பிப்ரவரி மாதம் 17 ம் தேதி இந்துமுன்னணி முதல் மாநிலதலைவர் ஐயா.தாணுலிங்கநாடார் பிறந்த தினம். அதை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் கிளைக்கமிட்டிகள் வாரியாக சமுதாய சமர்ப்பண தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஐயா பிறந்த நூற்றாண்டு விழா நிறைவு விழா நடைபெறவுள்ளதால் , அனைவரும் சமுதாய சமர்ப்பண தினத்தை சிறப்பாக நடத்த வேண்டும். ….
தாணு லிங்க நாடார்
வாழ்கைத் துளிகள்
17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.
இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.
1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.
1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.
1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்
1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.
1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.
1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.
1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.
14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.
1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.
1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.
13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.
1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
3-10-1988 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.
Monthly Archives: February 2016
இந்து பெண்கள் பாதுகாப்பு மையம் – துவக்கம்
இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம் – துவக்கினார் வீரத்துறவி
தமிழகத்தில் இந்துப் பெண்களை மனம் மாற்றி, மணம் புரிந்து மதமாற்றம் செய்யும் தீய சக்திகளை ஒடுக்க இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம் துவக்கப் பட்டுள்ளது. நமது பெண்கள் காக்கப்பட வேண்டும் , பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பெண்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இராம. கோபாலன்ஜி பத்திரிகை செய்தி
இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
16-2-2016
பத்திரிகை அறிக்கை
கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளும் அத்துமீறுகின்றன. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்ற சனிக்கிழமை(13.2.2016) அன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் முன்பு தவ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோயிலுக்கு வழிபட வந்த பக்தர்களிடம் கையில் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலமும், `மனிதனுக்கேற்ற மார்க்கம்’ என்று நூலை இலவசமாகக் கொடுத்தும் இஸ்லாமிய மதப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். `நீங்கள் கோயில் முன்பு மதப்பிரச்சாரம் செய்வது நியாயமா? இதுபோல் மசூதிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருபவர்களிடம் செய்தால் ஏற்பீர்களா?’ என்று அவர்களிடம் பேசிய வயதான இந்துப் பெண்மணி கேட்டதற்கு, `ஓ செய்யலாமே!’ என்று கூறியுள்ளனர்.
ஒரு வாதத்திற்கு இதனை ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். திருவல்லிக்கேணி மசூதி முன்பு இந்துக்கள் மதப் பிரச்சாரம் செய்வதை அந்த மசூதியைச் சேர்ந்தவர்கள் ஏற்கிறார்களா? என்பது தெரிய வேண்டும். அப்படி ஏற்பதாக இருந்தால் ஏன் மசூதி வழியே பொது சாலையில் விநாயகர் ஊர்வலம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
கோயில் வாசலில் வந்து மதப்பிரச்சாரம் செய்வதை கண்டுகொள்ளாத காவல்துறை, மசூதி வழியே பொது வீதியில் ஊர்வலம் செல்வதற்குக்கூட தடைவிதிப்பது எந்தவிதத்தில் நியாயம்?
இந்துக்களின் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. கிறிஸ்தவர்கள் மதப் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதை காவல்துறை நன்கு அறியும். இந்நிலையில் முஸ்லீம் அமைப்புகள் மதப்பிரசுரம் தருவது, மதமாற்ற வேலையில் ஈடுபடுவது மேலும் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறோம்.
அரசியல் சாசனம், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த மதத்தை பின்பற்றவும், அவர்கள் மதத்தினரிடையே பரப்பவும் உரிமை அளிக்கிறது. ஒருவர் மற்ற மதத்தினரிடையே போய் பிரச்சாரம் செய்ய எந்த அதிகாரமும் யாருக்கும் வழங்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது சட்டத்திற்கு புறம்பான செயல்.
மதப்பிரச்சாரம், மதமாற்றம் என்பது நாடு பிடிக்கும் அன்னிய சக்திகளின் சதி. இதற்கு வெளிநாட்டினரின் நிதி உதவியே காரணமாக உள்ளது என்பதே அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தவ்ஹீத் ஜமாத் திருச்சியில் நடத்தியது. அல்லாவிற்கு இணை கற்பிக்க கூடாது என்று, இந்து கடவுள்கள் திருவுருவங்களைப் போட்டு நீக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தனர். தவ்ஹீத் ஜமாத் முக நூலிலும், தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாலையில் வைத்த பேனர்களிலும் இந்துக்களின் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி, அதனை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று வெளியிட்டிருந்தார்கள். அது சம்பந்தமாக இந்து முன்னணி சார்பில் காவல்துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டது. காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஷிரிக் ஒழிப்பு என்பது உலக அளவில் பயங்கரவாதத்தை வளர்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொள்கை, அதன் ஒரு செயல்பாடு, திட்டம். இதனைத் தான் தவ்ஹீத் ஜமாத் செயல்படுத்துகிறது.
தமிழகத்தில் உள்ள புராதான கோயில்களுக்குப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை மத்திய அரசின் புலனாய்வுத் துறையால் சென்ற மாதத்தில் கூட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பழம்பெருமை வாய்ந்த கோயில்கள் முன்பு மதப்பிரச்சாரம் செய்வதை காணும் போது, இவர்களின் நோக்கம் மதமாற்றமும், புராதான கோயில்களை அழிப்பதற்கான நோட்டமாகவும் இருக்கலாம் என தமிழக காவல்துறைக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் மக்கள் விழிப்புடன் செயல்பட்டு, பயங்கரவாதத்தையும், மதமாற்ற மோசடிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் செயலிழந்து நிற்கும் நிலையில் மக்கள் சக்தியால் மட்டுமே தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள இயலும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)