Tag Archives: #Hyderabad

ஹைதராபாத்- பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா- இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

25.04.2020

கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவரின் தந்தை வேணு முடிராஜ் காச நோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அன்று அன்னாருக்கு நடைப்பெற்ற இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர் 5 பேர் ( சாதிக் பின் சலாம், முகமது மஸ்ஜித், அப்துல் முஸ்தகீர், முகமது அகமது, ஷாகித் அகமத்) கலந்து கொண்டு மயானத்தின் அருகில் சென்ற போது பூத உடலை சுமந்து சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்(நான்குபேர் மயானத்திற்குள் உடலை சுமக்க மற்றொருவர் யாருக்கும் தெரியாமல் அவருடைய கைபேசியில் உள்ள கேமரா மூலம் அதை படம் எடுத்துள்ளார்).

பின்னர் அந்த புகைப்படங்களை பயன்படுத்தி சந்தோஷ் அவர்களின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அவரின் இறுதி சடங்கிற்கு அவருடைய உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் இவர்களே அந்த ஈமச் சடங்குகளை செய்ததாகவும் வதந்தி பரப்பி அம்மாநில மூன்று தினசரி நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.

தற்போது சந்தோஷ் அவர்கள் (உயிரிழந்தவரின் மகன்) அந்த ஐந்து இஸ்லாமியர்கள் மீதும் தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு வதந்திகளை கிளப்பிய அந்த மூன்று பத்திரிகைகளுக்கும் இந்து முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

இவர்கள் செயல் நாகரிகமானதா?
கொரோனா பாதித்தவர்களுக்கு நாங்கள் தான் (இஸ்லாமியர்கள்) உதவுகிறோம் என்ற மாயையை உருவாக்கவா?

மேலும் அந்த மூன்று பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் ( தப்லீக் ஜமாத்தின் ஆதரவாக செயல்படுகிறதோ!! ) இந்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா? என்று மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்திட வேண்டும்.

இதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீது மீண்டும் இந்துக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்று இஸ்லாமியர்கள் உணர வேண்டும்.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி