Tag Archives: இந்துமுன்னணி

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா? மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை

27.11.2020

வி.பி. ஜெயக்குமார்
மாநிலத் துணைத் தலைவர், இந்து முன்னணி
தொலைபேசி: 04639-232240,

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா?
கடலோர காவல்படை, மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு துறை ஆகியன கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது..

நவம்பர் 26 மும்பை கடல் பகுதி வழியாக நுழைந்த, பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 8 இடங்களில் நடத்திய தாக்குதலில் 164பேர் உயிரிழந்தனர். அதே நாளான நேற்று தூத்துக்குடியில் 30 டன் ஹெராயின் போதைப்பொருள், 5 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

கடந்த சில நாட்கள் முன்பு இராமநாதபுரம் பெரிய பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், ரகசிய பயிற்சி முகாம் நடத்தியுள்ளனர். அதில் 32 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் சுமார் 130 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகாமும் காவல்துறைக்குத் தெரியாமல் நடந்துள்ளது.

அமரர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழக கடலோர பகுதிகள் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். மத்திய, மாநில அரசுகள் கடலோர காவல்படையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று மும்பை தாக்குதலுக்கு முன்பே எச்சரித்தார். இன்று அவரது தீர்க்க தரிசனத்தை நாம் உணர்கிறோம்.

கடந்த ஜனவரி மாதம், கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வில்சனை, முஸ்லீம்கள் இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்டவிரோத, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை சிறைச்சாலைகளில் அடைக்கும்போது, அவர்களை சந்திக்க வருபவர்களையும், வழக்கு விசாரணையில் பயங்கரவாதிகளுக்குத் துணைபுரிபவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் பாதுகாப்பில் மத்திய, மாநில அரசு புலானய்வுத் துறையும், கடலோர காவல்படையும் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுத்து தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
வி.பி. ஜெயக்குமார்,
மாநிலத் துணைத் தலைவர்

ஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்

25.11.2020

கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூர் மங்கலம் பகுதியில் CAA மற்றும் NRC சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர் .
சிறப்பு பேச்சாளர்களை வெளியூரில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

அவர்கள் போராட்டம் என்ற பெயரில் இந்து மத கடவுள்களையும், இந்து மத பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை கொச்சை படுத்தி தொடர்ந்து பேசினார்கள் .

இதைத் கண்டு பொதுமக்கள் வெகுண்டெழுந்து CAA மற்றும் NRC ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டத்தை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் நடத்தினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர் .

இது இஸ்லாமியர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது . கூட்டம் முடிந்து மக்கள் திரும்பி செல்லும் வழிகளை மறைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்கள் இஸ்லாமியர்களின் உண்மை முகத்தை அறிந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்து எண்ணிக்கை காண்பித்தால் மட்டும் இந்த பிரச்சினை ஓயாது என்பதை புரிந்து கொண்டனர்.

வியாபார தலைமை நம்மிடம் இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

பொருளாதார ரீதியாக இஸ்லாமியர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, அவர்களின் போராட்டத்திற்கு நிதியுதவி செய்த இஸ்லாமிய வியாபார நிறுவனங்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக இந்துஸ்தான் என்ற பெயரில் கூட்டு வியாபார நிறுவனங்கள் துவங்கினர்.

ஹிந்துஸ்தான் கால்நடை தீவனக் கடை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது .

இதை அடுத்து வேலாயுதசாமி சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் ஹிந்துஸ்தான் ஹோட்டல் மற்றும் பேக்கரி திறப்பு விழா நடைபெற உள்ளது.

இதை அடுத்து ஹிந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் விரைவில் துவங்கப்பட உள்ளது .

ஒருங்கிணைந்த இந்து சக்தியின் வெளிப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதற்கு
திருப்பூர் மங்கலம் பகுதி நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்

18.11.2020

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவைப் போற்றுவோம்..
சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம், பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு
`பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்டிட
இந்து முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

செக்கிழுத்த செம்மல், சுதேசி கப்பல் ஓட்டி, வெள்ளைக்கார கிறிஸ்தவர்களை நடுங்க வைத்த சுதந்திர போராட்ட சிங்கம் வ.உ.சிதம்பரனார் 84வது நினைவு தினம் இன்று. தியாகி வ.உ.சிதம்பரனார் தனது கடைசி காலத்தில் சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்தார். அவரது 84வது நினைவு தினத்தை முன்னிட்டு, அப்பகுயில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இந்து முன்னணி சார்பில், எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து, நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட இருக்கின்ற மெட்ரோ ரயில் திட்டத்தில், வ.உ.சி. அவர்கள் பெரம்பூர் பகுதியில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம், `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ ரயில் நிலையம்’ என பெயர் சூட்டிட சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நாடு சுதந்திரம் அடைய தனது சொத்து, சுகங்களை இழந்து தனது முதுமையில் வறுமையில் வாடிய பொழுதும் கலங்காத உள்ளத்தோடு இருந்தவர் வ.உ.சி. நாடு சுயசார்புடன் முன்னேற சுதேசி சிந்தனை அவசியம் என பாரத பிரதமரால் சுட்டிக்காட்டப்படுகிறது. அத்தகைய சுதேசி உணர்வால், ஆங்கிலேய வெள்ளையனுக்கு எதிராக சுதேசி கப்பல் இரண்டை வாங்கி செலுத்தியவர் வ.உ.சி.

இந்து முன்னணி சார்பில் இன்று, தமிழகம் முழுவதும் வ.உ.சி. திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, அவரது நினைவு போற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(த. மனோகரன்)
மாநில செயலாளர்

ராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியை ராக்கெட் ஏவு தளம் அமைக்க விண்வெளி விஞ்ஞானிகள் தேர்வு செய்து உள்ளனர்.

பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் உள்ளதால் ராக்கெட் எரிபொருளும் மிக குறைந்த அளவு தேவை ஆகையால் தான் குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்துள்ளோம் என்று தலைமை விஞ்ஞானி பத்திரிக்கைக்கையார் சந்திப்பில் கூறியுள்ளார்.

சாத்தான்குளம், திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் தற்போது இல்லை.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம் அமைந்தால் இந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது…

தற்போது தெலுங்கானா கவர்னராக இருக்கும் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்த போது குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்க தொடர்ந்து பாரத மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் 2019 வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பாரத பிரதமர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் அந்த கடிதத்தில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைத்தால் நாடு பலனடையும் என மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம் தொடர்பாக திருமதி.சசிகலா புஷ்பா MP எழுப்பிய கேள்விக்கு விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் பதிலளித்தார்.

அதன்பின் 2019ல நிலம் தேர்வு செய்து அந்த நிலத்தை எடுப்பதற்காக மத்திய அரசு மாநில அரசுக்கு பரிந்துரை செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக களத்தில் இறங்கி இடம் ஆய்வுசெய்து இடத்தை தேர்வு செய்து இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தாகிவிட்டது.

ஆனால் இப்போது மக்களை தூண்டிவிட்டு அதுவும் அப்பாவி மீனவ மக்களை தூண்டிவிட்டு தங்கள் சுயலாபத்திற்காக இந்த திட்டத்தை தடுக்க நினைக்கின்றனர்..

மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் அரசு உயரதிகாரிகள் அவர்களும் எக்காரணம் கொண்டும் மணப்பாடு மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மணப்பாடு ஊருக்கு செல்ல கூடாது. தேச வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி குந்தகம் விளைவிக்கும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

மேலும் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் ஓட்டுக்காக சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் அப்பாவி மினவர்களை‌ பகடைக் காயாக பயன்படுத்தி இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றார்.

2019 ஆண்டு ராக்கெட் ஏவு தளம் அமைக்க ஆதரவளித்த திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தற்போது இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருவது அவரின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது…

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டாலும்,கொலை நடந்தாலும், விபத்து ஏற்பட்டு இறந்தாலும், அதனை காரணமாக வைத்து பிண அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ராக்கெட் ஏவு தளம் விஷயத்தில் மௌனமாக இருப்பது ஏன்???

வி.பி.ஜெயக்குமார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்,
ராக்கெட் ஏவு தளம் ஆதரவு குழு தலைவர்,
பரமன்குறிச்சி

வெற்றிவேல் யாத்திரைக்கு தடை – தமிழக அரசின் பாரபட்ச நடவடிக்கைக்கு கண்டனம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

06.11.2020

தமிழகத்தில் தொடர்ந்து இந்து கடவுளை இழிவு படுத்தும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கறுப்பர் கூட்டம் மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், நமது பண்பாடு, பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்பதை முன்னிருத்தியும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று முதல் அதன் தமிழக தலைவர் திரு எல்.முருகன் அவர்கள் வெற்றிவேல் யாத்திரையை திருத்தணியில் இருந்து துவங்கி தமிழகம் முழுவதும் செல்ல இருந்த நிலையில், இன்று தமிழக அரசு இந்த யாத்திரையை தடை செய்து திரு.எல்.முருகன் உட்பட ஆயிரக்கணக்கான பேர்களை கைது செய்துள்ளது.

இந்த பாரபட்ச போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழகத்தில் தி.மு. க சார்பில் உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையை காட்டி மகளிர் அணி தலைவி கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிமுறையை பின்பற்றாமல் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றார்கள்.

கோவையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கொரோனா வழிமுறையை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அவர்களைத் தடுக்காமல் நல்ல நோக்கத்துக்காக ஒரு ஆன்மீக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட யாத்திரையை அரசு தடுப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு இடம் கொடுக்காமல், பாரபட்சம் பார்க்காமல் யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நன்றி வணக்கம்
தாயகப் பணியில்



காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

சமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்

14.10.2020

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் திருமங்கலங்குறிச்சி‌ ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைகுளம் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையில் (ஆடு சம்பந்தமாக) பிரச்சனை எனத் தகவல் வந்தது .

இந்தத் தகவல் கிடைத்ததும் சந்தர்ப்ப வாத அரசியல் கட்சிகளும், ஜாதிக் கட்சி தலைவர்களும் பிரச்சினையை ஊதி பெரிதாக்கி ஆதாயமடைய நினைத்தனர்
ஊடகங்களும் தங்கள் பங்குக்கு அதில் விளம்பர விளையாட்டை நடத்தினர்.

பிரச்சினை என்றால் இரு தரப்பையும் சந்தித்து பேசி அதை சீர் செய்ய வேண்டும். ஆனால் வந்த அரசியல்வாதிகள் உட்பட அத்தனை பேரும் தங்களுக்கு எது ஆதாயமோ அதை மட்டுமே செய்தனர்.

இந்நிலையில் இதில் உண்மை என்ன என்பதை கண்டு அறிய இந்துமுன்னணி தீர்மானித்தது.

இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P.ஜெயக்குமார் அவர்கள் உண்மை நிலவரம் கண்டறிய நேரில் சென்றார்.

பாதிக்கப்பட்டவர் பால்ராஜ் என்பவர் . அவரது மகன் கருப்பசாமி.

தகப்பனார் அங்கு இல்லாத காரணத்தால் மகன் கருப்பசாமியிடம் பேசினோம்.

“எங்கள் ஊரில் கோவில் கொடை , விழா மற்றும் சுடுகாடு அனைத்தும் ஒன்றுதான்.
சாதி மற்றும் அரசியல் கட்சிக் கொடிகள் ஊரில் கிடையாது”, என்றார்.

ஊராட்சி மன்றத் தலைவர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

பாதிக்கப்பட்ட பால்ராஜ் அவர்களின் அண்ணன் திரு.தங்கபாண்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர்.

இரண்டு‌ பேரையும் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் சந்தித்தோம். அவர்கள் ,”இந்த சம்பவம் எங்க ஊருக்கு ஒரு திருஷ்டி” எனக் கூறினார்கள்.

இந்த பிரச்சினையை இத்துடன் ‌முடிவுக்கு கொண்டு வருவதுடன், இதுபோல சம்பவம் இனி எங்கள் பகுதியில் நடை பெறாது என்று உறுதி படக் கூறினார்கள்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் பேசிய போது, “எங்கள் வீட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் சொந்த வீட்டிற்கு வந்து செல்வது போல் வருவார்கள்.இன்றும் எங்கள் வீட்டு தோட்டத்தில் பத்துபேர் வேலை செய்கின்றார்கள்.
எவ்வித மன பேதமும் இல்லாமல் ஒற்றுமையாக உள்ளதாக” ஊராட்சி மன்ற தலைவர் மனைவி அவர்கள் கூறிய விதம் எங்களுக்கு நல்ல நம்பிக்கை கொடுத்தது.

ஒன்றாகக் கூடிவாழும் மக்களிடம் திட்டமிட்டு பிரிவினை உருவாக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் சுயநல முகத்தை உணர்த்திவிட்டு எக்காலத்திலும் இந்துக்கள் பிரியக்கூடாது. ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை கூறி, இந்துமுன்னணி என்றும் உடனிருக்கும் என்ற உறுதிமொழி அளித்து வந்தனர் பொறுப்பாளர்கள்.

இந்து முன்னணி சார்பில் பார்வையிட்டு பேசவந்த இந்து முன்னணி மாநில துணைத் தலைவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி,
ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் T.K.R.ராமச்சந்திரன் உடன் சென்றனர்.

இந்துக்களின் நலன் காக்கும் பணியில் என்றும் இந்துமுன்னணி முன்னணியில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு இது.

கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்

15.10.2020

தமிழகத்தில் காவல்துறை சிறுபான்மையினரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் அவலம் தொடர்ந்து நடக்கிறது.

சமூக வளைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும், இந்து சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியதன் பேரில் கொடுத்த புகாரை வாங்கி வைத்துக்கொண்டு, காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஆனால், முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாட்டை கேலிச்சித்திரமாக வரைந்த திரு. வர்மா என்பவரை கைது செய்கிறது காவல்துறை.

தமிழகத்தில் இந்துக்களுக்கு மட்டும் கருத்துரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

இந்துக்களை கேவலப்படுத்தியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய திராவிடர் கழக வீரமணி, கிறிஸ்தவ பாதிரிகள் மோகன் சி. லாசரஸ், எஸ்றா சர்குணம், தடா ரஹீம் போன்ற பலர் மீது தொடுத்த வழக்கை விசாரணை அளவில்கூட எடுக்காத காவல்துறை, இன்று (15.10.2020) விடியற்காலை கார்டூனிஸ்ட் வர்மாவை மீண்டும் கைது செய்துள்ளது.

கோவையில் ஈவிரக்கமற்ற வகையில் குண்டு வைத்து, பல நூறு பேர் உடல் சிதறி இறக்கவும், பல நூறு பேர் உடல் ஊனமாகி நடைபிணமாக வாழவும், காரணமான இஸ்லாமிய மதவெறியன் பாஷாவை விடுதலை செய்ய வலியுறுத்தி போஸ்டர் போடும் அளவிற்கு தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இருக்கிறது.

சென்னை புழல் முதல் கோவை சிறை வரை சிறைத் துறை அதிகாரிகளை இஸ்லாமியர்கள் தாக்கியதை நியாயப்படுத்தவும், பொதுத் தளத்தில் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தவும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. இங்கெல்லாம் காவல்துறை முணுமுணுக்கக்கூடவில்லை.

கறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் மீண்டும் இந்து சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை எதிர்த்து புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்ததன் மூலம், தைரியமாக கருத்து தெரிவிக்கும் இந்துக்களை முடக்க நினைக்கிறது காவல்துறை. இது ஜனநாய விரோதமானது. கருத்துத் தெரிவிப்பதை தடுக்க நினைக்கும் காவல்துறையின் செயல்பாட்டை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக கார்டூனிஸ்ட் வர்மாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்



T.மனோகர்

மாநில செயலாளர்


மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

13.10.2020

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயார் தவசாயி அம்மாள், கடந்த ஒரு வாரகாலமாக சேலம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு 1.30 மணியளவில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தோம்.

தாயாரை இழந்து வாடும் தமிழக முதலமைச்சருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தவசாயி அம்மாள் அவர்கள் ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

30.09.2020

இந்துமுன்னணி பேரியக்கத்தின் நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரை நோய் தாக்கத்திலிருந்து மீட்க கடந்த இரு தினங்களாக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

இயல்பிலேயே போர்க் குணமிக்கவர் கோபால் ஜி. 1984 ல் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மறு அவதாரம் எடுத்தவர்.

அந்த மனோதிடம் அவரை நிச்சயம் மீட்டு விடும் என்று நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இந்துமுன்னணி , RSS உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்களின் ஊழியர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இம்முறை அவரது வயது (94) காரணமாக சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.

வீரத்துறவி இராம கோபாலன் 19-9-1927 ல் தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர்.

1945ல் RSS – ல் சேர்ந்தார்.

டிப்ளமோ , ஏ.எம்.ஐ.ஈ. படித்து முடித்த பிறகு மின்சாரத் துறை வேலையை உதறிவிட்டு முழுநேர RSS தொண்டரானார் (பிரச்சாரக்).

RSS இயக்கத்தின் பிராந்த பிரச்சாரக் (மாநில அமைப்பாளர்) என்ற பொறுப்பு வரை படிப்படியாக தமிழகம் முழுவது RSS வேலைகள் வளரக் காரணமாக இருந்தவர்.

1948 ல் RSS தடை செய்யப்பட்ட போதும் , 1975 எமர்ஜென்சி நேரத்திலும் தமிழகத்தில் RSS பேரியக்கத்தை வழிநடத்தியவர்.

தமிழகத்தில் நிலவிய அசாதாரண இந்து விரோத சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1980 ம் ஆண்டு RSS ன் வழிகாட்டுதலில் இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி .

இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தமிழகத்தில் அவர் கால் படாத ஊர்களே கிடையாது.

1984- ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும் தலையிலும் பலத்த வெட்டு. தழும்பை மறைக்க அன்றிலிருந்து காவித் தொப்பியணிய ஆரம் பித்தார் .

ஆனால் இவை எல்லாம் அவரது தேசப் பணியை முடக்கவில்லை. பல மடங்கு உற்சாகத்துடன் இந்துமுன்னணி பேரியக்க கிளைகளை விதைத்தார்.

இன்று தமிழகம் முழுவதும் ஆல்போல் தழைத்து; அருகு போல இந்துமுன்னணி வேரோடியிருப்பதற்கு காரணம் கோபால் ஜி தான்.

அவர் வேறு, இயக்கம் வேறு அல்ல. இந்துமுன்னணி தான் கோபால் ஜி; கோபால் ஜி தான் இந்துமுன்னணி.

அவரைப் போலவே செயல்திறம் மிக்க , எதிர்பார்ப்பற்ற , தேசபக்தி கொண்ட எண்ணற்ற மாவீரர்களை, ஊழியர்களைக் கொண்ட இயக்கமாக இந்துமுன்னணி வளர்ந்திருக்கிறது.

தேசத்திற்காக, தர்மத்திற்காக தனது வாழ்வையே அர்பணமாக்கிக் கொண்டவர் கோபால் ஜி .

தனக்கென ஒரு வாழ்க்கை என்ற ஒன்று அவரிடத்தில் இல்லை. இயக்கமே அவரது வீடு. தொண்டர்களே அவரது உறவினர்கள் .

இத்தகைய மாபெரும் மகான் இன்று இல்லை. அவரது வாழ்வே நமக்கு பாதை.
இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி.

அவரவர் பகுதிகளில் வீர அஞ்சலி, மௌன அஞ்சலி நிகழ்ச்சி நடத்திடுவோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

திரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன்

25.09.2020

பத்திரிகை அறிக்கை

திரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு

இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. தனது வாழ்நாளில் திரைப்பட பாடல்கள், பக்தி இன்னிசை பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி.

திருஅண்ணாமலையாரை போற்றி அவர் பாடிய பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவியது. அதனை கேட்காத தமிழ் உள்ளங்களே இல்லை எனக் கூறலாம்.

பல விருதுகளை பெற்ற எஸ்.பி.பி. அவர்கள் 42 ஆயிரம் பாடல்கள் பாடி என்றும் மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார்.

எஸ்.பி.பி. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது திரை உலகம் மட்டுமல்லாது அனைத்து மக்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இதன் மூலம் அவர் மீது மக்கள் அனைவரும் வைத்திருந்த அன்பு வெளிப்பட்டது.

அன்னாரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.

நன்றி,

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,

(இராம கோபாலன்)

நிறுவன அமைப்பாளர்