Category Archives: நெல்லை கோட்டம்

தாணுலிங்க நாடார் நூற்றாண்டு நிறைவு விழா ரதயாத்திரைக்கு தடை

                     நீயும் உனது காவல் துறையும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் இங்கிருந்து போய்விடு, இந்துக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பதுன்னு எனக்கு தெரியும் என முதலமைச்சர் எம் ஜி ஆரிடம் தில்லாக கை நீட்டி சொன்னது யார் ? எப்போது ? ஏன் தெரியுமா ?

மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில்  முதலமைச்சராக இருந்தவர் எம் ஜி ஆர்…கலவரத்தை நிறுத்தும் விதமாக அவர்  சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை. அப்போது அக்கினி பிழம்பாக கொதித்து போனார் இந்துக்களின் காவலர் அய்யா தாணுலிங்க நாடார் …

நான் முதலமைச்சர் என்றும் தெரிந்தும் இந்து மக்கள் பாதுகாப்புக்காக நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேராக என்னோட வாதிட்ட தாணுலிங்கம்  ,சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு ,மொழி எல்லை போரில் தலைமை தாங்கி.MPயாக ,
MLA வாக ,எதிர்கட்சி தலைவராக இருந்த மாவீரர்  என்பதை இப்போது அறிந்தேன் என்னுடன் மோதியது எனக்கு  இணையான தலைவரே  பெருமை  படுகிறேன் என்று தமிழக சட்டமன்றத்தில் பதிவுசெய்தவர் முதலமைச்சர் எம்ஜிஆர்.

பொதுமேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபொது  படியே  என்னை இறைவன் அழைக்கிறான் என்று சொல்லி உயிர் விட்டார் அய்யா தாணுலிங்க நாடார் (தன் இறப்பை தானேஅறிவித்தவர் ) .  புண்ணியம் செய்த உயிர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலோகம் செல்லும் என்றும் பெரியவர்கள் சொல்லுவர்கள்.
தன் இறுதி மூச்சு வரை இந்துக்களுக்காக் போராடியவர்.

அப்படி பட்ட மாவீரரின் நூற்றாண்டு நிறைவுவிழா ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்த  இந்து இயக்க தலைவர்களையும் 800 க்கும் மேற்பட்ட இந்துக்களையும் கைது செய்ததை கண்டித்து

இன்று 27/01/2016 புதன்கிழமை  மாலை 4.00 மணிக்கு
மாவட்ட ஆட்சியாளர்  அலுவலகம் , நாகா்கோவில்,
முன்பு வைத்து தமிழக அரசையும் தடை ஏற்படுத்திய  காவல்துறையையும் கண்டித்து சங்கபரிபார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து இந்துமுன்னணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்துமுன்னணி முதல் மாநிலதலைவர் ஐயா.தாணுலிங்கநாடார்  கநாடார் நூற்றாண்டுநிறைவுவிழா  ரதயாத்திரை தடுத்துநிறுத்தி  800-யஅது மேற்பட்ட இந்து இயக்க தலைவர்களையும் பொதுமக்களையும் கைது செய்த காவல் துறையை கண்டித்து மாவட்ட அளவிலான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4மணிக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு வைத்து நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்தை விளக்கி இந்து இயக்க தலைவர்கள்  இந்துமுன்னணி மாவட்ட தலைவர் மிசா.சோமன் , மாநிலதலைவர் டாக்டர்.அரசுராஜா ஆகியோர் கண்டனஉரையாற்றினர்கள்.ஆர்பாட்டத்தில் 900-ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியாளரை  சந்தித்து மனு கொடுக்கபட்டது மனுவில்
1.திட்டமிட்டபடி ரதயாத்திரை நடத்துவோம்
2.ரதயாத்திரை தடுத்தால் அணைத்து ஒன்றியத்திலும் ஆர்ப்பாட்டம் ,மறியல்,அதையும் மீறி கைதாகவும் தயார் .
3.அதற்கும் ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் பந்த் நடைபெறும் என்று குறிப்பிடபட்டுள்ளது.

image

ஏர்வாடி பாகிஸ்தானா ?

ஏர்வாடி – பாகிஸ்தானா ??

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா    ஏர்வாடியில் உள்ள LNS புரம் என்ற இடத்தில் வைத்த விநாயகர் சிலையை முஸ்லிம்களின் மிரட்டலுக்கு பயந்து நாங்குநேரி DSP அவர்கள் கோவிலுக்குள் ஷீ (செறுப்பு) காலுடன் சென்று விநாயகர் சிலையை அகற்றினார்.

மேற்படி அதிகாரியின் இச்செயல் இந்து க்களின் மனதை புண் படுத்தும் விதமாகவும் இந்து தெய்வத்தை இழிவு படுத்தும் விதமாக உள்ளது மேற்படி அதிகாரியை கண்டிக்கும் வகையில் மாலை முதல் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிருப்பு  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து நமது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.

ஆயினும் விநாயகர் திருமேனியை திரும்பத் தரும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என மக்கள் முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து ஏர்வாடி உள்ளிருப்பு  உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் டாக்டர் .அரசுராஜா அவர்கள் நேரில் வந்து அப்பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நாங்கள் எங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ள மாட்டோம் என உறுதி அளித்தனர்.

போராட்டம் தொடர்வதால் பதட்டம் நீடிக்கிறது.

image

image

சதுர்த்தி ஆலோசனை கூட்டம் – நாகர்கோவில்

குமரி மாவட்டம் நாகர்கோவில் நகர இந்துமுன்னணி விநாயகர்சதுர்த்தி விழா 5வது ஆலோசனைகூட்டம்  பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

image

மண்டலப் பொதுக்குழு – மார்ச் 8 – (தெற்கு மாவட்டங்கள்)

நெல்லை,குமரி உள்ளிட்ட தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களுக்கான மண்டலப்  பொதுக்குழு  மார்ச் 8 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கையில் நடைபெறும்

.siva3.jpg

அரசுப்பள்ளியில் மதமாற்றம்

அரசுப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதமாற்றம். பச்சிளம் குழந்தைகளிடத்திலும் பைபிள்.

நெல்லை, சங்கரன்கோயில் ,கரிசல்குளம் வட்டம் குருவிக்குளம் யூனியன் கற்படம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெறும் கிறிஸ்தவ மதமாற்றம். தலைமை ஆசிரியயை அமலி  அன்னாள் செய்துவரும் கிறிஸ்தவ ஊழியம். நடவடிக்கை கோரி இந்துமுன்னணி கல்வித்துறையில் மனு….

DSC_0198DSC_0201

கோபால் ஜி பிறந்த நாள்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து முன்னணி சாா்பாக வீரதுறவீ ஜயா. இராமா.கோபாலன் அவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின் பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டதுIMG-20141015-WA0052IMG-20141015-WA0055

இராம.கோபாலன் ஜி 88வது பிறந்தநாள்

இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா இராம.கோபாலன் ஜி

88வது பிறந்தநாள் முன்னிட்டு

நெல்லை மேற்கு மாவட்ட இந்துமுன்னணி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்

சுரன்டை பேருந்து நிலையம் முன்பு செல்வவிநாயகர் திருக்கோவில் சிறப்பு பூஜை நடைபெற்று ஆயிரகணக்கான பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது

IMG-20141016-WA0012

ஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி

தூத்துக்குடி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் 10.10.14 அன்று பள்ளி மாணவர்களுக்கான ஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி உடன்குடி- தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடைபெற்றது.

இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P. ஜெயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பொன்.பரமேஸ்வரன் ., திரு. சுடலைமுத்து.,நகர பொறுப்பாளர் திரு.சித்திரை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் திரு. நல்லசிவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திரு. ஜோதிமணி அவர்கள் மாணவர்களுக்கு  பரிசுகளை வழங்கினார் .

சுமார் 80 மாணவர்களுக்கு தரமான புத்தகப் பைகள்  வழங்கப்பட்டது.vpj(1)

இந்துக்களை இழிவுபடுத்தும் கிறிஸ்தவ மத போதகர்

தூத்துக்குடி குலசேகரபட்டினத்தில் ஆண்டுதோறும் நடை பெரும் தசரா     ( நவராத்திரிப் பண்டிகையை) மிகவும் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தும் வகையில், குரும்பூர் பகுதியில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்யும் மோகன்.C.லாசரஸ் என்ற பாதிரியின் பிரசாரக் கூட்டம் இத்தகைய வேலையை அப்பாதிரியின் உத்தரவின் பேரில் வழங்கியுள்ளது.

இந்துமுன்னணி மானிலத்த தலைவர் திரு. V. P. ஜெயகுமார் தலைமையில் இது பற்றி ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும்  இதுவரை எவ்வித நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து நாளை (20.09.14) அன்று இந்துமுன்னணி இயக்கத்தின் சார்பில் மாபெரு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

கிறித்தவ பாதிரிகளின் அட்டூழிய, அநியாயங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுவருவதையும், அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையையும், அரசையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை கேவலப்படுத்துகின்றவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டுமென  கேட்டுக்கொள்கிறது. scan 2scan 1scan 3

ஊர் பெயரை கிறிஸ்தவ பெயராக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா தோட்டாவிளை என்ற ஊர் பெயரினை அலெக்ஸ் என்ற கிறிஸ்தவர் தோட்டாகுளம் என்ற மாற்ற முயற்சி ….

ராதா