சிலநாட்கள் முன்பு, நிகழ்ச்சி ஒன்றில், இசைஞானி இளையராஜா அவர்கள், ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்ற ஒரு ஆவணப் படத்தைப்பார்த்தேன். ஆனால், உண்மையில் உயிர்தெழுந்தவர் மகரிஷி ரமணர் அவர்களே எனக் கூறினார்.
கிறிஸ்தவ மதத்தில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பது கிறிஸ்தவ நாடுகளிலேயே ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்டு உள்ளது. இசைஞானி இளையராஜா அவர்கள் அத்தகைய ஒரு செய்தியை, தான் பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால், அப்படிப்பட்ட நிகழ்வு உண்மையில் நமது தமிழ்நாட்டில் ரமண மகரிஷி வாழ்வில் நடந்ததை சுட்டிக்காட்டியுள்ளார் இளையராஜா அவர்கள். ஏசு குறித்து அவர் விமர்சனமோ, தனிப்பட்ட கருத்தோகூட தெரிவிக்கவில்லை.
மகாத்மா காந்திஜி, இயேசு கிறிஸ்துவ என்பவர் கண்ணுக்கு தெரியாத பரம்பொருளாக விளங்குகிறார் என்று நீங்கள் நம்பச் செய்கிறீர்கள். ஆனால், நான் முயற்சி எடுத்து, புரிந்துகொண்ட வரையில் அதில் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது, என்று அவர், கிறிஸ்தவ பாதிரிக்கு எழுதிய கடிதம் அமெரிக்காவில் ஏலத்தில் விடப்போவதாக வந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அறிவியல் அறிஞர் கலிலீயோ, உலகம் உருண்டை என்று கண்டுபிடித்து சொன்னார். பைபிளில் உலகம் தட்டை என்று இருப்பதற்கு இது எதிரானது எனக் கூறி, மதநம்பிக்கையை குலைக்கும் கருத்தை தெரிவித்தார் என அவருக்கு விஷம் கொடுத்து கொன்றனர் கிறிஸ்தவ பாதிரிகள். சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கொலைக்கு, கிறிஸ்தவ மதகுருவான போப் அவர்கள் மன்னிப்பு கோரினார். அறிவியல் உண்மையை கூறிய ஒருவரை கொன்றதற்குக்கூட சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதக்குரு மன்னிப்பு கேட்டது கேலிக்கூத்தானது. பைபிளில் உள்ளது என்பதால், உலகம் தட்டையாக இல்லையே!
கிறிஸ்தவர்கள், நாள்தோறும், வீதிதோறும் சட்டவிரோதமாக, இந்து தெய்வங்களை சாத்தான் என்றும், இந்துக்களை பாவிகள் எனப் பிரச்சாரம் செய்து வருவது எந்த வகையில் நியாயம்? மற்ற மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் கிறிஸ்தவர்கள், தங்கள் மதமான கிறிஸ்தவத்தின் நம்பிக்கை பொய் என வெளியிட்ட விஷயத்தை கூறியதற்கு இசைஞானி இளையராஜாவை ஏன் கண்டிக்க வேண்டும்? ஆர்ப்பாட்டம் ஏன் நடத்த வேண்டும்?
இந்துக்கள் வணங்கும் ஆண்டாளை, தாசி என்று, உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்து, அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியதுடன், பகுத்தறிவாதிகள் இதனை ஏற்பார்கள் என கூறினார் வைரமுத்து. இந்த பொய்யான, அபாண்டமான கருத்தை இந்து முன்னணி கண்டித்தது. இதற்குக்கூட ஊடகங்கள் விமர்சனம் செய்தன. இது கருத்துரிமையை முடக்கும் செயல் என வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசிய கருத்துரிமைவாதிகள் இளையராஜா விஷயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?
இந்த இரட்டை வேடத்திற்குக் காரணம் கோழைத்தனம், அல்லது விலைபோய்விட்டனர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?
கிறிஸ்தவர்கள், மற்ற மதங்களின் மேல் செய்யும் வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்த்து பல ஊர்களில் இந்து முன்னணி தொடர்ந்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும், பிரச்சாரம் செய்தவர்களை பிடித்துக்கொடுத்தும் வருகிறது. சட்டவிரோத சர்ச்/ ஜெபக்கூடங்களை அகற்ற உயர்நீதி மன்றம் உத்திரவிட்டதைச் சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீது தமிழக அரசு, காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கிறிஸ்தவ அமைப்புகள் இசைஞானி இளையராஜா மீது கொடுத்துள்ள புகார் முறையற்றது, கண்டிக்கத்தக்கது என இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.