Tag Archives: #Hindumunnani

விநாயகருக்கு தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகள் ! ‍ இந்து முன்னணி எச்சரிக்கை !

விநாயகர் சதுர்த்தி திருவிழாவன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள, மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று, காவல்துறை, ஒலிபெருக்கி அனுமதி, எந்த வயதினர் பங்கேற்க அனுமதி போன்ற‌ தமிழக அரசின் 24 கட்டுப்பாடுகளைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை 8மணி முதல் நடைபெற்று வருகிறது.

1000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன்,மாநிலச் செயலாளர் மனோகரன், மாநகர் தலைவர் இளங்கோ, மீனவர் சங்கத் தலைவர் இரா.அன்பழகனார், மண்பாண்ட தொழிலாளர் ஆணைய முன்னாள் தலைவர் சேம. நாராயணன் ஆகியோர் பங்கேற்று பேசி வருகின்றனர்.

வீரத்துறவி பத்திரிகை அறிக்கை – 35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமுதாய ஒற்றுமைப் பெருவிழா

பத்திரிகை அறிக்கை
35ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா..
சமுதாய ஒற்றுமைப் பெருவிழா..
வீட்டிலும், கோயில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதிர திலகர்.

அதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த மாபெரும் வெற்றிக்கு விநாயகர் பெருமானின் அருளும், மக்களின் ஆதரவும் தான் காரணம். இந்த ஆண்டு, இவ்விழாவானது இரண்டு லட்சத்தை அடையப்போகிறது.

இந்து சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து, மக்களை ஒற்றுமைப்படுத்தும் பெருவிழாவாக விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் அங்கே வாழும் இளைஞர்கள், தாய்மார்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதனால், பகுதி வாழ் பொதுமக்களிடம் இணக்கமான சூழலும், ஒருமைப்பாட்டுணர்வும், தேசபக்தியும் ஏற்பட்டு வருகிறது.

முதலில் சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, ஐயப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.

விசர்ஜன ஊர்வலம் சீராக செல்ல, பாதுகாப்பு அணியென சீருடை அணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தினரை ஒழுங்குப்படுத்தி அமைதியான முறையில், கட்டுப்பாடான வகையில் ஊர்வலம் செல்ல வழி செய்கிறார்கள்.

கேரள மாநிலம் முழுவதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் ஏற்பட்ட, மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆர்.எஸ்.எஸ். சேவாபாரதி அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இடைவிடாது சேவையாற்றி வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து, இந்து முன்னணி பொறுப்பாளர்களும் சேவைப்பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதியோடு வாழ்ந்திட விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம்.
வருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மகராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.
அதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
ஊடக நண்பர்களும், தேசிய, தெய்வீக சிந்தனை கொண்ட ஆன்மிக பெரியோர்களும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற ஆதரவை வழங்கிட வேண்டுகிறோம்.
தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும், பாரத தேசத்திலும், உலகத்திலும் உள்ள எல்லா மக்களும், எல்லா நலன்களையும் பெற்று, அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை ப்ரார்த்திக்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

வீரத்துறவி அறிக்கை- மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
16-8-2018
பத்திரிகை அறிக்கை
சிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிகாலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமைக் கொள்ளத்தக்க வகையில் இருந்தது.

பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பலவகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார்.

ஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.

கார்கில் போர் வெற்றியின் மூலம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.
பாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.
அவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
வாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

சிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசே கைவிடுக – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

2-8-2018

பத்திரிகை அறிக்கை

திரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அவருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.

அதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.

இப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.

விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.

தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.

இறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.

இதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.

தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.

இந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

துணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நன்றி,

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

ஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி- பெரம்பலூர் இந்துமுன்னணி படைத்த சாதனை

பெரம்பலூர் இந்துமுன்னணிக்கு மாபெரும் வெற்றி.
ஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தேர் இழுப்பதற்காக வெளிநாடு வாழ் பெரம்பலூர் மற்றும் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்து வெள்ளோட்டம் நடத்தினார்கள்.

ஆனால் தேரோட்டத்திற்கு இந்து அறநிலையத் துறையினர் அனுமதிகொடுக்காமல் கிராம மக்களை நான்கு மாதங்களாக அழைகழித்துள்ளனர்.

மக்கள் சென்னையில் பத்து நாட்கள் தங்கி அறநிலைத்துறை அமைச்சர் ,பெரம்பலூர் MLA,ஆணையர் ஜெயா உள்ளிட்டோரை சந்தித்தும் பலனில்லை.

உடனே பொதுமக்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் , ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

அந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் நிச்சயம் தேர் ஓடாது என மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டனர்.

இச்செய்தி பத்திரிக்கையில் வர விஷயத்தை கையிலெடுத்தது இந்துமுன்னணி.

ஊர்மக்களை சந்தித்து நம்பிக்கையூட்டினோம்.

அடுத்த 24மணி நேரத்தில் தேர் ஓடும் என்ற செய்தி உங்கள்காதுக்கு வரும் என்று மக்களுக்கு கூறி கிளைகமிட்டி அமைத்தோம்.

உடனடியாக தேரை ஓட்ட அனுமதிக்காத அறநிலையத்துறையை கண்டித்து மாநில செயலாளர் சனில்ஜீ தலைமையில் போராட்டம் நடக்கும் என இந்துமுன்னணி அறிவித்தது.

உடனே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஒருநாள் அவகாசம் கேட்டனர்.

அதன் பிறகு தேர் ஓட்ட அனுமதி கிடைத்தது.

ஓடாது என்று ஊர்மக்கள் நினைத்த மாரியம்மன் தேரினை தகவல் கிடைத்த 24மணி நேரத்தில் ஓட நடவடிக்கையெடுத்தது.

இதுதான் #இந்துமுன்னணி

ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை

இராம கோபாலன்நிறுவன அமைப்பாளர்இந்து முன்னணி,தமிழ்நாடு59, ஐயா முதலித் தெரு,சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.தொலைபேசி: 044-28457676பத்திரிகை அறிக்கைஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில்இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு!தமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறிவைத்துத் தாக்குப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தை பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோத போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை எப்போதும் எதிர்ப்பு. எதற்கும் எதிர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத்தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் அவர்கள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணைபோயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட, ராஜராஜசோழன், லோகாமாதேவி சிலைகள் மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்தபின் தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்துவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது. கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவனைவாதகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசைத்திருப்பி வருகிறது.இப்படிப்பட்ட ஆபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.வருகின்ற ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது.தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.ஊடக நண்பர்களும், இம்மாநாடு பற்றிய செய்தியினை வெளியிட்டும், மாநாட்டிற்கு முதன்மை செய்தி ஆசிரியர், மற்றும் புகைப்பட/விடியோ கலைஞர்களை அனுப்பி நிகழ்வினை தொகுத்தும் வெளியிட வேண்டுகிறோம்.நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம்.தர்மம் வென்று தீரும். தர்மத்திற்கு அனைவரும் துணை நிற்போம். தமிழகத்தைப் பாதுகாப்போம், பாரத தேசத்தை வலிமைப்படுத்துவோம்.நன்றி,என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்(இராம கோபாலன்)

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – கோவில் சொத்து கோவிலுக்கே – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு – ஜூலை 29

கோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு

இந்து சமயம் மற்றும்
இந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.
தமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .
எதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .

60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

சுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .
ஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .
பத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.

கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.

ஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .
கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்?

கோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்டுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.

கோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு
அரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.

இந்துக்களே! சிந்திப்போம்!!
ஒன்றுபடுவோம் !!கோயிலை காப்போம்!!!.

இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் அப்பாவி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த ஊரில் சுமார் 1200 முஸ்லீம் குடும்பங்களும் 400 இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த இந்து குடும்பங்களை மதம்மாறுமாறு முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர் மதம்மாற மறுத்த காரணத்தாலும் இவர்களது அராஜகத்தை எதிர்த்த காரணத்தாலும் இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொம்மிநாயக்கன் பட்டி என்று நெடுங்காலமாக இருந்து வந்த ஊரின் பெயரை துலுக்கன் பட்டி என்று மாற்ற முஸ்லீம்கள் முயற்சித்து வருகின்றன்.

அரசு பள்ளி கூடத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் அதை அல்அமீன் இஸ்லாமிய மண்டபம் என பெயரிட்டு சட்டத்துக்கு புறம்பாக தங்கள் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வந்து விட்டனர்.

பெரியகுளம் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் ஈத்கா மைதானம் என பெயரிட்டு அங்கே தொழுகை நடத்தி வருவதோடு போலி ஆவணங்களை தயாரித்து கோயில் நிலத்தில் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.

பஞ்சாயத்து பொது தண்ணீரை மசூதிக்கும் தங்கள் தோட்டத்துக்கும் குழாய் மூலம் சட்ட விரோதமாக எடுத்து வருகின்றனர்.

இதை எல்லாம் எதிர்த்த இந்துக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரம் பெற்று அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு அதிகாரிகளின் இந்த செயலை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்த மோசடிகளுக்கு துணை போன அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொள்கிறோம்..

மேலும் முறையாக விசாரித்து மேற்குறிப்பிட்ட விசயங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலித் மக்களின்
சவஊர்வலம் எப்போதும் செல்லும் பாதையில் சென்ற போது அதை தடுத்த முஸ்லீம்கள், சரமாரியாக கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர்.

காவல் துறையில் இந்துக்களின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது ஆனால் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடிவாங்கியவன் மீது வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம் என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.

சவஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய யாரையும் காவல் துறை செய்யவில்லை. காவல்துறையின் இந்த கையாளாகாத போக்கால் ஊக்கம் பெற்றவர்கள் கோவில் திருவிழாவில் புகுந்து பிளக்ஸ் பேனர்களை கிழித்து தகறாறு செய்துள்ளனர். அப்போதும் காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.

சில காவல்துறை அதிகாரிகளே பயங்கரவாதிகளோடு சேர்ந்து கொண்டு கலவரத்தை நடத்தியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

காவல்துறை இஸ்லாமிய அடைப்படை வாதிகளின் வன்முறையை வேடிக்கை பார்த்ததின் விளைவாக கடந்த 5.5.18 அன்று காலை நன்கு திட்டமிட்டு வெளியூரிலிருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆட்கள் சுமார் 1000 பேரை அழைத்து வந்து இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் உருட்டை கட்டை அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள் கடைகள் வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் நபர்கள் இருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிகிறது.

இதை படம் பிடித்து போட்டோ வீடியோ என ஆதாரத்தோடு புகார் கொடுத்த போதும் வன்முறையாளர்களை கைது செய்யாமல் புகார் கொடுத்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

இத்தனை அராஜகங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போதிலும்
சிறு பிரச்சனைக்கு எல்லாம் கூக்கிரலிடும் அரசியல் கட்சிகள் தலித் மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை..?

தலித்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் திருமாவளவன் எங்கே போனார்..? சமூகநீதி பேசும் ஸ்டாலின், வைகோ, சீமான் கம்யூனிஸ்டுகள் என இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட தலித்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?

அடித்தவர்கள் முஸ்லீம்கள் அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதாலா..? அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா? இவர்கள் எப்படி தலித் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்

இவர்களது போலி தலித் அரசியல் தற்போதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமாவளவன் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கைகூலி என்பது தற்போதும் அம்பலமாகியுள்ளது. திருமாவளவனின் போலி தலித் முகமூடி இதன் மூலம் கிழிந்து போகியுள்ளது.

தலித்களுக்கு துரோகம் செய்துவரும் இந்த அரசியல் கட்சி தலைவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இவர்களின் ஜாதி அரசியலை புறக்கணித்து இந்துக்கள் அனைவரும் ஒற்றுமைபட வேண்டும் என மக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தலித் மக்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், தலித்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயங்கரவாத அமைப்புகளின் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி வரும் 12.5.18 சனிக்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆலயத்தை சீரழிக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டிற்கு உதாரணம் மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

3-2-2018

பத்திரிகை அறிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இந்த சமய அறநிலையத்துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாகும். மீனாட்சியின் திருக்கோயில் யுனஸ்கோவால் உலக கலை பொக்கிஷமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதை புலனாய்வுத் துறை அடிக்கடி எச்சரித்து வருகிறது. அப்படியிருக்கையில் கோயில் வழியில் கடைகளை வைத்து வியாபாரத்தலமாக மாற்றியது எந்த வகையில் நியாயம்? தீ விபத்து நடந்தால் எப்படி தடுப்பது என்பதற்குக்கூட எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை என்பதை பார்க்கும்போது, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் சீர்கேட்டினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்துக்களின் ஆலயச் சொத்துக்களை பராமரிக்க, பாதுகாக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை நிறுவப்பட்டது. ஆனால், எந்த நோக்கத்திற்காக இது துவக்கப்பட்டதாக தமிழக அரசாங்கம் கூறியதோ அந்த நோக்கமே இன்று சிதைவு பட்டுவிட்டது. கோயில் நிலங்கள், வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து எந்த தகவலும் இந்து சமய அறநிலையத்துறையிடம் இல்லை. மேலும் இத்துறை எடுத்துக்கொண்டதற்குப் பிறகு பல கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் அரசோ, இந்து சமய அறநிலையத்துறையோ தடுக்கவில்லை. கோயில் குளங்கள், மேலும் நூற்றுக்கணக்கான வருட கோயில்கள் கூட ஆக்கிரமிப்பு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இடிக்க உத்திரவிடும்போது, அவற்றைப் பாதுகாக்கும் செயலிலும் அத்துறை அதிகாரிகள் ஈடுபடுவதில்லை.

காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் உற்சவர் சிலை செய்த விஷயம் முதல் ஏராளமான ஊழல், சிலை, ஆபரணங்கள் திருட்டுகள், முறைகேடுகள் முதலியவற்றில் கோயிலை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடில் ஈடுபட்டு வழக்குகளை சந்திக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். எனவே, இந்து சமய அறநிலையத்துறையை உடனடியாக கலைக்க தமிழக அரசு உத்திரவிட வேண்டும். கோயில்களை, கோயில் சொத்துக்களை நிர்வகிக்க தனித்து இயங்கும் வாரியத்தை ஏற்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.

இந்து கோயில்கள், இந்து சமுதாயத்தின் சொத்து, ஆன்மீக கேந்திரங்கள். கோயில் அழிந்தால், நமது பாரம்பரியம், பழக்க வழக்கம், வரலாறு, கலை நுணுக்கம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, இலக்கியம் எல்லாம் அழிந்துபோகும். எனவே, கோயில்களைக் காக்க இந்து சமுதாயம் போராட வேண்டிய நேரமிது. இந்து சமய அறநிலையத்துறையை ஆலயத்தை விட்டு வெளியேற்றி, நமது கோயில்களை காக்க இந்துக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

நமது கோயில், நமது உரிமை, இதனை மீட்டெடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை. மதச்சார்பற்ற அரசுக்கு கோயிலில் என்ன வேலை? மசூதி சொத்து முஸ்லீம்களிடமும், சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. அவற்றினை மேம்படுத்த, பராமரிக்க அரசு பொது நிதியிலிருந்து கோடிக்கணக்கில் நிதியை தருகிறது. ஆனால், இந்துகளின் கோயில் பணத்தில் தனக்கு வருவாயை பெருக்கிக்கொள்வதுடன், கொள்ளையடிக்கவும் துணைபோகிறது! வரும் வருவாயில் பங்கு போடுகிறது தமிழக அரசு. அதற்கு ஏதுவாக அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கிறது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யாத கோயில் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். கோயில் பாதுகாப்பு கருதி இனி எந்த கோயில் உள்ளும் எந்தவிதமான வியாபார கடைகள் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. கோயில் நிர்வாகத்திலிருந்து, தமிழக அரசு வெளியேற வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்

பத்திரிகை அறிக்கை

திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..

6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

திருமாவளவன், தான் இந்துவா ? இல்லையா? என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.

இந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா? அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா? அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா? ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.

இப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா?

எப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.

திருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார்? என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

8-12-2017