வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வாழ்த்து மடல்

உயர்திரு. பாலசுப்ரமணிய ஆதித்தனார் அவர்கள்
தினத்தந்தி நாளிதழ்,
சென்னை.

அன்புள்ள திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களுக்கு வணக்கம்.
தினத்தந்தி நாளிதழ் (75ஆம் ஆண்டு) பவள விழாவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த நடுநிலை நாளேடாக என்றும் தினத்தந்தி திகழ்வது பாராட்டுக்குரியது. தமிழை தமிழருக்கு கற்றுத்தந்து, பாமரரையையும் உலக நடப்பு தெரிந்தவனாக ஆக்கிய பெரும் புரட்சியை தினத்தந்தி துவக்கக் காலத்திலிருந்து செய்து வருவதை எண்ணிப் பார்க்கிறேன். எளிய நடை, ஆழமான கருத்து, சிறப்பான வடிவமைப்பு என ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தினத்தந்தி முன்மாதிரியாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.
தினத்தந்தியின் மூன்றாம் தலைமுறை நிர்வாகத்தினராக தாங்கள், உங்கள் பாட்டானாரின் கனவை நினைவாக்குவது பெருமிதம் கொள்ள வைக்கிறது. தற்போது Dt next என்ற ஆங்கில பதிப்பை கொண்டு வந்ததும், தந்தி செய்தி தொலைக்காட்சி, துவங்கிய சில ஆண்டுகளிலேயே அசைக்கமுடியாத இடத்தை பிடிக்க வைத்ததும். இணையதள பத்திரிகையாக வெளியிட்டு வருவது போன்ற தொலைநோக்கு பார்வையுடன் அடுத்த தலைமுறைக்கு தினத்தந்தி கொண்டு சென்றதன் மூலம் பாரம்பரியத்தோடு, நவீன தொழிட்நுட்பம், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சிறந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.
இந்நன்னாளில், உங்கள் பாட்டனார், தந்தை முதலானவர்களின் பன்முகத்தன்மையை எண்ணிப் பார்க்கிறேன். அத்தகையதோர் வளர்ச்சியில் நீங்களும், உங்கள் மகனும் ஊடகத்துறையில் தொடர்ந்து வெற்றி நடைபோட எல்லாவல்ல திருச்செந்தூர் செந்திலாண்டவரை வணங்கி, ஆசிர்வதிக்கிறேன்.
தினத்தந்தியின் 75ஆம் ஆண்டு விழாவில் மாண்புமிகு பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொள்வது தினத்தந்தியின் புகழ் மகுடத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கிறது.
தினத்தந்தி குழுமம் மேலும் மேலும் வெற்றிகள் பல பெற்று தேசத்திற்கு தொண்டாற்றிட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

மாநிலத் தலைவரின் தீபாவளி வாழ்த்துக்கள்

சீனப் பட்டாசுகளை புறக்கணிப்போம்.
சிவகாசி பட்டாசுகளை வெடிப்போம்…
பாரம்பரிய வழக்கத்தை கடைபிடிப்போம்..
இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு #காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்களின் #தீபாவளி வாழ்த்துச் செய்திகள்

வீடுகள் பலம் பெற சக்தி பூஜை கொண்டாடுவோம்

தர்மத்தை காக்க, அதர்மம் அகற்ற அன்னை ஆதிபராசக்தி தனது ஒன்பது அம்சங்களை வெளிப்படுத்தி அகிலத்தை காத்து ரட்சித்தாள். அதையே நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடுகிறோம்.

ஒன்பதாவது நாள் ஆயுதங்களை எல்லாம் பூஜித்து அன்னை வழிபட்ட தினத்தை ஆயுதபூஜை என்று கொண்டாடுகிறோம்.

குறிப்பாக தமிழகத்தில் வீடுகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் என விசேஷமாக ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.

பண்டைய காலத்தில் படைத் தொழிலும், விவசாயமும் முக்கியமானதாக இருந்தது.

எனவே வீட்டுக்கொரு உழவனும், மறவனும் இருந்தான். அவர்களது ஆயுதங்களை இந்த ஒன்பதாம் நாள் பூஜையில் வைத்து வணங்குவது வழக்கமாயிருந்தது.

ஆபத்து வந்தால் எதிர்த்துப் போரிடும் வல்லமையும், ஆயுதங்களும் அவர்களிடம் இருந்தது.

பிற்காலத்தில் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றதால் ஆயுதபூஜையின் தன்மையும் மாறியது.

தற்போது கால்குலேட்டரையும், மௌஸையும் வைத்துக்கூட பூஜை செய்கிறார்கள்.

ஆனால் வீடுகள் பாதுகாப்பானதாக இருக்கிறதா?…

வீட்டை ஒரு கொள்ளையனோ, எதிரியோ தாக்கும் பட்சத்தில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளக் கூடிய பலம் பொருந்திய வீடுகளாக, நமது வீடுகள் இருக்க வேண்டாமா?

ஒரு பாம்போ, விஷ ஜந்துவோ வந்தால்கூட அலறியடித்து ஓடும் சூழல் நமது வீடுகளில் உருவாகி வருகிறது.

எனவே இந்துக்களின் வீடுகள் பலம் மிக்கதாக, எத்தகைய ஆபத்துக்களையும், தாக்குதல்களையும் எதிர்த்து முறியடிக்கும் வல்லமை உள்ளதாக மாற வேண்டும்.

எனவே ஆயுத பூஜை அன்று நமது வீடுகளில் தொழில் சம்பந்தமான ஆயுதங்களுடன், நம்மை தற்காத்துக் கொள்ள தேவையான சில ஆயுதங்களையும் வைத்து வழிபடுவோம்.

மக்கள் தொடர்பு இயக்கம் – அக்டோபர் 1

ஆண்டுதோறும் மக்களை வீடுதோறும் சென்று சந்திக்கும் மக்கள் தொடர்பு இயக்கத்தினை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்துகிறது. தமிழகத்தில் இந்துக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை பற்றி வீட்டுக்கு வீடு சென்று அவர்களை நேரிடையாக சந்தித்து சுற்றறிக்கை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி இந்த மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி காலை முதல் மாலை வரை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைக் கமிட்டி ஊழியர்களும் குறைந்தது 100 வீடுகளாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் இந்துமுன்னணி களமிறங்குகிறது. இந்துக்களின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் இந்து மதத்தின் பெருமைகள், மதம் மாறினால் என்ன ஆகும், சந்தர்ப்பவாத அரசியல் போன்ற சிந்தனைகளை கையிலெடுத்து வீடுதோறும் வருகிறது இந்துமுன்னணி.

வீரத் துறவி அழைக்கிறார்! விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடுவோம் வாரீர்

சென்னை…

இந்துமுன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களும், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்களும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது….

கடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்துமுன்னணி பேரியக்கத்தால் மிகச் சிறப்பான வைகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவின் மூலம் சாதிய ஏற்றத் தாழ்வுகள் , பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்டு இந்துக்கள் மத்தியில் ஒற்றுமை, விழிப்புணர்வு , எழுச்சி ஏற்பட்டு வருகிறது.

33 ஆண்டுகளுக்கு முன்பாக திருவல்லிக்கேணியில் ஒரு பிள்ளையாரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று தமிழகம் முழுதும் இந்து எழுச்சிப் பெருவிழாவாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுதும் 1 லட்சம் பிள்ளையார்களுக்கும் மேலாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 10000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீதி உலாக்களும், 300 க்கும் அதிகமான முக்கிய நகரங்களில்,ஊர்களில் விசர்ஜன ஊர்வலமும் நடைபெறுகிறது.

விழா சிறப்பாக நடைபெற பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை நாடுகிறோம் எனவும்,

எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருளால் தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறோம்.

 

தமிழக முதல்வருடன் இந்துமுன்னணி தலைவர்கள் சந்திப்பு….

இந்துமுன்னணி பேரியக்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி திரு.பழனிசாமி அவர்களை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா . சி . சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் திரு.பக்தன்., மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு.கார்த்கேயன் , மாநில செயலாளர் திரு.மனோகர்., சென்னை மாநகரத் தலைவர் திரு.இளங்கோவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.

பல்வேறு விஷயங்களை கோரிக்கைகளாக முன்வைத்த பொது அவைகளை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்து இயக்க தலைவர்களை   சந்திக்க ஒப்புக்கொண்டவர்  என்ற வகையில் மிகுந்த நன்றியை இந்துமுன்னணி சார்பில்  தெரிவித்துக் கொள்கிறோம்.

 

பவானி ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!!

ஈரோடு மேற்கு மாவட்டம் ….

பவானி ஒன்றியம் சலங்கபாளையம் குளத்தில் உள்ள மண்ணை சட்டவிரோதமாக அள்ள முயன்றவர்களிடம் ,அரசு அனுமதி கடிதத்தை காட்ட சொன்ன இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்குதல் மீது நடத்திய குண்டர்களுக்கு ஆதரவாக செயல் பட்ட தமிழக சுற்று சூழல் அமைச்சரை கண்டித்தும்….

மண்திருடிய குண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்தும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும்

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வரும் கோபி D.S.P. செல்வம் அவர்களை இட  மாறுதல் செய்ய கோரியும் ….

இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் V.S.செந்தில் குமார் தலைமையில் 750 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!! இதில் B.J.P. மாநில செயலாளர் திரு.செந்தில் பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டு கைதானர்.

 

விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா

தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் மக்கள் விழாக்களில் முதன்மையானது ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா. பட்டி தொட்டி எங்கும் வீதிகள் தோறும் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது. என்று அதே தமிழகத்தில் விநாயகர் வீர உலா வருகிறார் எனில் இந்துமுன்னணி மக்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போராடியதுதான் காரணம்.

விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா 2017

நீதித்துறையின் நடவடிக்கை மிகுந்த கவலை அளிக்கிறது – இராம.கோபாலன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை 

நீதித்துறையின் நடவடிக்கை, நீதிபதிகளின் செயல்பாடு 

மிகுந்த கவலை அளிக்கிறது

1994ஆம் ஆண்டு இந்து முன்னணியின் மாநில தலைவர் அட்வகேட் ராஜகோபால் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஐவர் சமீபத்தில் உச்சநீதி மன்றத்தால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். இவ்வழக்கில் நடுநிலையாளர்கள் மனதில் எழும் கேள்விகள் ஊடகத்தின் மூலம் தேசத்தின் முன் வைக்கிறோம்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றம் இதில் தலையிட என்ன அவசியம் வந்தது?

இந்த வழக்கில் குற்றவாளிகள் என கீழ்க்கோர்ட் முதல் சென்னை உயர்நீதி மன்றம் வரை தண்டனை வழங்கி, தண்டனையை உறுதி செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதானால், எல்லா வழக்குகளையும் உச்சநீதிமன்றமே நேரில் விசாரிக்கலாமா?

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை காவல்துறை விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினாலும் அதற்கான ஆதாரங்களை எப்படி திரட்டுவார்கள் என்பதை உச்சநீதி மன்ற நீதிபதிகள் கவனத்தில் கொண்டார்களா?

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த கற்பக விநாயகம் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடி விடுதலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஒரு கிரிமினல் குற்றவாளி, அதிலும் மத அடிப்படை பயங்கரவாதிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வாதாடுவது, நீதிபதியின் மாண்பிற்கு ஏற்ற செயலா? இப்படி கிரிமனல் வக்கீலாக செயல்படுவதானால், இவரது நீதிபதிக்கான அரசு சலுகை, அரசின் நிதி உதவிகளை திரும்ப ஒப்படைப்பதுடன், இனி எந்த நிலையிலும் இவர் நீதிபதி அல்லது நீதியரசர் என்ற பெருமைமிகு குறியீட்டை இவரது பெயருக்கு முன் போட்டுக்கொள்ள அனுமதிக்கூடாது இல்லையா?

இவர் பணத்திற்காக குற்றவாளிகள் தரப்பில் வாதாடியிருப்பதால், இவர் நீதிபதியாக செயல்பட்டது குறித்த ஐயம் எழுகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த ஒருவர், பணத்திற்காக வாதாடுவாரேயானால், இதில் உள்நோக்கம் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.இவரால் தீர்ப்பு வழங்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மேலும், இனி இவரை ஓய்வு பெற்ற நீதிபதி என்ற மதிப்பில் சமூக பிரச்னைகளில் விசாரணை செய்ய கமிஷன் போடும்போது நியமித்துவிடக்கூடாது என மாநில, மத்திய அரசுகளை, உச்சநீதி மன்றத்தை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்த வழக்கில் இரண்டு கொலை குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சராக இருந்த குர்ஷித் அலம்கான் வாதாடியிருக்கிறார். மத்திய அமைச்சராக பொறுப்பில் இருந்தவர், நடுநிலையாக செயல்படுவேன் என எடுத்துக்கொண்டு பதவி வகித்தவர், தற்போது பதவியில் இல்லாதபோது, குற்றவாளிகளுக்கு, அதிலும் கிரிமினல் குற்றவாளிகளுக்கு வாதிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அலம்கானின் செயல்பாடு, குற்றவாளிகள் முஸ்லீம்கள் என்பதால் வாதிடுகிறார் என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் இதுவரை நூற்றுக்கணக்கனோர் ஈவுஇரக்கமின்றி இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். மதுரையில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டும், குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகள் என நீதிமன்றங்களால் தண்டனைப் பெற்றவர்கள் நிரபராதி என விடுதலை ஆகும்போது, குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு இது ஊக்கம் கொடுப்பதாக இது அமையும் என எச்சரிக்கிறோம். 

மக்கள் நீதித்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்த்துவிட்டால், அது பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். நீதித்துறையின் நடவடிக்கை கண்ணிய குறைவாகவும், நீதிபதிகளின் பேச்சு, செயல்பாடு அவர்கள் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாகவும் இருந்து வருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதிமன்றத்தின் மீது மக்கள் பெரு நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், இன்றோ அது கேள்விக்குறியாகி வருகிறது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மீது தமிழக அரசு காலதாமதப்படுத்தாமல் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)