நேற்று 08/03/2020
திருப்பூர் மங்கலத்தில்
நடந்தது என்ன..?திருப்பூர் அருகே உள்ளது மங்கலம்..
இங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் சரிசமமாக வசிக்கிறார்கள்.மங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில்
இந்துக்களே பெரும்பான்மை .இந்நிலையில்
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தினம் தோறும் சாலைகளை மறிப்பது இந்துக்களை தாக்குவது, பெண்களை சீண்டுவது, இந்து கடவுள்களை இழிவு படுத்தி பேசுவது
என இஸ்லாமியர்களின் அராஜகம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.இதற்கு முடிவு கட்ட
ஒட்டுமொத்த கிராம மக்களும்
ஒன்று சேர்ந்து இந்து மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி இந்த அராஜகத்திற்கு எதிராக பெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.அந்த பொதுக்கூட்டம் நேற்று மாலை துவங்கியது.
நேற்று காலையில் இருந்தே
இஸ்லாமியர்களின் அராஜகமும் துவங்கியது.நிகழ்ச்சிக்காக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது .அதை கழட்ட வேண்டும் என முஸ்லிம்கள் அராஜகம் செய்தனர் .எனவே மூன்று சாலைகளில் இருந்த தேசியக்கொடிகள் போலீசாரின் நெருக்கடியால் கழட்டப்பட்டன.பொதுக்கூட்டத்திற்கு வரும் சாலைகள் மொத்தம் நான்கு
ஒன்று அவிநாசி வழியாக வரும் சாலை, இரண்டு திருப்பூரில் இருந்து வரும் சாலை, மூன்று பல்லடத்தில் இருந்து வரும் சாலை,நான்கு சாமளாபுரத்லிருந்து வரும் சாலை…அவிநாசி சாலையை தவிர
மற்ற மூன்று சாலைகளையும்
முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களை
மறிப்பதும் தாக்குவதும் ஆங்காங்கே அரங்கேறின.தகவல் அறிந்து போலீசார் செல்வதும் அவர்களை கலைப்பதும் என்ற சூழ்நிலை பொதுக்கூட்டம் முடியும்வரை தொடர்ந்தது..பொதுக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் இந்த முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகினர்.பொதுக் கூட்டம் முடிந்து
பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும்போது 3 சாலைகளை முஸ்லிம்கள் ரோட்டில் வந்து அமர்ந்து பாதையை மறித்துக் கொண்டனர்.இதனால் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.கடைசிவரை திருப்பூர் மெயின் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசாரால் அப்புறப் படுத்தவே முடியவில்லை.ஒரு பக்கம் இந்து பொதுமக்கள் தன்னெழுச்சி பெற்று
இஸ்லாமிய அராஜகத்திற்கு எதிராக போராட வந்தது மகிழ்ச்சி என்றாலும்
இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி
ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது என்பதற்கு மங்கலம் சம்பவம் ஒரு உதாரணம்.முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இந்து மக்கள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். ஊரைப் பாதுகாக்க வீட்டிற்கு ஒருவர் உறுப்பினராக வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறைகூவல் விடுத்தார். அது காலத்தின் கட்டாயம்
Tag Archives: #ஆர்பாட்டம்
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பெண்களை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
அதில் சம்பந்தப்பட்ட ஒருவரும் தப்பிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்ததை இன்று இந்து முன்னணி 20.3.2019 புதன் கிழமை நடத்தியது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:
* தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
* பெண்கள் வன்கொடுமையைத் தடுக்க காவல்துறை, நீதிமன்றம் துணை நிற்க வேண்டும். மனிதாபிமானமற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, மக்களிடையே நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையை குலைய வைக்கிறது.
* ஊடகம் முதலானவை, குற்றவாளிகளுக்கு எதிராக புகார் கொடுப்போரின் ஆதாரங்களை வெளியிடுவது, குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சி மட்டுமல்ல, வழக்கை திசைத்திரும்பும் செயலும்கூட. இதுபோல் பாதிக்கப்பட்டு, புகார் கொடுத்தால், நாமும் சமூகத்தால் கேவலப்படுத்தப்படுவோம் எனப் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தங்களது டி.ஆர்.பி. ரேட் உயர்வதற்காக இதுபோல கீழ்த்தரமாக செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளிகளில், கல்லூரிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்ற நிலை நீடிக்கிறது. உதாரணமாக, சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை! இதுபோல பல உதாரணங்கள் இருக்கின்றன!
* சின்னத்திரை, சமூக ஊடகங்கள் சமூக சீரழிவிற்கு வித்திடுகின்றன. அவற்றை முழுமையாக சென்சார் (தணிக்கை) செய்ய வேண்டும். சினிமா சென்சார், முன்போல இப்போது இல்லை, கடுமையான வரன்முறையை ஏற்படுத்த வேண்டும்.. மோசமான கருத்தை வெளியிடும் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும்.
* கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினம், முத்தபோராட்டம் போன்றவற்றை நீதிமன்றம், காவல்துறை துணிவோடு தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை எதிர்த்து மக்கள் போராட முன் வர வேண்டும்.
* பள்ளிகள், கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி, மாணவர்களை நல்வழி படுத்த தமிழக அரசு கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்த, ஆயுத போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் நகர்புற நக்ஸல்களையும், கிறிஸ்தவ என்.ஜீ.ஓக்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும், மேலும் அதில் தொடர்புடையவர்கள் பற்றி விசாரணையை முடுக்கி விட்டது மட்டுமல்ல, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.
* பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமைப்படுத்தி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை, சிபிஐக்கு பூரண ஒத்துழைப்புக்கொடுத்த தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்
திருப்பூரில் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.
ஒரு புறம் கள்ள காதலுக்கு ஆதரவாகவும்
இயற்கைக்கு எதிரான ஒரினச்சேர்க்கைக்கு
ஆதரவாக தீர்ப்பு கொடுத்து எய்ட்ஸ் நோய் வருவதை ஊக்கப்படுத்திவிட்டு..
மறுபுறம் தீபாவளிக்கு வருடத்தில் ஒரு நாள்
பட்டாசு வெடித்தால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தீர்ப்பு சொன்னால் இது நியாயமாக இருக்காது..
இந்து பண்டிகைகளை குறிவைத்து அழிக்க சர்வேச சதி நடப்பதாக இந்து முன்னணி கருதுகிறது.
மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை இந்த ஆட்சியாளர்களால் ஏன் அமல்படுத்த முடியவில்லை..? தீபாவளிக்கு மட்டும் அவசர அவசரமாக கைது நடவடிக்கை ஏன்..?
பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் இல்லை என்றால் ஆட்சியாளர் வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்து முன்னணி இந்து சமுதாயத்தின் மீது
நடக்கும் தாக்குதலை வேடிக்கை பார்க்காது..
இதற்கு எதிராக தமிழகத்தில் இந்து முன்னணி முன்னின்று போராட்டங்களை நடத்தும்.
இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் அப்பாவி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த ஊரில் சுமார் 1200 முஸ்லீம் குடும்பங்களும் 400 இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த இந்து குடும்பங்களை மதம்மாறுமாறு முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர் மதம்மாற மறுத்த காரணத்தாலும் இவர்களது அராஜகத்தை எதிர்த்த காரணத்தாலும் இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொம்மிநாயக்கன் பட்டி என்று நெடுங்காலமாக இருந்து வந்த ஊரின் பெயரை துலுக்கன் பட்டி என்று மாற்ற முஸ்லீம்கள் முயற்சித்து வருகின்றன்.
அரசு பள்ளி கூடத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் அதை அல்அமீன் இஸ்லாமிய மண்டபம் என பெயரிட்டு சட்டத்துக்கு புறம்பாக தங்கள் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வந்து விட்டனர்.
பெரியகுளம் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் ஈத்கா மைதானம் என பெயரிட்டு அங்கே தொழுகை நடத்தி வருவதோடு போலி ஆவணங்களை தயாரித்து கோயில் நிலத்தில் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.
பஞ்சாயத்து பொது தண்ணீரை மசூதிக்கும் தங்கள் தோட்டத்துக்கும் குழாய் மூலம் சட்ட விரோதமாக எடுத்து வருகின்றனர்.
இதை எல்லாம் எதிர்த்த இந்துக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரம் பெற்று அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு அதிகாரிகளின் இந்த செயலை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்த மோசடிகளுக்கு துணை போன அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் முறையாக விசாரித்து மேற்குறிப்பிட்ட விசயங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலித் மக்களின்
சவஊர்வலம் எப்போதும் செல்லும் பாதையில் சென்ற போது அதை தடுத்த முஸ்லீம்கள், சரமாரியாக கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர்.
காவல் துறையில் இந்துக்களின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது ஆனால் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடிவாங்கியவன் மீது வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம் என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.
சவஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய யாரையும் காவல் துறை செய்யவில்லை. காவல்துறையின் இந்த கையாளாகாத போக்கால் ஊக்கம் பெற்றவர்கள் கோவில் திருவிழாவில் புகுந்து பிளக்ஸ் பேனர்களை கிழித்து தகறாறு செய்துள்ளனர். அப்போதும் காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.
சில காவல்துறை அதிகாரிகளே பயங்கரவாதிகளோடு சேர்ந்து கொண்டு கலவரத்தை நடத்தியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
காவல்துறை இஸ்லாமிய அடைப்படை வாதிகளின் வன்முறையை வேடிக்கை பார்த்ததின் விளைவாக கடந்த 5.5.18 அன்று காலை நன்கு திட்டமிட்டு வெளியூரிலிருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆட்கள் சுமார் 1000 பேரை அழைத்து வந்து இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் உருட்டை கட்டை அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள் கடைகள் வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் நபர்கள் இருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிகிறது.
இதை படம் பிடித்து போட்டோ வீடியோ என ஆதாரத்தோடு புகார் கொடுத்த போதும் வன்முறையாளர்களை கைது செய்யாமல் புகார் கொடுத்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
இத்தனை அராஜகங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போதிலும்
சிறு பிரச்சனைக்கு எல்லாம் கூக்கிரலிடும் அரசியல் கட்சிகள் தலித் மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை..?
தலித்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் திருமாவளவன் எங்கே போனார்..? சமூகநீதி பேசும் ஸ்டாலின், வைகோ, சீமான் கம்யூனிஸ்டுகள் என இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட தலித்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?
அடித்தவர்கள் முஸ்லீம்கள் அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதாலா..? அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா? இவர்கள் எப்படி தலித் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்
இவர்களது போலி தலித் அரசியல் தற்போதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமாவளவன் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கைகூலி என்பது தற்போதும் அம்பலமாகியுள்ளது. திருமாவளவனின் போலி தலித் முகமூடி இதன் மூலம் கிழிந்து போகியுள்ளது.
தலித்களுக்கு துரோகம் செய்துவரும் இந்த அரசியல் கட்சி தலைவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இவர்களின் ஜாதி அரசியலை புறக்கணித்து இந்துக்கள் அனைவரும் ஒற்றுமைபட வேண்டும் என மக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தலித் மக்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், தலித்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயங்கரவாத அமைப்புகளின் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி வரும் 12.5.18 சனிக்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.