Tag Archives: #ஊடகங்கள்

வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.

27.06.2020

வி பி ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்

வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம்

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அதே சமயம் இரண்டு மனித உயிர்களின் மரணத்தை வைத்து இங்கு பலர் அரசியல் செய்வது மிகுந்த வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

இரண்டு வியாபாரிகள் மரணத்திற்காக இரண்டு வணிகர் சங்கங்களும் போட்டிபோட்டு கொண்டு கடையடைப்பு ,ஆர்ப்பாட்டம், போராட்டம் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

இவர்கள் சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிகள் தாக்கப்பட்ட போதும், சென்னையில் இதே சமூகத்தைச் சார்ந்த மிகப்பெரிய இந்து துணிக்கடை அதிபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்ட போதும், ஹலால் உணவு இல்லை என போர்டு வைத்ததற்காக இந்து வியாபாரி கைது செய்யப்பட்டபோதும், நெல்லை மாநகரம் பேட்டையில் வேற்று மதத்தினரால் இந்து வியாபாரிகள் அடித்து விரட்டப்பட்ட போதும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இந்து வியாபாரி காவல்துறையினரால் தாக்கப்பட்ட போதும் எங்கே போனார்கள் ?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டால் தான் வணிகர் சங்கங்கள் களமிறங்குமா ?

இந்து வியாபாரிகளுக்கு பாதிப்பு , பிரச்சனை , வழக்கு என்றால் பாதுகாப்பு , நீதி கேட்டு இரண்டு வணிகர் சங்கங்களும் போராடாதா?

தென்காசி மாவட்டம் சம்பன்குளத்தில் இதே சமூகத்தைச் சார்ந்த மக்களின் கோவில்கள் இடிக்கப்பட்ட போது எந்த அரசியல் கட்சியும் எந்த சங்கங்களும் வாய் திறக்கவில்லையே ஏன் ?

இன்று மனிதநேயம், ஜீவகாருண்யம், ஈவு இரக்கம், மனிதாபிமானம், மனித உயிர் என்றெல்லாம் வசனம் பேசும் பலர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் காவல்துறை உதவிஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் வாய்மூடி மௌனமாக இருந்தார்கள் ?

குற்றவாளிகள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் அனைவரும் வாய் திறக்க மறுப்பது அஞ்சுவது ஏன் ?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட போது அனைவரும் வாய்மூடி வேடிக்கை பார்த்தது ஏன் ?

திருச்சி சிறுவன் சுஜித் வில்சன், சாத்தான்குளம் பெனிக்ஸ் என சிறுபான்மையினர் இறந்தால் மட்டும் உடனடியாக பல லட்சம் ரூபாய் நிதியுதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு வேலையும் வழங்கும் தமிழக அரசு இந்து குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்தால் பாதிக்கப்பட்டால் நிதி உதவியும் அந்தக் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க மறுப்பது ஏன் ?

முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இறந்த கோவை சசிகுமார் , பாடி சுரேஷ் , ராமலிங்கம் என பல இந்துக்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு பல லட்சம் நிதி உதவி வழங்கியதா ?

அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு தற்கொலை செய்து இறந்த தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் மாணவி குடும்பத்திற்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியதா?

மரணத்தை மதரீதியாக அணுகலாமா என சிலர் வியாக்கியானம் பேசுகிறார்கள் ஒவ்வொருவருடைய மதத்திற்கு ஏற்ப தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் சங்கங்களும் மதரீதியாக பாரபட்சமாக நடவடிக்கை மேற்கொள்ளும் போது மதரீதியாக கேள்வி எழுவது இயல்புதானே

சாத்தாங்குளம் வியாபாரிகள் படுகொலையில் கூட மதரீதியாக சில அதிகாரிகளை காப்பாற்ற முயல்வதாக செய்திகள் வருகிறது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

மாண்புமிகு உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை தானாக முன்வந்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது. அந்த இருவரையும் ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடுநிலையோடு நீதி வழங்கப்படும் என இந்து முன்னணி நம்புகிறது

இரண்டு வியாபாரிகளின் மரணம் கண்டனத்திற்குரியது அதை வைத்து அரசியல் நடத்தும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வணிகர் சங்கங்களின் செயல் அதைவிட மிகுந்த கண்டனத்திற்குரியது ஆகும். இத்தகைய மதரீதியான பாரபட்சமான போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி

ஹைதராபாத்- பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா- இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

25.04.2020

கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவரின் தந்தை வேணு முடிராஜ் காச நோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அன்று அன்னாருக்கு நடைப்பெற்ற இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர் 5 பேர் ( சாதிக் பின் சலாம், முகமது மஸ்ஜித், அப்துல் முஸ்தகீர், முகமது அகமது, ஷாகித் அகமத்) கலந்து கொண்டு மயானத்தின் அருகில் சென்ற போது பூத உடலை சுமந்து சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்(நான்குபேர் மயானத்திற்குள் உடலை சுமக்க மற்றொருவர் யாருக்கும் தெரியாமல் அவருடைய கைபேசியில் உள்ள கேமரா மூலம் அதை படம் எடுத்துள்ளார்).

பின்னர் அந்த புகைப்படங்களை பயன்படுத்தி சந்தோஷ் அவர்களின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அவரின் இறுதி சடங்கிற்கு அவருடைய உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் இவர்களே அந்த ஈமச் சடங்குகளை செய்ததாகவும் வதந்தி பரப்பி அம்மாநில மூன்று தினசரி நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.

தற்போது சந்தோஷ் அவர்கள் (உயிரிழந்தவரின் மகன்) அந்த ஐந்து இஸ்லாமியர்கள் மீதும் தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு வதந்திகளை கிளப்பிய அந்த மூன்று பத்திரிகைகளுக்கும் இந்து முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

இவர்கள் செயல் நாகரிகமானதா?
கொரோனா பாதித்தவர்களுக்கு நாங்கள் தான் (இஸ்லாமியர்கள்) உதவுகிறோம் என்ற மாயையை உருவாக்கவா?

மேலும் அந்த மூன்று பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் ( தப்லீக் ஜமாத்தின் ஆதரவாக செயல்படுகிறதோ!! ) இந்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா? என்று மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்திட வேண்டும்.

இதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீது மீண்டும் இந்துக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்று இஸ்லாமியர்கள் உணர வேண்டும்.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ! பாலிமர் தொலைக்காட்சி மிரட்டும் மத அடிப்படைவாத கும்பலை கைது செய்க – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கை

23.04.2020

தமிழ்நாட்டில் மிகக் குறைந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பாலிமர் செய்தி சேனல்.
எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் நடுநிலையோடும், நேர்மையாகவும் செய்திகளை பாலிமர் செய்தி தொலைக்காட்சி அளித்து வருகிறது.
இதன் விளைவாக தமிழ்நாட்டின் முதல் செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரானா தொற்று மிக அதிக அளவில் பரவுவதற்கு தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக இருந்ததையும்,மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்ததையும், தேவையான காலகட்டத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வு செய்தியை பாலிமர் தொலைக்காட்சி உடனுக்குடன் கொடுத்து வந்தது.

எதையும் மதரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து பழகிப்போன தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் எப்படியாவது பாலிமர் தொலைக்காட்சியை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நிர்வாகத்தை மிரட்ட துவங்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் இன்னொசெண்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்தையும், விஸ்வரூபம் போன்ற திரைப்படைத்தையும் எதிர்த்து எதுபோன்ற மிரட்டல்களை விடுத்தார்களோ அதே பாணியில் தற்போது அதன் தலைமை செய்தியாளர் வேல்ராஜ், மற்றும் அவர் சார்ந்த பாலிமர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

உண்மை செய்தியை வெளியிட்டதற்காக ஒரு செய்தி தொலைக்காட்சியை குறிவைத்து மதவெறி கும்பல் நடத்தும் இந்தத் தாக்குதலை எந்த அரசியல் கட்சியும் கண்டிக்க முன்வராதது அவர்களின் தரம் தாழ்ந்த ஓட்டு அரசியலை காட்டுகிறது.

எதற்கெடுத்தாலும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் இடதுசாரி அமைப்பினர் கருத்து சுதந்திரத்திற்கு சவால் விடும் பாசிச சக்திகளை கண்டிக்க முன் வராதது ஏன்? என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.

குறிப்பிட்ட மதத்தினர் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அரசியல் கட்சிகள் செயல்படுவது நியாயம்தானா?

ஊடகத் துறையைச் சார்ந்த சங்கங்கள் மூத்த ஊடகவியலாளர்கள் பாலிமர் தொலைக்காட்சியின் மீதான தாக்குதல்களை கண்டிக்காமல் இருந்தால் ஊடகத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மக்கள் நினைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக சங்கங்கள் பாலிமர் செய்தி சேனல் மீது தொடுக்கப்பட்ட இருக்கின்ற இந்தத் தாக்குதலைக் கண்டிக்க முன்வர வேண்டும்.

மிரட்டல் விடுத்த அந்தக் கும்பலின் மீது அந்த செய்தி தொலைக்காட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து மதவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தமிழக அரசு பாலிமர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மிரட்டலுக்கு உள்ளான தலைமை செய்தியாளர் திரு. வேல்ராஜ் அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

சென்னை மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்

21.04.2020

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் “பொதுமக்கள்” என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்!

இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.
கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான சாதிச்சண்டையை இது பிரதிபலிக்கிறது!

எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையின் போது கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை “பொதுமக்கள்” என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்..

டெல்லி மாநாட்டுக்கு ( தப்லீக் ஜமாஅத் மாநாட்டு ) சென்றுவந்தவர்களை இதே ஊடகங்கள் தான் “தனியார் அமைப்பினர்” என அழைத்தனர்.

முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்.

சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது.

கிறித்தவ மதத்திற்குள் சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தை ஜாலம்.

தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் “பாதர்கள்” போல, நிஜ வாழ்க்கை பாவாடை பாதர்கள் இல்லை. வெள்ளை அங்கி பாவாடை பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!

எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்.
கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது என்று மத்திய சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

உங்கள் பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மயானங்களில் கூடி, பிணத்தை தடுத்து கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்.

தமிழக மீடியாக்களால் ஜாதிய-மத வாதிகளாக அவதூறு பரப்படும் இந்துக்கள்தான் அயனாவரம் வேலங்காட்டில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் டாக்டர் சைமன் என்கிற கிறித்தவரின் உடலை புதைக்க அனுமதித்தனர் என்பதை அன்பு மதத்தை சேர்ந்தவர்களும், மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகளும் , இந்து விரோத பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊடகங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரையும் அரவனைக்கும் சனாதன தர்மம் என்பது தான் உண்மை.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்