Monthly Archives: October 2019

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
திருப்பூர்

31.10.19

பத்திரிகை அறிக்கை

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.

தற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.
இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.

கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .

அந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .

ஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

மேலும் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .

தெய்வீக பணியில்

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

ஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா? – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை

இராம கோபாலன், நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

31-10-2019

பத்திரிகை அறிக்கை
ஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா?
கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, பராமரிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது, என தமிழக அரசு கூறிக்கொண்டது. அப்போதே, இந்து சமுதாயத்திடமிருந்து ஆன்மிகக் கேந்திரமாக விளங்கும் ஆலயங்களை அப்புறப்படுத்தவே இந்த சதி என்று எச்சரிக்கப்பட்டது. இன்று கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே பட்டா கொடுக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கோயிலை அழிக்கும் அப்பட்டமான இந்த துரோகச் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
நமது முன்னோர்களும், தமிழகத்தை ஆண்ட மன்னர்களும், ஆலயங்கள் ஆயிரமாயிரம் காலத்திற்கு நீடித்து இருந்து, திருவிழாக்கள், பூஜைகள் நல்லமுறையில் நடைபெற தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை, சுவாமியின் பெயருக்கு எழுதி வைத்தனர். இதனை நிர்வகித்து வந்த தர்மகர்த்தாக்களின் பேரில் குற்றச்சாட்டை சுமத்தி, இந்து சமய அறநிலையத்துறை கோயில்களையும் சொத்துககளையும் எடுத்துக் கொண்டது. சொத்துக்களை பட்டாப்போட்டு கொடுக்க அரசாணை வெளியிட்டதன் மூலம், கொடையாளர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறது தமிழக அரசு.
ஆனால், இத்தனை ஆண்டுகள் நிர்வகித்த, இந்து சமய அறநிலையத்துறையின் லட்சணம் என்ன?
இந்து சமய அறநிலையத்துறை அளித்துள்ள கணக்கின்படி, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போயிருக்கின்றன. பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போயுள்ளன. பல பழமையான பஞ்சலோக சுவாமி திருமேனிகள், விக்கிரகங்கள் களவாடி கடத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் உடந்தையாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் இருந்துள்ளனர் என்பது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். சுவாமி விக்ரகங்கள் மீட்கப்பட்டும் வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்ய தகுதியற்றது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
இந்து சமய அறநிலையத்துறை எந்தவொரு கோயிலையும் கட்டவில்லை, மேலும் அதன் அதிகாரிகள்கூட தங்களது எந்தவொரு சொத்தையும் கோயிலுக்கு அளித்ததில்லை. தருவதெல்லாம் பக்தர்கள் தான், சுருட்டுவது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தான்.
ஓரிரு மாதங்களுக்கு முன்னர், கோயில் சொத்துக்களை வைத்துள்ளவர்களுக்கு பெயர் மாற்றம் செய்துகொள்ள இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. திட்டமிட்டு, கோயில் சொத்துக்களை விழுங்க நடக்கும் சதியாக இப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்தும் கூட்டுக் கொள்ளை அடிக்கவே இந்த அரசாணை போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசு, சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சம்மதத்தோடு ஆக்கிரமிப்பாளர்களுக்கு, அந்த சொத்துக்களை பட்டாப்போட்டு வழங்கப்போவதாக கூறியுள்ளது. இது எப்படியிருக்கிறது என்றால், திருட்டுக்கு உடந்தையானவர்களின் சம்மதத்துடன், திருடனிடமே பொருளை கொடுப்பதுபோல் உள்ளது அரசின் நடவடிக்கை.
பல கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை, இந்து முன்னணி போராடி மீட்டுக்கொடுத்துள்ளது. மேலும், தொடர்ந்து கோயில்களையும், கோயில் சொத்துக்களையும் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறது.
கோயில் சொத்து குலநாசம் என்பதை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அதனை நேரிலும் காண்கிறோம். கோயில் சொத்து கோயிலுக்கு, கோயில், இந்துக்களின் சொத்து. கோயிலையும், கோயில் சொத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். சென்ற மாதம் நடைபெற்ற இந்து முன்னணியின் மாநில செயற்குழுவில் இதனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வருகின்ற திங்கள் கிழமை (4.11.2019) அன்று அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரிடம், பக்தர்களின் சார்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையை ஆட்சேபித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளது.
எனவே, தமிழக அரசு, கோயில் நிலத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாப்போட்டு கொடுக்கும் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசு ஆலயத்தைவிட்டு வெளியேற வேண்டும். இதனை வலியுறுத்தி இந்து முன்னணி, பக்தர்களின் ஆதரவோடு வீதியில் இறங்கிப்போராடுவதோடு, சட்டரீதியான போராட்டத்தையும் நடத்தி இதற்கு முடிவு கட்டியே தீரும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

மதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை

23.10.19இந்து முன்னணி இந்து மதத்தை வளர்க்கவும், பரப்பவும் மற்றும் இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச உள்ள ஒரு அமைப்பு ஆகும்.தமிழகத்தில் உள்ள கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இளைஞர் அணி உள்ளதுபோல் இந்து முன்னணியிலும் இந்து இளைஞர் முன்னணி உள்ளது (HYF).இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல் அக்டோபர் 15ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் பிறந்த தினம் தேசிய அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12 ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது . அன்றைய தினமும் HYF சார்பாக சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் இந்து இளைஞர் முன்னணி இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரிகளில் நடத்துவதாக கற்பனையாக கூறி அதைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருகிறது.இதே கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் (சகோதரத்துவ தினம்) விழாவிற்கு முன்னதாக மாணவர்கள் வண்ணக் கயிறு(கலர்) கட்ட கூடாது, இது சாதியத்தை குறிக்கிறது என்ற பொய் அறிக்கையை வெளியிட்டது இதையும் ஊடகங்கள் தெரிவித்தன.இப்படி தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இந்து மதத்திற்கு எதிரான கிறிஸ்தவ அதிகாரிகள் தங்கள் பதவியை பயன்படுத்தி இன்று விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்1.அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் 95% மாணவர்கள் இந்துக்கள் .ஆனால் அவர்களுக்கு கட்டாயமாக கிறிஸ்தவ (இயேசு ஜெபம்) பிரார்த்தனை நடத்துகின்றனர்.2.இப்பள்ளிகளில் பைபிள் போதனையும், பைபிள் விநியோகம் நடைபெறுகிறது3.இந்து மாணவிகள் பூ வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, மஞ்சள் பூசக்கூடாது, மருதாணி வைக்க கூடாது என்று தண்டிக்கப்படுகிறார்கள்4.இந்து மத கடவுள்களை மட்டம் தட்டிப் பேசுகிறார்கள்5.அரசு பள்ளிக்கூடங்களிலும் பைபிள் வினியோகம் அடிக்கடி ஆங்காங்கே நடக்கிறது இதை எதிர்த்து இந்து முன்னணி நூற்றுக் கணக்கான இடங்களில் காவல்துறையிடம் புகார் செய்துள்ளது. கல்வி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளது.6.கிறிஸ்தவ பள்ளிகள் சுதந்திர தினத்தையும் ,குடியரசு தினத்தையும் முறையாக கொண்டாடுவதில்லை .
இதை எதிர்த்து இந்து முன்னணி பல இடங்களில் போராடி உள்ளது.7. கிறிஸ்தவப் பள்ளி கல்லூரிகளில் கிறிஸ்தவ மத போதனை கட்டாயப் படுத்தப் படுகிறது.8.முஸ்லீம் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை விடுகிறார்கள்.9.கல்லூரிகளில் கூட வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களுக்கு தொழுகை நேரம் ஒதுக்கி விடுமுறை அளிக்கிறார்கள். இது சில இந்துக் கல்லூரியிலும் நடக்கிறது .10.நக்சல் அமைப்புகளும், இந்து விரோத அமைப்புகளும் (SFI, DYFI etc) பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேச விரோத கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்11. நக்சல் வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் மாணவர்கள் விடுதிகளில் தங்கி இருந்து தேசவிரோத, இந்து-விரோத கருத்துகளை பரப்பி வருகின்றனர்.12.முஸ்லீம் அமைப்புகளும், கிறிஸ்தவ அமைப்புகளும் பள்ளி கல்லூரிகளில் செயல்படுகின்றனர்.இவ்வாறு மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் நெடுங் காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் எந்த சுற்றறிக்கையையும் , எந்த விளக்கத்தையும் கேட்டு கடிதம் எழுதாத கல்வித்துறை இப்போது மட்டும் அறிக்கை கேட்பது ஏன்?உண்மையிலேயே இது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தானா? இல்லை அங்கே வேலை செய்யும் விஷமிகள் வேண்டுமென்றே இதுபோன்ற செய்திகளை ஊடகத்திற்கு கொடுத்தார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இந்து இளைஞர் முன்னணி பள்ளி, கல்லூரிகளுக்குள் செயல்படவில்லை. இது இளைஞர்களுக்கான பொது அமைப்பு. இதைப்பற்றி மட்டும் அறிக்கை பள்ளிக்கல்வித்துறை கேட்பது ஏன்?ஆகவே பள்ளி கல்வித்துறை இந்து விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதனால் தான் சிறுபான்மை மதவெறி பிடித்த அதிகாரிகள் துணிச்சலுடன் விதிகளை மீறி இதுபோன்ற கடிதங்கள் எழுதுகிறார்கள்.தமிழக கல்வித்துறை மொத்தமாக மதவெறி பிடித்த கிறிஸ்தவ அதிகாரிகளின் கோரப் பிடியில் உள்ளது .தமிழக அரசு இந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இந்த கிறிஸ்துவ மதவெறியர்களிடமிருந்து மாணவர்களையும் கல்வித் துறையையும் காப்பாற்ற இந்துக்கள் முன்வர வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் இதுபோன்ற எந்த அறிக்கையும் பள்ளிக்கல்வித்துறை தரவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதுவும் ஊடகங்களில் வந்துள்ளது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு இந்து முன்னணி பேரியக்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.ஒருவேளை இந்த செய்தி பள்ளிக்கல்வித்துறை வெளியிடாத பட்சத்தில் பொய்யான தகவல்களை தரும் ஊடகங்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறதுதாயகப் பணியில்சி‌. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

அப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்

அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று அவரைப் பற்றி சில துளிகள்……

தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர்

இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே.

நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர்.

‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார்.

ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர்.

‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியவர்.

சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம்,
‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

மேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக இருந்த, பள்ளி ஆசிரியர் திரு. பந்து மண்டல் மற்றும் அவரது குழந்தை, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த கொடூர செயலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருகிறது, மாநில அரசுகள், மதத்தின் பெயரால் கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சுயலாபத்திற்காக வழக்கை இழுத்தடிப்பதாலும், நீர்த்துப்போக செய்வதாலும் குற்றவாளிகளுக்கு பயமில்லாமல் போகிறது. இஸ்லாமிய மதவாதிகள் மூளை சலவை செய்து கொடூர செயலை செய்ய தூண்டுகிறார்கள். இது போன்ற கொடூரமான சம்பவங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இத்தகைய கொடூர செயல்களை செய்பவர்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள், குற்றவாளிகளுக்கு உதவுபவர்கள், குற்றவாளிகள் மறைந்திருக்க இடமும் பொருள் உதவியும் அளிப்பவர்கள் ஆகியோரும் தண்டிக்கும்போது மட்டுமே இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்க முடியும்.
இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தாலும், மதபயங்கரவாதிகளால் செய்யப்படும் தனிப்பட்ட முறையிலான கொலைகள் தொடர நமது நாட்டு நீதி பரிபாலனத்தின் பலவீனமும் காரணமாக இருக்கிறது என்பது வேதனையான உண்மை.
நமது தமிழகத்தில், தஞ்சையில் ராமலிங்கம் என்பவர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஓராண்டாக வழக்கு விசாரணை அளவிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இதுபோன்ற செயல்பாட்டால் குற்றவாளிகளுக்கு, பயம் விட்டுப்போகிறது. மேலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்படும் அவலம் நீடிக்கிறது. குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதும், தாக்குவதும் எந்த அளவு குற்றவாளிகள் தைரியமாக செயல்பட முடிகிறது என்பதற்கு அவை எடுத்துக்காட்டாகும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற கொடூர தாக்குதல் தொடர்கிறது என்பதை கவனத்தில்கொண்டு, குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மாநில காவல்துறைக்கு வழிகாட்டுவதன் மூலம் மத பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மேற்கு வங்க மாநில அரசு, குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்