Tag Archives: Hindumunnani
மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?
நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?
உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி வருத்தம்
சிலை கடத்தல் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் மகாதேவன் மற்றும் நீதியரசர் ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது
அப்போது நீதியரசர்கள் சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை அரசு மூடிவிடலாமே என கருத்து தெரிவித்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி உள்ளது
நீதியரசர்களின் இந்த கருத்து மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.
சிலை கடத்தல் வழக்கு உயர்நீதிமன்ற கண்காணிப்பினால் தான் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வருமானம் கிடைக்கிறது அப்படி இருக்கும் போது சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் தமிழக அரசு கோவில்களை மூடி விடலாமே என கேள்வி எழுப்பியுள்ளர்.
இந்து கோவில்களை தமிழக அரசு பராமரிக்க பாதுகாக்க தவறியதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது மிகச்சரியானது. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
ஆனால் அதற்காக கோவில்களை மூடிவிடலாமே என்ற கருத்து ஏற்புடையதல்ல.
ஏற்கெனவே தமிழக அரசு கட்டுபாட்டிலுள்ள பல கோவில்கள் பாழைடைந்து சிதிலமடைந்து மூடப்பட்டுள்ளது.
இந்து கோவில்கள் அனைத்தும் மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தால் அல்ல. அதை மூடுவதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
சொல்லப்போனால் அரசு கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது.
எனவை தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். அதை இந்து ஆன்மீக குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறலாமே தவிர கோவில்களை மூடலாமே என்ற நீதியரசர்களின் கேள்வி மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.
அரசின் இயலாமைக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கலாமா ?
எதிர்காலத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கோவில்களை இழுத்து மூடுவதற்கு நீதிமன்றமே வழிகாட்டுவது போல் ஆகிவிடும்
கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தை பதிவு செய்கிறோம்
V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி
இந்து ஓட்டு யாருக்கு ..? – இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.
தேர்தல் தொடர்பாக…
அன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.
இந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும். தீயவர்கள் வெற்றி பெற முடியாது.
நாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.
ரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.
சமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.
அரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை மாற்ற இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
கோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வி நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.
இந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,
இந்து ஓட்டு யாருக்கு ..? என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”
இந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்து ஓட்டு யாருக்கு..? ஊழியர் கூட்டங்கள்..
திருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு
மார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்டபத்தில் நடைபெறும்.
பவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.
கோவை நாடாளுமன்றம்,
27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,
29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
தேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் தேர்தல் சின்னம் வரையப்பட்டு இருப்பதாக கோவிலின் அடிப்படை விதிகளை மீறி, வழிபாட்டு உரிமையை பறிக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் .
இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தேர்தலுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சின்னங்களில் பல அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ இல்லாத செயல் எதுவும் இல்லை, கையை வெட்டி விட முடியாது .
ஆம் ஆத்மியின் சின்னமான ‘தொடப்பக்கட்டை’ அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது அதை ஒதுக்க முடியாது.
மக்கள் நீதி மையத்தின் ‘டார்ச்லைட்’ சின்னத்தை இனி கடைகளில் விற்கக்கூடாது என்று கூறமுடியாது.
சூரியன் உதிக்கிறது, மறைகிறது எனவே சூரியனே மறைந்து விடு! உதிக்காதே!! என்று கூறமுடியாது.
‘இரட்டை இலை’ எங்கெங்கு காணினும் இருக்கும், மரங்களை எல்லாம் வெட்டிவிட முடியாது .
இன்று கோவிலில் நடந்திருக்கக் கூடிய இந்த செயல் மிகமிக கேலிக்குரியது மாத்திரமல்ல, ஹிந்துக்களை நோக்கி திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தாக்குதல் என்று கூட சொல்லலாம்.
கோவிலுக்குள் தெய்வங்கள் வீற்றிருப்பது குறிப்பாக பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது தாமரைப் பூவில் தான்.ஆகவே தாமரைப்பூ என்பது கோவில்களின் பல இடங்களில் கோல வடிவமாகவோ, சிற்ப வடிவிலோ காணலாம்.
எனவே இதை தேர்தல் சின்னம் என்று கூறி நடவடிக்கை என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.
மேலும் ஆலயத்திற்குள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை, எனவே ஆலயத்திற்குள் சென்று அந்த அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை அழிக்க சொல்வது என்பது வழிபாட்டு உரிமைகளை தடுக்கக் கூடிய ஒரு விஷயம்.
இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது .
தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில் இதுபோல முறையற்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்யாதிருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
புல்வாமா தாக்குதல் – பதிலடியே சரியான தீர்வு- மத்திய அரசுக்கு இந்துமுன்னணி முழு ஆதரவு மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை
ஜம்மு & காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் CRPF படை வீரர்கள் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 42 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள மாவீரர்களை வணங்கி வீரவணக்க அஞ்சலி செலுத்துகிறது இந்துமுன்னணி மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கொடூர சம்பவத்தை தாங்கள்தான் நிகழ்த்தியதாக ஜெய்ஷ்- இ -முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இதனுடைய தலைவரான மசூத் அசார் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் , 1999 ஆண்டு விமானத்தை காந்தஹாருக்கு கடத்தி தீவிரவாதிகள் அவனை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்.
பாரத நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுகிறது . பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவி புரிகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும் , ஆயுத உதவியும் செய்கிறது.
பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் ஜம்மு காஷ்மீர் முழுதும் பரவி உள்ளார்கள். அவர்களுக்கு பண உதவி செய்து நமது நாட்டுக்கு எதிராக செயல்பட இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகள் உதவுகின்றன.
நேற்று நடந்த படுகொலை சம்பவத்தில் இறந்த வீரர்களின் உடலை எடுக்க சென்ற மற்ற வீரர்கள் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் . இதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
மத்திய அரசு இந்த தேச விரோத இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.
நாட்டின் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் இனி எண்ணம் கூட ஏற்படாத வண்ணம் வெறும் வேரடி மண்ணும் இல்லாமல் அடியோடு அழிப்பதே சரியான நடவடிக்கையாக அமையும். அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாட்டு மக்களும், இந்துமுன்னணி அமைப்பும் வழங்கும்.
மேலும் இந்த கொடூர தாக்குதல்களை ஆதரித்து, வரவேற்று ,மகிழ்ச்சி தெரிவித்து,சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டாடும் பயங்கரவாத ஆதரவாளர்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசை இந்த சமயத்தில் இந்துமுன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
பெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..
இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
பின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.
கொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.
ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.
செட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவில் இருக்கும் தன்மானமும், சுயமரியாதை உள்ள இந்துக்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை
திமுக திருந்தாத கட்சி, திமுகவில் இருக்கும் தன்மானமும்,
ஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.
சனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.
மூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா?
அதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.
வர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன? யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.
அதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.
உண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.
குழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.
திருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.
இவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.
இந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.
ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்துஆட்டோ முன்னணி ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட அடையாள அட்டை பெற்றுத் தரப்பட்டது.
இந்துமுன்னணி பேரியக்கத்தின் தேனி நகர் இந்துமுன்னணியின் சார்பாகவும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் சார்பாகவும் தேனி ஆனந்தம் ஆட்டோ நிலைய உறுப்பினர்களுக்கு அமைப்புசாரா ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக நல திட்ட அடையாள அட்டை ஒவ்வொரு (33 பேருக்கு) உறுப்பினர்களுக்கும் தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணி சார்பாக பெற்றுத்தரப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு திரு. ராதாகிருஷ்ணன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் திருச்சிராப்பள்ளி அவர்களும்,திரு ஆர்.ராஜ்குமார் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் தேனி அவர்களும்,மற்றும் நமது தேனி மாவட்ட இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் திரு உமையராஜன் ஜி அவர்களும்,இந்துமுன்னணி தேனி நகர தலைவர் ஆச்சி கார்த்திக் அவர்களும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் நகர தலைவர் திரு ரவிக்குமார் ஜி அவர்களும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் நகர பொதுச்செயலாளர் திரு ரமேஷ் ஜி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் தொழிலாளர் ஒற்றுமையே நாட்டின் வளர்ச்சி..