விநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை

இந்து என்பது சமய, சமுதாய, பண்பாட்டின் குறியீடு..
கடந்த 36 ஆண்டுகளாக இந்து சமுதாயத்தை அரசியல், சாதி, மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமைப்படுத்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவை வெற்றிகரமாக இந்து முன்னணி நடத்தி வருகிறது.
இவ்விழாவில் அனைத்து ஆன்மீக பெரியோர்களும், சமுதாய தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எந்த பேதமும் இல்லாமல் கலந்துகொள்கிறார்கள்.
தேனியில் நடைபெற்ற விழாவில் அதிமுக கட்சியைச் சேர்ந்த, அப்பகுதி எம்.பி. திரு. ரவீந்திரநாத் அவர்கள் கலந்துகொண்டு, இந்துவாக வாழ்வோம் என சமுதாய ஒற்றுமை குறித்து பேசினார். இதனை திரித்து சில அரசியல்வாதிகள், திராவிட அமைப்புகள், தனி நபர்கள் சிலர் சமூக வளைத்தளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
முஸ்லீம்கள் தங்களை முஸ்லீம்கள் என்று கூறும்போதும், கிறிஸ்தவர்கள் தங்களை கிறிஸ்துவர்கள் என கூறும்போதும், அவர்கள் விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுபவர்களும் அதே கருத்தை வலியுறுத்திப் பேசும்போதும் எழாத விமர்சனங்கள், இந்து விழாவின் போது ஏன் செய்கிறார்கள்?
இந்து என்பது இந்த நாட்டின் பண்பாட்டு அடையாளம் என உச்சநீதி மன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்துக்கள் ஒருபோதும் மற்ற மதத்தினர்மீது, நாட்டின் மீது ஆக்கிரமித்ததோ, அழித்ததோ கிடையாது. இந்துக்களால் தான் ஜனநாயகம், கருத்து சுதந்திரம், அமைதி இந்த நாட்டில் இருந்து வருகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *