Tag Archives: Hindumunnani

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் – இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

30.09.2020

இந்துமுன்னணி பேரியக்கத்தின் நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரை நோய் தாக்கத்திலிருந்து மீட்க கடந்த இரு தினங்களாக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

இயல்பிலேயே போர்க் குணமிக்கவர் கோபால் ஜி. 1984 ல் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மறு அவதாரம் எடுத்தவர்.

அந்த மனோதிடம் அவரை நிச்சயம் மீட்டு விடும் என்று நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இந்துமுன்னணி , RSS உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்களின் ஊழியர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இம்முறை அவரது வயது (94) காரணமாக சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.

வீரத்துறவி இராம கோபாலன் 19-9-1927 ல் தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர்.

1945ல் RSS – ல் சேர்ந்தார்.

டிப்ளமோ , ஏ.எம்.ஐ.ஈ. படித்து முடித்த பிறகு மின்சாரத் துறை வேலையை உதறிவிட்டு முழுநேர RSS தொண்டரானார் (பிரச்சாரக்).

RSS இயக்கத்தின் பிராந்த பிரச்சாரக் (மாநில அமைப்பாளர்) என்ற பொறுப்பு வரை படிப்படியாக தமிழகம் முழுவது RSS வேலைகள் வளரக் காரணமாக இருந்தவர்.

1948 ல் RSS தடை செய்யப்பட்ட போதும் , 1975 எமர்ஜென்சி நேரத்திலும் தமிழகத்தில் RSS பேரியக்கத்தை வழிநடத்தியவர்.

தமிழகத்தில் நிலவிய அசாதாரண இந்து விரோத சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1980 ம் ஆண்டு RSS ன் வழிகாட்டுதலில் இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி .

இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தமிழகத்தில் அவர் கால் படாத ஊர்களே கிடையாது.

1984- ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும் தலையிலும் பலத்த வெட்டு. தழும்பை மறைக்க அன்றிலிருந்து காவித் தொப்பியணிய ஆரம் பித்தார் .

ஆனால் இவை எல்லாம் அவரது தேசப் பணியை முடக்கவில்லை. பல மடங்கு உற்சாகத்துடன் இந்துமுன்னணி பேரியக்க கிளைகளை விதைத்தார்.

இன்று தமிழகம் முழுவதும் ஆல்போல் தழைத்து; அருகு போல இந்துமுன்னணி வேரோடியிருப்பதற்கு காரணம் கோபால் ஜி தான்.

அவர் வேறு, இயக்கம் வேறு அல்ல. இந்துமுன்னணி தான் கோபால் ஜி; கோபால் ஜி தான் இந்துமுன்னணி.

அவரைப் போலவே செயல்திறம் மிக்க , எதிர்பார்ப்பற்ற , தேசபக்தி கொண்ட எண்ணற்ற மாவீரர்களை, ஊழியர்களைக் கொண்ட இயக்கமாக இந்துமுன்னணி வளர்ந்திருக்கிறது.

தேசத்திற்காக, தர்மத்திற்காக தனது வாழ்வையே அர்பணமாக்கிக் கொண்டவர் கோபால் ஜி .

தனக்கென ஒரு வாழ்க்கை என்ற ஒன்று அவரிடத்தில் இல்லை. இயக்கமே அவரது வீடு. தொண்டர்களே அவரது உறவினர்கள் .

இத்தகைய மாபெரும் மகான் இன்று இல்லை. அவரது வாழ்வே நமக்கு பாதை.
இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி.

அவரவர் பகுதிகளில் வீர அஞ்சலி, மௌன அஞ்சலி நிகழ்ச்சி நடத்திடுவோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

தனியார் இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் வைத்து வழிபாடு- மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

21.08.2020இந்த ஆண்டு கொடிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவேண்டும் என்பதில் இந்து முன்னணி தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறது.தமிழகத்தில் நோய் தாக்கம் ஏற்பட்ட நாள் முதல் பல்வேறு நலத் திட்ட பணிகளை தமிழகமெங்கும் செய்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்திருக்கிறது இந்து முன்னணி பேரியக்கம்.ஆகவே சமுதாய அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை திட்டமிட்டது. அந்த அடிப்படையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறாது, ஊர்வலங்கள் இருக்காது, சேர்ந்து சென்று விசர்ஜனம் (விநாயகர் கரைக்கும்) நிகழ்ச்சிகள் இருக்காது என்று இந்து முன்னணி ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு தற்போது மாண்பமை உயர்நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை சொல்லியிருக்கிறது.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் கொண்டாடப்படும்.22 ம் தேதி அன்று தனியார் இடங்களில், வீடுகளில், கோவில்களில் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவரவர் ஏற்பாடுகளில் (கூட்டம் சேராமல்) அன்று மாலையே விநாயகர் திருமேனிகளை விசர்ஜனம் செய்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.அரசும், அரசு அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.விநாயகரின் அருளால் இந்த கொடிய நோய் தொற்றானது அழியும். தமிழகம் மீண்டும் நல்ல நிலையை அடையும்.தாயகப் பணிகளில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மாநிலத்தலைவர்

ஹிந்துக்களுக்கு அநீதி – விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை – துரோகம் விளைவிக்கிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு – இந்துமுன்னணி கடும் கண்டனம் – திட்டமிட்டபடி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர்கள் வைக்கப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு

13.08.2020விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளதை
இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது.கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது.இதுவரை பலவித கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை முன்னெடுத்து வந்துள்ளது என்பதை அரசும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர்.இந்நிலையில் இந்த ஆண்டு உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள கொராணா தொற்று நோய் காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 5ஆம் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர்.மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை தான், நோய் எதிர்ப்பு சக்தியையும், நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதற்காகவே, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும், அதே சமயம் ஆன்மீக சூழ்நிலையிலும், கட்டுப்பாட்டுடனும் நடத்திட ஏற்பாடுகளை செய்து வருகிறது.தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்துனை ஆர்வம் காட்டியது, உச்சநீதி மன்றம் வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவர். மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது, அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்துள்ளது வேதனையானது.விநாயகரிடம் விளையாடிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் நிலை என்னவானது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி கொடுத்தும், நாகூர் தர்கா விழாவிற்கு 40 கிலோ சந்தனமும் கொடுத்தது தமிழக அரசு.தூத்துக்குடி பனிமய மாதா விழா குறித்து பாதிரியார் பேட்டி தர மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவு கொடுக்க வைத்தது தமிழக அரசு .ஆனால், இந்துக்களின் அனைத்து விழாக்களையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதை இந்துக்கள் அறிவர்.ஒடிசாவில் ஜகந்நாதர் தேர் திருவிழாவின் சிறப்பை உணர்ந்து உச்சநீதி மன்றம் கட்டுப்பாடுடன் நடத்த அனுமதி அளித்தது. இதே நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுடன் நடத்த இந்து முன்னணி அரசை கேட்டுக்கொண்டது.ஆனால் தற்போது தமிழக அரசு ஹிந்துக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில், இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது.பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் , தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை இலட்சம் இடங்களில் திட்டமிட்டபடி
நடக்கும் என்பதை இந்து முன்னணி உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.தாயகப் பணியில்காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

ஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

03.08.2020

ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் அதே இடத்தில் கோவில் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியது இந்துமுன்னணி. தற்போது நமது கனவு நனவாகப் போகிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

மக்கள் அனைவரும் அன்றைய தினம் (ஆகஸ்ட் 5 ம் தேதி – 2020) காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா எனும் மந்திரத்தை 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்வோம்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த புண்ணிய தினத்தில் நாமும் பங்கேற்று ஸ்ரீ ராமனது அருளுக்கு பாத்திரமாவோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

01.08.2020

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த சமயத்தில் முழுமுதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. இது இந்துக்கள் அனைவரது வீட்டிலும் கொண்டாடப் படும் விழா . விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி பேரியக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக, அதே சமயம் எளிய முறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலங்கள் இல்லாமல் எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது.

கொரோனா காரணமாக பீதியிலுள்ள மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான்.

ஆகவே விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்துகொடுக்கவேண்டும்.

மேலும் மக்கள் அவரவர் இல்லங்களில் குறைந்த பட்சம் மஞ்சள் பிள்ளையாரையாவது வைத்து விநாயகர் பெருமானை வழிபட்டு இந்த கொடிய காலகட்டம் மாறிட மனமார பிரார்த்தனை செய்திடவேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணிகளில்

காடேஸ்வராசி.சுப்பிரமணிம்

மாநிலத்தலைவர்

கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி- மத்திய உள்துறைக்கு கடிதம்- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்

தேதி: 11.06.2020பெறுநர்:மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள்பொருள் : உரிய விசாரணை நடத்தாமல் கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி- மனு வணக்கம். தென்காசி மாவட்டம் சம்பங்குளத்தில் சுமார் 160 இந்து சமுதாய குடும்பங்கள் இருந்து வருகின்றனர் .சம்பங்குளத்தில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் . இந்து சமுதாய மக்கள் விவசாயிகள் இருந்து வருகிறார்கள் .மேற்கண்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவில் சொத்தானது தற்போது தென்காசி தாலுகா சிவசைலம் கிராமம் பட்டா எண் 1598 மற்றும் பட்டா எண் 1376 உள்ளது . அதை காலம் காலமாக இந்து சமுதாய மக்கள் குலதெய்வ கோவிலாக வணங்கி வழிபாடு செய்து வருகின்றனர் .அந்தக் கோவிலில் பச்சாத்தி மாடன் மண்பீடம் இருந்து வருகிறது . வருடாவருடம் அதை புதுப்பித்து சித்திரை மாதம் கோவில் கொடை நடத்தி வருகின்றனர் . இந்த வருடமும் சித்திரை மாத கொடை விழாவிற்காக மண் பீடம் அமைந்திருந்தனர் .கொரோனா பிரச்சினை காரணமாக இந்த வருடம் கோவில் கொடை விழா நடத்தப்படவில்லை . மேற்படி மண்பீடம் மழையில் கரைந்து போவதால் வருடாவருடம் பீடம் செய்வதை தவிர்ப்பதற்காக தற்காலிக சிமெண்ட் சீட் போட ஊர் மக்கள் தீர்மானித்தனர் ,ஆனால் சம்பங்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மத தீவிர ஈடுபாடு உடையவர்கள் இந்து கோவிலில் இருந்து பார்த்தால் முஸ்லிம் பெண் மக்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும் இடம் தெரிவதாகவும் அதனால் கோவில் இங்கே இருக்கக் கூடாது என்றும் பிரச்சனை செய்தார்கள் .அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு கோவிலில் அபிவிருத்திகள் செய்யக்கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர் . மேலும் உண்மை விவரங்களை மறைத்து புறம்போக்கில் புதியதாக கோவில் கட்டி இருப்பதாக அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர் .அதனடிப்படையில் முறையான விசாரணை செய்யாமல் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் , பட்டா நிலத்தில் ஏற்கனவே காலம் காலமாக வழிபாடு செய்துவந்த கோயிலையும் அதிலிருந்த பீடங்களையும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் சார் ஆட்சியர் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி வாகனத்தை வைத்து தரைமட்டமாக இடித்துள்ளனர் .மேலும் பட்டா இடத்தில் கோவில் கட்டக்கூடாது என்றும் கூறி வருகிறார்கள் , பட்டா நிலத்தில் கோவில் கட்டுவதில் எந்தத் தடையும் கிடையாது . இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு புறம்போக்கில் கட்டியதாகவும் வரைபட அனுமதி இல்லாமல் பட்டா நிலத்தில் கட்டியதாகவும் ஏதேதோ காரணங்களை கூறி வருகிறார்கள் .முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இந்துக்கள் காலம் காலமாக வணங்கி வந்த கோவிலையும் அதிலுள்ள பீடத்தையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர் . இதனால் அந்த ஊரில் இந்துக்கள் அனைவரும் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வருகிறார்கள் .பட்டா இடத்தில் உள்ள கோவிலை முஸ்லிம்களின் தூண்டுதல் காரணமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ( யாருக்கும் முறையாக தபால் அனுப்பாமல் ) இடித்து தரைமட்டமாக்கிய தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .தாயகப் பணியில்V.P.ஜெயக்குமார்மாநில துணைத் தலைவர்இந்துமுன்னணி

SDPI மற்றும் PFI அமைப்புகளை தடை செய்யவேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

23.03.2020

SDPI மற்றும் PFI அமைப்புகளை தடை செய்யவேண்டும் மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம்

திருப்பூர் கோட்ட செயலாளர் திரு. மோகன சுந்தரம் கார் எரிப்பு சம்பவத்தில் SDPI அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் SDPI அமைப்பானது சம்பந்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மிக பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மறு பதிப்பே ஆகும்.

கேரளாவில் ஒரு பேராசிரியரை வெட்டியது முதற்கொண்டு , ராமலிங்கம் கொலை மற்றும் பலவேறு கார் எரிப்பு சம்பவங்களிலும் SDPI சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது கேரளா, கர்நாடக, தமிழ்நாடு, அஸ்ஸாம், உபி ஆகிய இடங்களை தலைமையகமாகக் கொண்டு KPF, KGF, PFI போன்ற பல்வேறு பெயர்களில் இயங்கிய இந்த அமைப்புகள் தற்போது SDPI என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு திட்டமிட்ட பொய் செய்திகளை பரப்புகிறது. முஸ்லீம் இளைஞர்களிடம் பல்வேறு பொய் வீடியோக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு ஆபத்து என்று கூறி மூளைச் சலவை செய்கிறது. ISIS அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையை செய்கிறது. இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் SDPI தடை செய்யப்பட்டுள்ளது .

எனவே அமைதிப்பூங்காவான தமிழகத்தைக் காக்க மத்திய , மாநில உளவுத் துறைகள் நன்கு கண்காணிக்க வேண்டும். இந்த SDPI வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பெற்று பாரத நாட்டில் வன்முறைகளை தூண்டுகிறது. எனவே இந்த அமைப்பை மாநில உளவுத்துறை மட்டுமல்லாமல் மத்திய உளவுத் துறையும் சேர்ந்து இவர்களது செயல்பாடுகளைக் கவனித்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும். மேலும் இவர்களது பண ஆதாரத்தையும் கண்டு பிடிக்க வேண்டும் . இவர்களது மறைமுக ஆதரவாளர்கள், இவர்களுக்கு இடம் கொடுக்கும் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டித்து, இரும்புக் கரம் கொண்டு அடக்கி தமிழகத்தையும், பாரதத்தையும் பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

பங்ளாதேஷிகளை வெளியேற்ற கோரி போராட்டம் துவங்கியது- பல மாவட்டங்களில் போராட்டம் நடத்த திட்டம்-மாநிலத் தலைவர்

பங்ளாதேஷிகளை வெளியேற்ற
கோரி காலவரையற்ற போராட்டம் துவங்கியது.திருப்பூரில் இந்துமுன்னணியின் தலைமையில் இந்துக்களின்
போராட்டம் திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.சட்டவிரோதமாக பங்ளாதேஷ்
நாட்டை சேர்ந்த
முஸ்லிம்கள்
சுமார் 50 ஆயிரம் பேர் திருப்பூரில் ஊடுருவியுள்ளனர்.அவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் வரை இந்தப்
போராட்டம் காலவரையின்றி
தொடரும் எனவும் இதேபோல்
மேலும் பல மாவட்டங்களில்
போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.இந்துக்களே ஒன்று சேருவோம்..
இப்போது இல்லை என்றால்
எப்போதும் இல்லை.

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் இந்துமுன்னணி என்றும் பக்க பலமாய் இருக்கும்

அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு
அராஜக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.
வன்முறை தலைவிரித்து ஆடுகிறது .

பாதுகாக்கும் காவல் துறைக்கு ஒரு பாதிப்பு என்றால் எந்த அரசியல் தலைவரும் குரல் கொடுக்க மாட்டார்கள் .
இவர்களைப்பற்றி காவல்துறை இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டுக்கு காவல் தெய்வமாக இருக்கக்கூடிய காவல்துறைக்கு
ஒரு பாதிப்பு என்றால்
எந்த அரசியல் தலைவர்களும்
முன் வராததற்கு காரணம் என்ன ?

அரசியல்வாதி பிழைக்க
காவல்துறை துணை வேண்டும் . ஆனால்
காவல்துறைக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல்வாதிகள் தயங்குவது ஏன்?

அராஜகத்துக்கு துணைபோகும் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளும் காவல்துறையே…!
பொறுத்தது போதும் .

காவல்துறையின்
கையை கட்டிப் போட்ட அரசியல்வாதிகள், என்றும் கூட வர மாட்டார்கள் இது தான் உண்மை.

காவல்துறைக்கே ?
பாதுகாப்பு இல்லை என்றால் ….
காவல்துறை வேடிக்கை பார்ப்பது நியாயமா?

காவல்துறையை
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
முதலமைச்சர் அவர்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் . இல்லையென்றால் காவல் துறையின் மீது உள்ள பயம் போகிவிடும் .

எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு துணிவான கமிஷனர் இருக்கும்போது இப்படிப்பட்ட ஒரு செயல் நடக்கிறது என்றால் ..!

இந்த அரசாங்கம் சரியில்லை என்று அர்த்தமா? இல்லை முஸ்லீம்களை கண்டால் பயந்து விடவேண்டும் என்று அர்த்தமா? என்று புரியவில்லை.

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் .
#இந்துமுன்னணி என்றும்
உங்கள் பக்கம் இருக்கும் என்று இந்த நேரத்திலே சொல்ல கடமைப்படுகிறோம் .

உங்கள் உடல் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கின்றோம்…..

முடியாததை!! முடித்து காட்டியது !! இந்து முன்னணி – தூத்துக்குடியில் இந்து ஒற்றுமையின் வெளிப்பாடு

முடியாததை!!
முடித்து காட்டியது !!
இந்து முன்னணி .

எங்கே…?என்ன….?

தூத்துக்குடி மாநகர்
மேட்டுப்பட்டி, முத்தரையர் நகர் திரேஸ்புரம்(பெரிய ஊர்),விவேகானந்தர் நகர் (கரைவலை),புதிய துறைமுகம்( சுனாமி காலனி). இந்த ஊர்களை இந்து முன்னணி ஒருங்கிணைத்தது ….எதற்காக?

1.முத்தரையர் நகர் மீனவர்களை மணப்பாடு,ஆலந்தலை,போன்ற ஊர்களில் கிறிஸ்தவ மீனவர்கள் அவர்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று இந்து மீனவர்களின் படகுகளை பிடுங்கி வைத்து கொண்டனர்.

பாதிரியார் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் பஞ்சாயத்து செய்து ஒரு லட்ச ரூபாயை கிறிஸ்துவ சர்ச்க்கு அபதாரமாக கொடுத்தபின் படகுகளை விடுவித்தனர். தகவல் அறிந்த இந்துமுன்னணி இந்த விஷயத்தில் களமிறங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,மீன்வளத்துறை அமைச்சர் ,ஆகியோரிடம் மனுக்களை கொடுத்த பின் இன்றுவரை அந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

2. தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தீர்த்த நீரெடுக்க சங்கு முக விநாயகர் ஆலயத்திற்கு செல்வதுதான் வழக்கம்.
அந்த கோவில் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்த நேரத்தில் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி இதில் தலையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து பின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக அந்த ஆலயம் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

3.தூத்துக்குடி துறைமுகம் சார்பாக அந்தப் பகுதியில் 40 லட்சம் மதிப்பில் கழிப்பறை, குளியலறை,வலைக் கூடம்,மீனவர்களுக்கான உபகரணங்கள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.

4.விவேகானந்தர் நகர் (கரைவலை) பகுதி மீனவர்களை கிறிஸ்துவ மீனவர்களால் மீன் பிடிக்க கூடாது என்று தடை விதித்த போது மீன்வளத்துறை இணை இயக்குனரிடம் நேரடியாக சென்று இது சம்பந்தமாக பேசி இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த ஊர்களையெல்லாம் இணைத்து நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவினை இந்து முன்னணி சார்பாக மிகவும் கோலாகலமாக கொண்டாடியது.