Tag Archives: இந்துமுன்னணி

இராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்

14.07.19
பத்திரிகை அறிக்கை

வரலாற்று சிறப்புமிக்க அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்..
நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் அத்தி வரதர். அவரை தரிசிக்க சாதாரண பொது மக்கள் முதல் பாரதத்தின் முதல் குடிமகன் வரை பல முக்கிய பிரமுகர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தினசரி சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இதுவரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்.

இதுபோல, கடந்த வருடம் உத்திர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றது. மிகச் சிறந்த ஏற்பாடுகளை அந்த மாநில அரசு செய்திருந்ததை கண்ணாரக் கண்டோம். அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே,

1. தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, மற்றும் அங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் தர ஏற்பாடு. (வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

2. தரிசனத்திற்கு நிற்பவர்களுக்கும், ஆங்காங்கே நிற்பவர்களுக்கும் தேவையான பந்தல் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் பலர் மயக்கமடைகிறார்கள்.

3. வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்காவது ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக வினியோகம் செய்யச் சொல்லலாம்.

4. தரிசன வரிசையில் போய், கோயில் உள் வரிசை வரும்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும், விரைவாக, அதிகமான பக்தர்கள் தரிசிக்க வசதி ஏற்படும்.

5. மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்தும், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்ால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்தந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதியும் அவசியம்.

6. வயதானவர்கள், நோயாளிகள் தரிசினம் செய்ய வேண்டும் என்ற பக்தியில் வருகிறார்கள். அவர்களுக்கும், கைக்குழந்தையோடு வருபவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் உடனடியாக செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வரவதற்கும், போவதற்கும் ஏற்பாடு தேவையான அளவில் இருப்பது அவசியம்.

7. தன்னார்வ தொண்டர்களை இணைத்து முழு சேவைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழக மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.

ஈரோடு மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று திங்கள்கிழமை மாலை இந்து முன்னணி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திரு. பா. ஜெகதீசன் அவர்களின் தலைமையில் ,மாவட்ட பொதுச்செயலாளர் திரு. ப. சக்தி முருகேஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்கள் கலந்து கொண்டார். இதில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் -1

சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கையாக தினமும் ஈரோட்டில்லிருந்து சென்னை செல்லும் அனைத்து இரயில்களிலும் குடிநீர் எடுத்து செல்லும் டேங்கர்கள் இணைத்து குடிநீர் எடுத்து சென்று சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும் என மாநில அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் – 2

ஈரோடு மாநகராட்சியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி, நிலத்தடியில் மின்சாரம் எடுத்து செல்லும் கம்பி பதிக்கும் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆகிய வளர்ச்சி பணிகள் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகின்றன, இதில் ஏற்கனவே பணி நடைபெற்ற சாலையை முழுமையாக செப்பனிடாமல் மக்கள் பயன்படுத்தும் மீதி சாலைகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகளும் , பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே வளர்ச்சி பணியினை மக்களுக்கு இடையூர் இல்லாமல் மக்கள் செல்ல மாற்று வழித்தடத்தை ஏற்படுத்தி தந்து திட்டமிட்டு பணியினை விரைந்து முடிக்கும்மாரு மாநகராட்சியை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் – 3

ஆலய கட்டண தரிசனத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஜூலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக நான்கு இடங்களில் மிக சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, வக்கீல் முரளி, சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், ரமேஷ் மற்றும் அனைத்து மாவட்ட பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

மக்கள் நீதி மையம் கட்சியினுடைய தலைவராக இருக்கக் கூடிய திரைப்பட நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் எவ்வளவு மதவெறி கொண்டதாக இருக்கும் தான் முன்னெடுக்க கூடிய அரசியல் வகுப்புவாத மதவாத அரசியல் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு நேற்று காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் அதிகமாக கூடி இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுடைய ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பிதற்றியுள்ளார்.

திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்காக அனுபவித்த பிரச்சினைகளை மறந்துவிட்டார் போலும்.

நவகாளிப் படுகொலைகளில் ஹிந்துப் பெண்கள் 10 ஆயிரம் பேர் கற்பழிக்கப்பட்டதை மறந்து விட்டாரா? அந்த வரலாறு அவருக்கு தெரிந்த ஒன்று ,ஆனால் கேவலமாக அரசியல் செய்ய வேண்டி பேச வேண்டாத ஒரு விஷயத்தை பேசக் கூடாத இடத்தில் பேசி தனது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டியிருக்கின்றார் திரு கமல்ஹாசன்.

இப்படி பிதற்றி ஹிந்து சமுதாயத்தை கேவலப்படுத்தியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கொண்டு அவர் பிரச்சாரத்தில் இதுபோன்று தொடர்ந்து இந்து விரோத கருத்துகளை சொல்லாமல் இருப்பதற்கு தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திரு கமலஹாசன் அவர்களுடைய இந்த தவற்றை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி எச்சரிக்கின்றது.

மேலும் இதுபோன்று கமலஹாசன் தொடர்ந்து ஹிந்து மத துவேஷத்தில் பிரச்சாரம் செய்தால் அவரை ஹிந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

கமலஹாசன் வரலாறு தெரியாதவர் அல்ல விவரம் தெரிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது தனக்கு ஒரு மலிவான விளம்பரம் தேட வேண்டி தான் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ஹிந்து முன்னணி கருதுகின்றது .

இன்றைக்கு அரசியல் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகளை பழிப்பது ஹிந்து கடவுளை தூற்றுவது ஹிந்துக்களை கேவலமாகப் பேசுவது என்பது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க ஹிந்துக்கள் இளித்தவாயர்கள் அல்ல ஹிந்துக்கள் ஒன்றுதிரண்டு இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்க கற்பிக்கின்ற சூழ் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

இதனுடைய விளைவை ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கின்றது.

மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?

நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?

உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி வருத்தம்

சிலை கடத்தல் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் மகாதேவன் மற்றும் நீதியரசர் ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது நீதியரசர்கள் சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை அரசு மூடிவிடலாமே என கருத்து தெரிவித்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி உள்ளது

நீதியரசர்களின் இந்த கருத்து மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.

சிலை கடத்தல் வழக்கு உயர்நீதிமன்ற கண்காணிப்பினால் தான் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வருமானம் கிடைக்கிறது அப்படி இருக்கும் போது சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் தமிழக அரசு கோவில்களை மூடி விடலாமே என கேள்வி எழுப்பியுள்ளர்.

இந்து கோவில்களை தமிழக அரசு பராமரிக்க பாதுகாக்க தவறியதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது மிகச்சரியானது. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அதற்காக கோவில்களை மூடிவிடலாமே என்ற கருத்து ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே தமிழக அரசு கட்டுபாட்டிலுள்ள பல கோவில்கள் பாழைடைந்து சிதிலமடைந்து மூடப்பட்டுள்ளது.

இந்து கோவில்கள் அனைத்தும் மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தால் அல்ல. அதை மூடுவதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

சொல்லப்போனால் அரசு கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது.

எனவை தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். அதை இந்து ஆன்மீக குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறலாமே தவிர கோவில்களை மூடலாமே என்ற நீதியரசர்களின் கேள்வி மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.

அரசின் இயலாமைக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கலாமா ?

எதிர்காலத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கோவில்களை இழுத்து மூடுவதற்கு நீதிமன்றமே வழிகாட்டுவது போல் ஆகிவிடும்

கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தை பதிவு செய்கிறோம்

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி

வீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு  ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..

16-4-2019
பத்திரிகை அறிக்கை
ஜனநாயகத்தின் திருவிழாவான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த 55 ஆண்டுகள் செய்த வளர்ச்சி நடவடிக்கைகளைக் காட்டிலும் அதிகமாக, கடந்த 5 ஆண்டு ஆட்சி செய்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து காட்டி சாதனை புரிந்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாபெரும் வெற்றியும், பெருமித உணர்வும் ஏற்பட வழிவகை செய்துள்ளதை ஒவ்வொரு இந்தியனும் உணர முடிகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் புதிய வரியோ, வரி விகிதம் கூட்டப்படவோ இல்லை, அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருக்க மத்திய அரசின் நடவடிக்கையே காரணம். அதேசமயம், தேசத்தின் வருமானம் பெருகியுள்ளது. இதிலிருந்து சிறந்த நிர்வாகம் எது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தின் பலமே நமது வாக்குரிமை, இதனை
சுயலாபத்திற்காகவோ, பணத்திற்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருவரும், தமது வாக்குரிமையை செலுத்த வேண்டும். அது ஜனநாயகத்தின் புனித கடமையாக எண்ணி செயல்பட வேண்டும். நோட்டா -விற்கு வாக்களிக்கக்கூடாது. இது ஜனநாயகத்தை குலைத்துவிடும். காலையிலேயே வாக்குச்சாவடி சென்று வாக்குரிமையை செலுத்தி ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்போம்.
ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை பயன்படுத்தி, ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் நாத்திகவாதிகளையும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களையும் போலீஸ் துணையோடு அழைத்து சென்று ஐயப்பனின் வழிபாட்டை சீர்குலைக்க இடதுசாரிகள் முயன்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் துணை நின்றன என்பதை இந்துக்கள் மறக்க வேண்டாம்.
மேலும், திராவிடர் கழக வீரமணி, இந்துக்களின் வழிபாட்டிற்குரிய கிருஷ்ணரை கேவலப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேச மேடை அமைத்து கொடுத்தது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள். வருகின்ற 18ஆம் தேதி ஐயனின் 18ஆம் படியை அவமதித்தவர்களுக்கு தகுந்த பாடத்தை, வாக்கு எனும் ஆயுதத்தால் ஜனநாயக வழியில் பதிலடி கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்தியாவின் அனைத்து மக்களும் முன்னேற திட்டம் வகுத்து செயல்படுத்தியவரும், உலக நாடுகளில் இந்தியாவின் பெருமையை உணர செய்தவர் திரு. நரேந்திர மோடி. அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு உரிய சின்னத்தில் நமது வாக்கினைச் செலுத்துவோம். தேசத்தின் நலன் காத்திட, மீண்டும் மோடி பிரதமராகி நாட்டை வலிமையானதாக, வளமானதாக ஆக்கிட தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் வாக்களிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

தேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் தேர்தல் சின்னம் வரையப்பட்டு இருப்பதாக கோவிலின் அடிப்படை விதிகளை மீறி, வழிபாட்டு உரிமையை பறிக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் .

இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தலுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சின்னங்களில் பல அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ இல்லாத செயல் எதுவும் இல்லை, கையை வெட்டி விட முடியாது .

ஆம் ஆத்மியின் சின்னமான ‘தொடப்பக்கட்டை’ அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது அதை ஒதுக்க முடியாது.

மக்கள் நீதி மையத்தின் ‘டார்ச்லைட்’ சின்னத்தை இனி கடைகளில் விற்கக்கூடாது என்று கூறமுடியாது.

சூரியன் உதிக்கிறது, மறைகிறது எனவே சூரியனே மறைந்து விடு! உதிக்காதே!! என்று கூறமுடியாது.

‘இரட்டை இலை’ எங்கெங்கு காணினும் இருக்கும், மரங்களை எல்லாம் வெட்டிவிட முடியாது .

இன்று கோவிலில் நடந்திருக்கக் கூடிய இந்த செயல் மிகமிக கேலிக்குரியது மாத்திரமல்ல, ஹிந்துக்களை நோக்கி திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தாக்குதல் என்று கூட சொல்லலாம்.

கோவிலுக்குள் தெய்வங்கள் வீற்றிருப்பது குறிப்பாக பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது தாமரைப் பூவில் தான்.ஆகவே தாமரைப்பூ என்பது கோவில்களின் பல இடங்களில் கோல வடிவமாகவோ, சிற்ப வடிவிலோ காணலாம்.

எனவே இதை தேர்தல் சின்னம் என்று கூறி நடவடிக்கை என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

மேலும் ஆலயத்திற்குள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை, எனவே ஆலயத்திற்குள் சென்று அந்த அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை அழிக்க சொல்வது என்பது வழிபாட்டு உரிமைகளை தடுக்கக் கூடிய ஒரு விஷயம்.

இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது .

தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில் இதுபோல முறையற்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்யாதிருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் பிறந்ததினம் – சமுதாய சமர்ப்பண தினம்

17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.

  • இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.
  • 1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.
  • 1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
  • 1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • 1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.
  • 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்
  • 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.
  • 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.
  • 1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
  • 1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.
  • 1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.
  • 14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
  • 16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.
  • 1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
  • 13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
  • 1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.
  • 1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.
  • 13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
  • 2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.
  • 1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.

ஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.
சனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.
மூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா?
அதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.
வர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன? யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.
அதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.
உண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.
குழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.

திருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.
இவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.
இந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.
ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

அந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.

இதில் ஊதியூர் மலைக்கு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.

இதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்

நேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.

இந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,

இந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா ? என்று பல கருத்துக்களை கூறினர் )

அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்

இந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.

கொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.

இந்துஆட்டோ முன்னணி ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட அடையாள அட்டை பெற்றுத் தரப்பட்டது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் தேனி நகர் இந்துமுன்னணியின் சார்பாகவும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் சார்பாகவும் தேனி ஆனந்தம் ஆட்டோ நிலைய உறுப்பினர்களுக்கு அமைப்புசாரா ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக நல திட்ட அடையாள அட்டை ஒவ்வொரு (33 பேருக்கு) உறுப்பினர்களுக்கும் தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணி சார்பாக பெற்றுத்தரப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு திரு. ராதாகிருஷ்ணன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் திருச்சிராப்பள்ளி அவர்களும்,திரு ஆர்.ராஜ்குமார் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் தேனி அவர்களும்,மற்றும் நமது தேனி மாவட்ட இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் திரு உமையராஜன் ஜி அவர்களும்,இந்துமுன்னணி தேனி நகர தலைவர் ஆச்சி கார்த்திக் அவர்களும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் நகர தலைவர் திரு ரவிக்குமார் ஜி அவர்களும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் நகர பொதுச்செயலாளர் திரு ரமேஷ் ஜி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் தொழிலாளர் ஒற்றுமையே நாட்டின் வளர்ச்சி..