All posts by Admin

தனியார் இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் வைத்து வழிபாடு- மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

21.08.2020இந்த ஆண்டு கொடிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவேண்டும் என்பதில் இந்து முன்னணி தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறது.தமிழகத்தில் நோய் தாக்கம் ஏற்பட்ட நாள் முதல் பல்வேறு நலத் திட்ட பணிகளை தமிழகமெங்கும் செய்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்திருக்கிறது இந்து முன்னணி பேரியக்கம்.ஆகவே சமுதாய அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை திட்டமிட்டது. அந்த அடிப்படையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறாது, ஊர்வலங்கள் இருக்காது, சேர்ந்து சென்று விசர்ஜனம் (விநாயகர் கரைக்கும்) நிகழ்ச்சிகள் இருக்காது என்று இந்து முன்னணி ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு தற்போது மாண்பமை உயர்நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை சொல்லியிருக்கிறது.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் கொண்டாடப்படும்.22 ம் தேதி அன்று தனியார் இடங்களில், வீடுகளில், கோவில்களில் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவரவர் ஏற்பாடுகளில் (கூட்டம் சேராமல்) அன்று மாலையே விநாயகர் திருமேனிகளை விசர்ஜனம் செய்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.அரசும், அரசு அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.விநாயகரின் அருளால் இந்த கொடிய நோய் தொற்றானது அழியும். தமிழகம் மீண்டும் நல்ல நிலையை அடையும்.தாயகப் பணிகளில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மாநிலத்தலைவர்

ஹிந்துக்களுக்கு அநீதி – விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை – துரோகம் விளைவிக்கிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு – இந்துமுன்னணி கடும் கண்டனம் – திட்டமிட்டபடி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர்கள் வைக்கப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு

13.08.2020விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளதை
இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது.கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது.இதுவரை பலவித கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை முன்னெடுத்து வந்துள்ளது என்பதை அரசும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர்.இந்நிலையில் இந்த ஆண்டு உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள கொராணா தொற்று நோய் காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 5ஆம் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர்.மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை தான், நோய் எதிர்ப்பு சக்தியையும், நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதற்காகவே, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும், அதே சமயம் ஆன்மீக சூழ்நிலையிலும், கட்டுப்பாட்டுடனும் நடத்திட ஏற்பாடுகளை செய்து வருகிறது.தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்துனை ஆர்வம் காட்டியது, உச்சநீதி மன்றம் வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவர். மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது, அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்துள்ளது வேதனையானது.விநாயகரிடம் விளையாடிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் நிலை என்னவானது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி கொடுத்தும், நாகூர் தர்கா விழாவிற்கு 40 கிலோ சந்தனமும் கொடுத்தது தமிழக அரசு.தூத்துக்குடி பனிமய மாதா விழா குறித்து பாதிரியார் பேட்டி தர மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவு கொடுக்க வைத்தது தமிழக அரசு .ஆனால், இந்துக்களின் அனைத்து விழாக்களையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதை இந்துக்கள் அறிவர்.ஒடிசாவில் ஜகந்நாதர் தேர் திருவிழாவின் சிறப்பை உணர்ந்து உச்சநீதி மன்றம் கட்டுப்பாடுடன் நடத்த அனுமதி அளித்தது. இதே நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுடன் நடத்த இந்து முன்னணி அரசை கேட்டுக்கொண்டது.ஆனால் தற்போது தமிழக அரசு ஹிந்துக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில், இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது.பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் , தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை இலட்சம் இடங்களில் திட்டமிட்டபடி
நடக்கும் என்பதை இந்து முன்னணி உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.தாயகப் பணியில்காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்

10.08.2020

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கடுமையான மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசும், மாநில அரசும் நிதி அளித்துள்ளது .

இந்த சமயத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் இந்து முன்னணியின் பணிவான கோரிக்கை

சாத்தான்குளத்தில் உயிரிழந்த இரண்டு பேருக்கு இலட்சக்கணக்கில் அனைத்து கட்சிகளும் பணம் வழங்கினார்கள் .தமிழக அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது .

அதேபோல மூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது இந்து முன்னணி கோரிக்கை

ஒருவேளை தமிழக அரசு அவர்கள் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்காவிட்டால், இதற்காக எதிர்கட்சி தலைவர் குரல் கொடுக்காவிட்டால், சிறுபான்மை மக்களுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா? என்ற ஒரு கேள்வி எழும் அல்லது இன்னும் தேர்தல் எட்டு மாதம் தான் இருக்கிறது அந்த தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு நிதிஉதவி, அரசு வேலை தமிழக அரசு கொடுத்ததா என்ற ஒரு ஐயப்பாடு வரும்

ஆகவே நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக ஏழைத் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.

ஆகவே சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு வழங்கியது போல நிதிஉதவியும், அரசு வேலையும் கேரளாவில் மண்சரிவு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கும் வழங்க வேண்டும்

மேலும் இதற்கு முன் கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கேரள அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. ஆனால் தற்போது தமிழக கூலி தொழிலாளர்களுக்கு கம்யூனிச கேரள அரசு 2 லட்சம் ரூபாய் தான் வழங்கியுள்ளது இது கண்டிக்கத்தக்கது.

அரசுகள் பாகுபாடு பார்க்காமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை ஒட்டுமொத்தமாக காவல்துறையினர் மீது புகார் கூறும் அரசியல் கட்சிகள் இப்பொழுது பாராமுகமாக இருப்பது ஏன்?

*வி.பி.ஜெயக்குமார்*
*இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர்*
பரமன்குறிச்சி

இந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

07.08.2020

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்துக் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதூக்கியது. அவர்கள் முருகனை இழிவாகப் பேசியதைக் கேட்ட மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்களின் ஒருமித்த ஆன்மீக உணர்வால் இன்று அந்தக் கூட்டம் கதிகலங்கிப் போயுள்ளது.

இது போன்ற கடவுளைப் பழிப்பவர் கூட்டம் தமிழகத்தில் இனி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது. இனி எவருக்கும் அந்த எண்ணம் கூட வரக்கூடாது.

எனவே நமது பக்தியை, சக்தியை கயவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
என் சாமி, என் கோவில், என் பாரம்பரியம் பற்றி இழிவாக பேச யாருக்கும் உரிமையில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஆகவே இந்துமுன்னணி சார்பாக தமிழக இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

9 ம் தேதி (ஞாயிறு) அன்று களமிறங்குவோம். நமது பலத்தை காட்டுவோம்.

அன்றைய தினம் அவரவர் வீட்டின் முன்பு கோலமிட வேண்டும். மாலை 6.01 மணிக்கு அவரவர் வீட்டின் வாசலில் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். (வாசலில் முடியாதவர்கள் வீட்டிற்குள்)

நமது வீட்டின் வாசலில் முருகன் படம் அல்லது வேல்படம் அல்லது வேல் வைத்து வேல் பூஜை செய்ய வேண்டும்.

நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லி அவர்களையும் இந்த மகத்தான பணியில் ஈடுபட வைக்க வேண்டும்.

லட்சக்கணக்கானவர்களை ஈடுபட வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நமக்காக அல்ல நமது தர்மத்திற்காக நமது பாரம்பரியத்தை காப்பதற்காக.

வணக்கம்

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

ஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

03.08.2020

ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் அதே இடத்தில் கோவில் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியது இந்துமுன்னணி. தற்போது நமது கனவு நனவாகப் போகிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

மக்கள் அனைவரும் அன்றைய தினம் (ஆகஸ்ட் 5 ம் தேதி – 2020) காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா எனும் மந்திரத்தை 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்வோம்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த புண்ணிய தினத்தில் நாமும் பங்கேற்று ஸ்ரீ ராமனது அருளுக்கு பாத்திரமாவோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

01.08.2020

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த சமயத்தில் முழுமுதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. இது இந்துக்கள் அனைவரது வீட்டிலும் கொண்டாடப் படும் விழா . விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி பேரியக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக, அதே சமயம் எளிய முறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலங்கள் இல்லாமல் எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது.

கொரோனா காரணமாக பீதியிலுள்ள மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான்.

ஆகவே விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்துகொடுக்கவேண்டும்.

மேலும் மக்கள் அவரவர் இல்லங்களில் குறைந்த பட்சம் மஞ்சள் பிள்ளையாரையாவது வைத்து விநாயகர் பெருமானை வழிபட்டு இந்த கொடிய காலகட்டம் மாறிட மனமார பிரார்த்தனை செய்திடவேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணிகளில்

காடேஸ்வராசி.சுப்பிரமணிம்

மாநிலத்தலைவர்

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா? – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம்! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

11.07.2020

மத பாகுபாடு பார்த்து கட்டணங்களை வசூலிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் நடைபெறும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மதப் பாகுபாடு பார்க்கின்றார்கள் என்பது இந்து முன்னணியின் தொடர் குற்றச்சாட்டு.

உதாரணமாக தமிழகத்திலுள்ள கோவில்களை மட்டும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகின்றது. கோவிலில் வருகின்ற வருமானத்தை அரசு எடுத்துக் கொள்கின்றது .

முஸ்லிம்களின் மசூதி ,தர்கா ,கிறிஸ்தவர்களின் சர்ச் இவர்களுடைய வருமானத்தில் அரசு கை வைப்பதில்லை .

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மத பாகுபாடு பார்த்து கட்டணங்களை வசூலித்து வருகின்றது .

அரசுக்கு வருமானம் தராத சர்ச் மசூதிகளுக்கு சாதாரண கட்டணம் 120 யூனிட்டுக்கு 2 ரூபாய் 85 பைசாவும், 500 யூனிட்டுக்கு மேல் 5 ரூபாய் 75 பைசாவும் வசூலித்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் நிர்வகிக்கும் கோவில்களுக்கு அதிகபட்சமாக எட்டு ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பது என்பது பாரபட்சமானது.

மதசார்பற்ற அரசாங்கம் அனைத்து மதத்தையும் ஒரே மாதிரி பார்ப்பதுதான் சரியானது. ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தினால் பெரும்பான்மையிடம் அதிக கட்டணம் வசூலித்து அவர்களுக்கு கொடுப்பது வேதனைக்குரியது.

தமிழக அரசாங்கம் ஹிந்துக்களை மட்டும் ஓரவஞ்சனையாக நடத்துகிறது என்று இந்து முன்னணி குற்றம் சாட்டுகின்றது ,வன்மையாக கண்டிக்கின்றது.

இதை உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும் அனைத்து இந்து கோயில்களுக்கும் மின்கட்டணச் சலுகை வழங்க வேண்டும். இல்லை என்றால் இந்து முன்னணி நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கும்.

அனைத்து மின்சாரத்துறை அலுவலகம் முன்பும் இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி! வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநில தலைவர்

கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

01.07.2020

கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வழிபாடு சார்ந்த விஷயங்களுக்கு குறிப்பாக கோவில்களைத் திறப்பது உள்ளிட்ட விஷயங்களில் தமிழக அரசு மெத்தனம் காட்டிவிட்டது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மக்கள் பீதியில் , மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான். இதை யாரும் மறுக்கமுடியாது.
இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிகம் இருக்கிறது. அதற்கு காரணம் கோவில்கள் தமிழகத்தில் திறக்கப்படாததுதான் என்று மக்கள் எண்ணுகிறார்கள். கோவில்கள் திறந்திருந்த பல மாநிலகளில் இன்று கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்த சமயத்தில் முழு முதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் வழிபாடு எத்தகைய கடும் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்துக்கள் அனைவரது வீட்டிலும் இது கொண்டாடப் படும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.
ஆகவே தமிழக அரசு இதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது.
அதே சமயம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரே அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவினை தக்க ஏற்பாடுகளுடன் எளிமையாக நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விநாகர் சதுர்த்தி முலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுகிறார்கள். வியாபார புழக்கம் பெரிய அளவில் ஏற்படுகிறது. கிராமியக் கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள், விநாயகர் திருமேனி செய்பவர்கள் வாகன ஓட்டுனர்கள் இப்படியாக பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடியது விநாயகர் சதுர்த்தி ஆகும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி இயக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக எளிய முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலம் சிறப்பாக கொண்டாடுவதில்லை என இந்து முன்னணி முடிவெடுத்துள்ளது.
பாரத பிரதமரின் அறிவுரையின் படி எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்திக்காக பொது மக்களிடம் நன்கொடை வாங்குவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது.
எனவே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதர்கான வழிமுறைகளை ஏற்படுத்தி விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தி விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு வழிகாட்டி உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணிகளில்

காடேஸ்வராசி.சுப்பிரமணிம்
மாநிலத்தலைவர்

இராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி

28.06.2020

கே.இராமமூர்த்தி மாவட்ட பொதுச்செயலாளர் இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் அதியமான் என்ற இடத்தில் கோவிலை சர்ச் ஆக மாற்றியுள்ளதாக முகநூலில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இப்படி ஒரு சம்பவம் இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் நடைபெறவில்லை.
இராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அதனால் இப்படி ஒரு சம்பவம் நடைபெறப் போவதும் இல்லை.

ஆகவே இது சம்பந்தமான உண்மையான தகவலை தெரியப்படுத்தினால் இந்து முன்னணி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கே. இராமமூர்த்தி
மாவட்ட பொதுச்செயலாளர் இந்துமுன்னணி, இராமநாதபுரம்