் நினைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக சங்கங்கள் பாலிமர் செய்தி சேனல் மீது தொடுக்கப்பட்ட இருக்கின்ற இந்தத் தாக்குதலைக் கண்டிக்க முன்வர வேண்டும்.

மிரட்டல் விடுத்த அந்தக் கும்பலின் மீது அந்த செய்தி தொலைக்காட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து மதவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தமிழக அரசு பாலிமர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மிரட்டலுக்கு உள்ளான தலைமை செய்தியாளர் திரு. வேல்ராஜ் அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

கொரோனா பரவக் காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து – மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்- திமுக தீர்மானத்திற்கு இந்துமுன்னணி பதில்

17.04.2020

சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

பத்திரிகை செய்தி

கொரானா நோய்த்தொற்றை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் தன்னலம் கருதாது சேவை புரிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் திரு.மு .க .ஸ்டாலின் காணொளி கூட்டம் நடத்தியதுடன், கொரானா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது வாக்கு வங்கி அரசியலாகும்.

திமுக கூட்டணி கட்சிகள் கொரானா தொற்றுநோய் துவங்கிய ஆரம்ப முதலே பொதுமக்களின் நலனை கருதாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், அறிக்கை விடுவதுமாக இருந்து வருகிறார்கள்.

அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் ஈன செயல்களில் ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தாதது ஏன்?

இவர்களின் பொறுப்பற்ற செய்கையினால் பாதிப்புக்குள்ளாகும் டாக்டர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் பற்றி சிந்திக்காமல் பிணத்தின் மீது அரசியல் செய்யும் திமுக வின் கேவலமான சிந்தனையை இந்துமுன்னணி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த – அரசு விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள், டாக்டர்கள் மீது எச்சில் துப்பியவர்கள்,
செவியர்களை அவமதித்தவர்கள், அம்மணமாக ஆடியவர்கள்,
வீட்டு சாப்பாட்டு கேட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள், சட்ட விரோதமாக வெளிநாட்டுக் காரர்களை அழைத்து வந்து மதப்பிரச்சாரம் செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கவேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

போலி ஆவணங்கள் தயார் செய்து 144 தடை உத்தரவை மீறிய இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் தலைமைச் செயலருக்கு கடிதம்

15/04/2020

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
தூத்துக்குடி.
9486482380

பெறுநர்
உயர்திரு தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
சென்னை
தமிழ்நாடு

ஐயா வணக்கம்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நேற்று அதிகாலை (14/04/2020) சென்னையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பஹிர்தின், அலிமுகமது, அப்துல் காதர் உட்பட 14 இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக விளாத்திகுளம் காமராஜர் நகர் சேக் உசேன் என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

புதூர் பகுதியில் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்கள் வந்த சொகுசு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 144 தடை உத்தரவை மீறி போலி ஆவணங்களை உபயோகித்து 14 பேர் விளாத்திகுளம் பகுதிக்கு வந்தது தெரியவந்தது.

உடனடியாக தகவல் கிடைக்கப் பெற்று தாசில்தார் ராஜ் குமார் அவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 14 பேரையும் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அரசை ஏமாற்றிய மேற்படி 14 நபர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வாகன ஓட்டுனர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்?

செங்கல்பட்டு மறைமலைநகர் பகுதியில் இருந்து விளாத்திகுளம் வரை செல்வதற்கான அரசு முத்திரையுடன் கூடிய (Transit permit for public sl.no 1076) போலி ஆவணங்கள் தயார் செய்த அப்துல் காதர் என்பவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்?

செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதி வரை (ஏறக்குறைய 500 கி.மீ) 144 தடையை மீறி பல மாவட்டங்களை கடந்து வர வேண்டிய சூழ்நிலையில் அத்தனை மாவட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் இருந்தும் எப்படி அவர்களால் அதைக் கடந்திருக்க முடிந்தது?

சட்டத்தை மீறுபவர்கள் சிறுபான்மையின மக்களாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று யாரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்களா? என்ற ஐயம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.

போலி ஆவணங்கள் தயார் செய்தது அவர்கள் ஒரு ஆதார் எண்ணையும் (8033 3785 4457) குறிப்பிட்டுள்ளார்கள். அந்த ஆதார் எண் உண்மையானதா என்று விசாரணை நடத்த வேண்டும்.

நேற்று முன்தினம் முசிறி அருகே டில்லி மாநாட்டிற்கு சென்றுவந்த ஒரு இஸ்லாமியர் போலியாக ஓரு இந்துவின் ஆதார் எண்ணை உபயோகப்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் போலி ஆவணத்தில் அரசு முத்திரையை (rubber stamp) பயன்படுத்தியிருக்கிறார்கள். லாக் டவுனில் (lockdown) அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவர்களால் இதற்காக எப்படி அதை தயார் செய்து இருக்க முடியும்?

இவர்கள் இந்த அரசு ரப்பர் ஸ்டாம்பை (Rubber stamp) தயார் செய்யும் மோசடியிலும் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற ஐயமும் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

மக்களின் இந்த ஐயங்களை போக்கி விரைந்து அந்த 14 நபர்கள் மீதும் தகுந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தாயகப் பணியில்

V.P.ஜெயக்குமார்
15/04/2020
பரமன்குறிச்சி

நகல்
1) உயர்திரு தமிழக DGP அவர்கள்
2) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள்
3) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்