#இந்துமுன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் #சசிக்குமார் கொலை நடந்து 5 மாதங்கள் ஆகியும் தமிழக #சிபிசிஐடி காவல்துறையால் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை.
சசிக்குமார் கொலைக்கு நீதி கேட்டு வழக்கை #CBI விசாரனைக்கு மாற்ற வலியுறித்தி ஏப்ரல் 16 அன்று தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களிள் மாபெரும் போராட்டம் நடத்துவது என இந்துமுன்னணி மாநில நிர்வாககுழு முடிவு செய்துள்ளது என மாநில தலைவர் காடேஸ்வரா #சுப்பிரமணியம் ஜி அறிவித்துள்ளார்.
Monthly Archives: March 2017
இராம கோபாலன் பத்திரிக்கை அறிக்கை – மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவமதிப்புக்கு கண்டனம்
இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
17-3-2017
பத்திரிகை அறிக்கை
தமிழ்நாட்டில் பரவி வரும் நக்ஸல் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு தான் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவமதிப்பு..
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படித்த சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். முத்துக்கிருஷ்ணனை இழந்த துக்கத்தில் இருந்த அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, வேண்டிய உதவிகளை செய்து, பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு வரும் வரை உடனிருந்து உதவியவர் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள்.
துக்க வீட்டில் கூட அரசியல் செய்வது அநாகரிகமான செயல். அதனைவிட துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் மீது நக்ஸல் பயங்கரவாதி சாலமன் என்பவன் செருப்பை வீசியிருக்கிறான். இடதுசாரி பயங்கரவாத அமைப்புகள், விடுதலை சிறுத்தை போன்ற அமைப்பினர் மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் போட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன.
மத்திய அரசுக்கு எதிராக மக்களை திசைத் திருப்ப திருவள்ளூரைச் சேர்ந்த சாலமன், சேலம் சென்று இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளான். அவன், இந்திய மக்கள் முன்னணி என்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற நக்ஸல் அமைப்பின் உறுப்பினன். திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற இந்துவிற்கு பிறந்த மதமாறிப் போனவன் தான் இந்த சாலமன்.
முத்துகிருஷ்ணனின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம். அதே சமயத்தில் நக்ஸல் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் போன்றவை இதனை அரசியலாக்க ஏன் துடிக்கின்றன?
இதே நக்ஸல் அமைப்புதான் விழுப்புரத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். படையில் வேலை பார்த்த சங்கரை கொன்றது. இடதுசாரி பயங்கரவாத அமைப்பான நக்ஸல் இயக்கத்தினர் தமிழனை கொன்றதை எந்த கட்சியும் கண்டிக்கவில்லை?!
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியில் ஆளும் கட்சியின் ஒரே எம்.பி.யான இவர் மத்திய அமைச்சராகி, தமிழகத்தின் நலனில் கவனம் செலுத்தி பல சாதனை படைத்து வருகிறார்.
இதனை எல்லாம் மறந்து, அநாகரிக செயலை அரங்கேற்றியிருக்கின்றனர் பிரிவினைவாதிகள். இடதுசாரி பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட விஷயம் கிடைக்காதா என அலைகிறார்கள்.
பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொண்ட இடதுசாரி பயங்கரவாதியின் செயலை அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இடதுசாரி பயங்கரவாதம் தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது என்று இந்து முன்னணி மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கிறது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து இடதுசாரி பயங்கரவாத்தை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
செங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன்
காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள அழகு சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட மகா சக்தி பொன்னியம்மன்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாள் மலை மீது ஆண்டுதோறும் கண்ணபிரான் உற்சவம் நடைபெற்று வருகிறது. மலை மீது பெருமாளின் திருமண் இட்டு இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.
இக்கோயில் மலை அழகுசமுத்திரம் பஞ்சாயத்திற்கு சொந்தமானதென செங்கல்பட்டு நீதிமன்றத்தால் 18.10.1996இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இம்மலையில் சிலுவையை நட்டனர். உடனடியாக கிராம நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்குப்பட்டு, அது அகற்றப்பட்டது. 2006இல் மலையில் திடீரென்று சர்ச் கட்ட ஊரில் கலவரம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிரி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.
அச்சிரபாக்கம் பாதிரி ஜேக்கப், ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்வழியை கால்வாயை மூடி அதன் மீது சர்ச்க்கு அடிக்கல் நாட்டினார். திடீரென்று, 24.12.2016 இரவு பெருமாள் மலை முழுவதையும் ஆக்கிரமித்து வனத்துறையால் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை ஜெ.சி.பி. இயந்திரம் கொண்டு வேரோடு அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களான பொம்மைகளை அமைத்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள், இந்து முன்னணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டார். ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கடைசி பொம்மையை அகற்றவிடாமல் தடுத்துவிட்டார்.
இதனை எதிர்த்து தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் 4.3.2017 வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை பஜனை ஊர்வலத்தின் போது சோகண்டியை சார்ந்த கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பக்தர்கள் மீது மோதியதுடன், ஆயுதங்களால் தாக்கியும், சாமியை அவதூறாக பேசியும், மிரட்டினர். ஊர் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்குக் காரணமான மதமோதல்களை உருவாக்கி கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஜேக்கப் பாதிரியை விட்டுவிட்டது.
இதுபோன்ற தேசவிரோத, மதவெறி செயலைக் கண்டித்து இந்துக்கள் 6.3.2017 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 7.3.2017 பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கிராம மக்களிடம் தான் எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்திட நிர்பந்தித்துள்ளார். மீறினால், 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை அகற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோதமாக செயல்படும் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் மீது துறை ரீதியாலன நடவடிக்கை எடுக்கவும், கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், சிலுவையை நட்டு மலைகளை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ சதியை முறியடிக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)