Category Archives: பொது செய்திகள்

துடியலூரில் சிலை திருட்டு- மாநில தலைவர் பேட்டி

கோவை வடக்கு மாவட்டம்
சின்ன மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ விஜயநாராயண சௌத்ரி கோவில்
சிலைகள் திருட்டு போயுள்ளது.

இந்துமுன்னணி
மாநிலத்தலைவர் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்

திருட்டு போன தங்க, ஐம்பொன் சிலைகள் காவல்துறை தனிப்படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும்
இல்லையென்றால் இந்துமுன்னணி பெரிய போராட்டம் நடத்தும் என்று மாநில தலைவர் #காடேஸ்வரா_சுப்ரமணியம் கூறினார்

பாரதமாதா கோவில் அமைக்க நிதி – தமிழக அரசுக்கு இந்துமுன்னணி மாநில தலைவர் பாராட்டு

தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா திருக்கோயில் அமைக்க ரூபாய் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது
விடுதலைப் போராட்ட வீரர் திரு சுப்ரமணிய சிவா அவர்கள் சுதந்திர போராட்ட காலத்தில் இந்த நாட்டை இது ஒரு வெறும் கல்லும் மண்ணும் இல்லை, இந்த நாட்டு மக்களுடைய தெய்வம் என்று கூறினார்.
இந்த நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்பட்ட போதும் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் இது ஒரே நாடு, இந்த நாட்டை நேசிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சிவா அவர்கள் விரும்பினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதற்காக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை .
திரு.குமரிஅனந்தன் அவர்கள் தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற சுப்ரமணிய சிவா அவர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து போராடி வந்தார் .
இந்த அறிவிப்பு திரு. குமரி அனந்தன் அவர்களுக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
தமிழக அரசுக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை- 30 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
21-6-2018
பத்திரிகை அறிக்கை
சென்னை வடபழனியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வேங்கீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான திருக்குளத்தை தனியாருக்கு தாரை வார்த்து, அதனை வணிக வளாகமாக மாற்றினர். இதனை எதிர்த்து தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக இந்து முன்னணி தொடர்ந்து பல்வேறு போராடங்களை நடத்தி வருகிறது. நமது கோரிக்கைக்கு, முதல்வர்களும், அறநிலையத்துறை அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியாளர்களும் பல்வேறு ஆணைகளை பிறப்பித்தப்போதிலும், அங்கு ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. இன்று அந்த இடத்தில் சிறிய அளவிலான ஒரு குழி மட்டுமே இருக்கிறது.
இந்தப் பிரச்னையை சட்ட ரீதியாக தீர்க்க, சென்னை உயர்நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றவர் தியாகி நெல்லை ஜெபமணி அவர்களின் குமாரர் திரு. மோகன்ராஜ் அவர்கள். காவல்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், தனது தந்தையைப்போல சமூக நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார். அவரது அளப்பரிய முயற்சியால், அந்த இடம் நீர் நிலை என, அதனை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை, பொதுப் பணித்துறை, வட்டாட்சியர், காவல்துறை ஆகிய துறைகள் சேர்ந்து செயல்பட நீதிபதி அவர்கள் உத்திரவிட்டுள்ளார். திரு. மோகன் ராஜ் அவர்களுக்கு இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.
நீதிமன்றங்கள், ஆலயச் சொத்துக்களை ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது எனவும், திருக்குளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி, அதனை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
இத்தகைய நல்லதொரு தீர்ப்பிற்குப் பிறகாவது, இந்து சமய அறநிலையத்துறை அந்தத் திருக்குளத்தை மீட்டெடுக்க உடனடியாக செயலாற்ற வேண்டும். அத்திருக்குளம் மீண்டும் உயிர்பெற்று எழ இந்து முன்னணி தொடர்ந்து பாடுபடும். சிவ பக்தர்கள் மற்றும் வடபழனியைச் சுற்றியுள்ள பக்தர்கள் அனைவரும் இந்த நற்பணி முழுமைபெற ஒத்துழைக்கவும், போராடவும் முன் வரவேண்டும். அத்தனை பெரிய சாலையில் ஓடும் மழை நீர் திருக்குளத்தில் சேமிப்பதன் மூலம் நீர் ஆதாரம் பெருகி நமது தண்ணீர் தேவை என்றென்றும் பூர்த்தி அடையும் என்ற சுயநலத்திற்காகவாவது ஆதரவு தெரிவிக்க இந்து முன்னணி சார்பாக வேண்டுகிறேன்.
இந்த வெற்றி சிவனருளால் ஏற்பட்டது. திருக்குளத்தைக் காப்பது, சிவத் தொண்டாக கருதி பாடுபட்ட அனைவருக்கும் சிவனருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
இராம கோபாலன்

இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் அப்பாவி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த ஊரில் சுமார் 1200 முஸ்லீம் குடும்பங்களும் 400 இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த இந்து குடும்பங்களை மதம்மாறுமாறு முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர் மதம்மாற மறுத்த காரணத்தாலும் இவர்களது அராஜகத்தை எதிர்த்த காரணத்தாலும் இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொம்மிநாயக்கன் பட்டி என்று நெடுங்காலமாக இருந்து வந்த ஊரின் பெயரை துலுக்கன் பட்டி என்று மாற்ற முஸ்லீம்கள் முயற்சித்து வருகின்றன்.

அரசு பள்ளி கூடத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் அதை அல்அமீன் இஸ்லாமிய மண்டபம் என பெயரிட்டு சட்டத்துக்கு புறம்பாக தங்கள் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வந்து விட்டனர்.

பெரியகுளம் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் ஈத்கா மைதானம் என பெயரிட்டு அங்கே தொழுகை நடத்தி வருவதோடு போலி ஆவணங்களை தயாரித்து கோயில் நிலத்தில் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.

பஞ்சாயத்து பொது தண்ணீரை மசூதிக்கும் தங்கள் தோட்டத்துக்கும் குழாய் மூலம் சட்ட விரோதமாக எடுத்து வருகின்றனர்.

இதை எல்லாம் எதிர்த்த இந்துக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரம் பெற்று அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு அதிகாரிகளின் இந்த செயலை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்த மோசடிகளுக்கு துணை போன அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொள்கிறோம்..

மேலும் முறையாக விசாரித்து மேற்குறிப்பிட்ட விசயங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலித் மக்களின்
சவஊர்வலம் எப்போதும் செல்லும் பாதையில் சென்ற போது அதை தடுத்த முஸ்லீம்கள், சரமாரியாக கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர்.

காவல் துறையில் இந்துக்களின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது ஆனால் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடிவாங்கியவன் மீது வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம் என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.

சவஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய யாரையும் காவல் துறை செய்யவில்லை. காவல்துறையின் இந்த கையாளாகாத போக்கால் ஊக்கம் பெற்றவர்கள் கோவில் திருவிழாவில் புகுந்து பிளக்ஸ் பேனர்களை கிழித்து தகறாறு செய்துள்ளனர். அப்போதும் காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.

சில காவல்துறை அதிகாரிகளே பயங்கரவாதிகளோடு சேர்ந்து கொண்டு கலவரத்தை நடத்தியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

காவல்துறை இஸ்லாமிய அடைப்படை வாதிகளின் வன்முறையை வேடிக்கை பார்த்ததின் விளைவாக கடந்த 5.5.18 அன்று காலை நன்கு திட்டமிட்டு வெளியூரிலிருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆட்கள் சுமார் 1000 பேரை அழைத்து வந்து இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் உருட்டை கட்டை அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள் கடைகள் வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் நபர்கள் இருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிகிறது.

இதை படம் பிடித்து போட்டோ வீடியோ என ஆதாரத்தோடு புகார் கொடுத்த போதும் வன்முறையாளர்களை கைது செய்யாமல் புகார் கொடுத்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

இத்தனை அராஜகங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போதிலும்
சிறு பிரச்சனைக்கு எல்லாம் கூக்கிரலிடும் அரசியல் கட்சிகள் தலித் மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை..?

தலித்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் திருமாவளவன் எங்கே போனார்..? சமூகநீதி பேசும் ஸ்டாலின், வைகோ, சீமான் கம்யூனிஸ்டுகள் என இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட தலித்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?

அடித்தவர்கள் முஸ்லீம்கள் அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதாலா..? அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா? இவர்கள் எப்படி தலித் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்

இவர்களது போலி தலித் அரசியல் தற்போதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமாவளவன் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கைகூலி என்பது தற்போதும் அம்பலமாகியுள்ளது. திருமாவளவனின் போலி தலித் முகமூடி இதன் மூலம் கிழிந்து போகியுள்ளது.

தலித்களுக்கு துரோகம் செய்துவரும் இந்த அரசியல் கட்சி தலைவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இவர்களின் ஜாதி அரசியலை புறக்கணித்து இந்துக்கள் அனைவரும் ஒற்றுமைபட வேண்டும் என மக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தலித் மக்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், தலித்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயங்கரவாத அமைப்புகளின் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி வரும் 12.5.18 சனிக்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது

சிலநாட்கள் முன்பு, நிகழ்ச்சி ஒன்றில், இசைஞானி இளையராஜா அவர்கள், ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்ற ஒரு ஆவணப் படத்தைப்பார்த்தேன். ஆனால், உண்மையில் உயிர்தெழுந்தவர் மகரிஷி ரமணர் அவர்களே எனக் கூறினார்.

கிறிஸ்தவ மதத்தில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பது கிறிஸ்தவ நாடுகளிலேயே ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்டு உள்ளது. இசைஞானி இளையராஜா அவர்கள் அத்தகைய ஒரு செய்தியை, தான் பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால், அப்படிப்பட்ட நிகழ்வு உண்மையில் நமது தமிழ்நாட்டில் ரமண மகரிஷி வாழ்வில் நடந்ததை சுட்டிக்காட்டியுள்ளார் இளையராஜா அவர்கள். ஏசு குறித்து அவர் விமர்சனமோ, தனிப்பட்ட கருத்தோகூட தெரிவிக்கவில்லை.

மகாத்மா காந்திஜி, இயேசு கிறிஸ்துவ என்பவர் கண்ணுக்கு தெரியாத பரம்பொருளாக விளங்குகிறார் என்று நீங்கள் நம்பச் செய்கிறீர்கள். ஆனால், நான் முயற்சி எடுத்து, புரிந்துகொண்ட வரையில் அதில் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது, என்று அவர், கிறிஸ்தவ பாதிரிக்கு எழுதிய கடிதம் அமெரிக்காவில் ஏலத்தில் விடப்போவதாக வந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் அறிஞர் கலிலீயோ, உலகம் உருண்டை என்று கண்டுபிடித்து சொன்னார். பைபிளில் உலகம் தட்டை என்று இருப்பதற்கு இது எதிரானது எனக் கூறி, மதநம்பிக்கையை குலைக்கும் கருத்தை தெரிவித்தார் என அவருக்கு விஷம் கொடுத்து கொன்றனர் கிறிஸ்தவ பாதிரிகள். சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கொலைக்கு, கிறிஸ்தவ மதகுருவான போப் அவர்கள் மன்னிப்பு கோரினார். அறிவியல் உண்மையை கூறிய ஒருவரை கொன்றதற்குக்கூட சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதக்குரு மன்னிப்பு கேட்டது கேலிக்கூத்தானது. பைபிளில் உள்ளது என்பதால், உலகம் தட்டையாக இல்லையே!

கிறிஸ்தவர்கள், நாள்தோறும், வீதிதோறும் சட்டவிரோதமாக, இந்து தெய்வங்களை சாத்தான் என்றும், இந்துக்களை பாவிகள் எனப் பிரச்சாரம் செய்து வருவது எந்த வகையில் நியாயம்? மற்ற மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் கிறிஸ்தவர்கள், தங்கள் மதமான கிறிஸ்தவத்தின் நம்பிக்கை பொய் என வெளியிட்ட விஷயத்தை கூறியதற்கு இசைஞானி இளையராஜாவை ஏன் கண்டிக்க வேண்டும்? ஆர்ப்பாட்டம் ஏன் நடத்த வேண்டும்?

இந்துக்கள் வணங்கும் ஆண்டாளை, தாசி என்று, உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்து, அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியதுடன், பகுத்தறிவாதிகள் இதனை ஏற்பார்கள் என கூறினார் வைரமுத்து. இந்த பொய்யான, அபாண்டமான கருத்தை இந்து முன்னணி கண்டித்தது. இதற்குக்கூட ஊடகங்கள் விமர்சனம் செய்தன. இது கருத்துரிமையை முடக்கும் செயல் என வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசிய கருத்துரிமைவாதிகள் இளையராஜா விஷயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?

இந்த இரட்டை வேடத்திற்குக் காரணம் கோழைத்தனம், அல்லது விலைபோய்விட்டனர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

கிறிஸ்தவர்கள், மற்ற மதங்களின் மேல் செய்யும் வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்த்து பல ஊர்களில் இந்து முன்னணி தொடர்ந்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும், பிரச்சாரம் செய்தவர்களை பிடித்துக்கொடுத்தும் வருகிறது. சட்டவிரோத சர்ச்/ ஜெபக்கூடங்களை அகற்ற உயர்நீதி மன்றம் உத்திரவிட்டதைச் சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீது தமிழக அரசு, காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிறிஸ்தவ அமைப்புகள் இசைஞானி இளையராஜா மீது கொடுத்துள்ள புகார் முறையற்றது, கண்டிக்கத்தக்கது என இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.

மதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

இந்துமுன்னணி – தமிழ்நாடு

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்- மாவட்டம் தோறும் நடைபெறும்

தேதி 21.03.18, புதன்

மதவெறியை மாய்ப்போம்

1. சட்டவிரோதமாகவும், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தும் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுகளை அகற்றக் கோரியும்,

2. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன் அவர்களின் தீர்ப்பை நடைமுறைப் படுத்தக் கோரியும்,

3. இந்துக்கள் வாழ்கின்ற பகுதியில் மதமாற்றம் செய்வதற்காக இந்து மதத்தை இழிவு படுத்தியும், இந்து கடவுள்களை பேய், பிசாசு என்று கூறி அவதூறு செய்வதை கண்டித்தும்,

4. சிறுவயது இந்து குழந்தைகளுக்கு போட்டி என்ற பெயரில் சாக்லெட் கொடுத்து மூளைச் சலவை செய்து மதத்தை பிரச்சாரம் செய்பவர்களை கண்டித்தும்,

5. இவர்களுக்கு துணை போகும் நயவஞ்சக, இந்து விரோத அரசியல் வாதிகளை கண்டித்தும்

21 மார்ச் 2018 (வியாழக்கிழமை) அன்று
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்துமுன்னணி – தமிழ்நாடு

மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை  விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2.
தொலைபேசி : 044 28457676
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
16.3.2018
பத்திரிகை அறிக்கை
மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை
விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம
இந்து முன்னணி பேரியக்கம், அச்சுறுத்தி, ஆசைகாட்டி மோசடியாக செய்யப்படும் மதமாற்றத்தைத் தடுக்கும் முக்கிய பணியை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சட்டவிரோத கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று பிரசங்கம் செய்து மதமாற்றத்தை செய்து வருகின்றன. சிறு குழந்தைகளை அழைத்து சென்று அவர்களிடம் பொய்யான கதைகளைக் கூறி, சிறுவயதிலேயே மதம் மாற்றுகின்றனர். இச்சட்டவிரோத மோசடி ஜெபக்கூடங்களின் மீதும், அந்த ஜெபக்கூடங்களுக்கு வரும் நிதி ஆதாரம் குறித்தும் மாவட்டந்தோறும், தாசில்தார் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வரையும், காவல்துறையில் இன்ஸ்பெக்டர் தொடங்கி டி.ஜி.பி. அலுவலகம் வரையிலும் நூற்றுக்கணக்கானப் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை. மோசடியாக நடைபெறும் மதமாற்றத்தை இந்துக்கள் தடுக்கும்போது மட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மதச் சுதந்திரம் பறிபோயிற்று என்று போலி மதமாற்ற சக்திகளும், வாக்கு வங்கி அரசியல் கட்சிகளும் கூப்பாடு போடுகின்றன.
மதுரையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி சட்டவிரோத ஜெபக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று (11.3.2018) மதுரையின் ஒருபகுதியில் இவ்வாறு நடைபெறும் சட்டவிரோத ஜெபக்கூடமொன்றில் 6,7,8 வயதுடைய இந்து சிறுமிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, இந்து கடவுள்களை சைத்தான்கள், அவை உங்களுக்கு கெடுதல்களை செய்யும் என பயமுறுத்தி, நீங்கள் ஏசு ஒருவரையே வணங்குகள், அவரே உங்களைக் காப்பாற்றுவார் என ஹிப்னாட்டிஸம் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் அச்சத்தில் அலறித்துடித்து கத்த துவங்கினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொது மக்கள், இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த இந்து முன்னணியினர், பொதுமக்கள் இணைந்து ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, திறக்கச் சொல்லியுள்ளனர். அந்த அறையை திறந்தவுடன் குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். உண்மையில் நடந்தது இதுதான்.
அப்பகுதியில் இந்த செய்தி பரப்பரப்பானதால், இனி இந்த இடத்தில் மோசடி மதமாற்ற ஜெபக்கூடத்தை நடத்த முடியாது, இதனால் வெளிநாட்டு நிதியும் கிடைக்காது என பயந்த பாதிரிகள் திட்டமிட்டு, பிரச்னையை திசைத்திருப்பியுள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு மறைமுகமாக மாறிய மதிமுத தலைவர் வைகோவும், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், உண்மையை மறைத்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்து முன்னணியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத இந்து விரோத சக்திகள் இத்தகைய அரசியல்வாதிகள் மூலம் அரசை நிர்பந்தப்படுத்தி இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குப்போட்டு கைது செய்ய வைத்துள்ளனர்.
மதுரையில் இந்த சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களை தடை செய்யக்கோரி கடந்த மாதம் மதுரை காவல்துறை கமிஷனர், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேதகு ஆளுநர் அவர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக இப்புகார்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நேற்று (15.3.2018) அரசு நிர்வாகம் இந்து முன்னணியினர் மீது நடவடிக்ககை எடுப்பதில் மட்டும் போர்கால அவசரத்தில் செயல்பட்டுள்ளது. இது எந்தவிதத்தில் நியாயம்?
இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 21.3.2018 புதன் கிழமை அன்று இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
நாடு சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் சதி செய்து தமிழகத்தின் முக்கிய ஊர்களில், முக்கிய இடங்களில் சர்ச்சுகளை கட்டி விட்டு சென்றனர். அந்த இடங்களில் இன்றும் பிரார்த்தனைகளை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர். யாரும் இதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. ஆனால், பணத்தாசையாலும், மதவெறியாலும், சட்டவிரோத மோசடி மதமாற்றம் செய்யும் ஜெபக்கூடங்களின் மதமாற்ற முயற்சிகளைத்தான் இந்துக்கள் எதிர்க்கிறார்கள்.
ஆகவே, அரசு உடனடியாக சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களைத் தடை செய்ய வேண்டும். மோசடி மதமாற்றத்திற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய வரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
(காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்)
மாநிலத் தலைவர்

வைகோ அடக்கி வாசிக்க வேண்டும்! மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி…

இந்துமுன்னணி ஊழியர்களை தரக்குறைவாக பேசும் வைகோ, தமிழகம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நடந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ வன்முறை சம்பவங்கள் குறித்து வாய் திறவாமல் எங்கே சென்றார்?

குரங்கனி மலை தீ விபத்து நக்ஸல் அமைப்புகளின் திட்டம் என இந்துமுன்னணி கருதுகிறது…

மதுரை இந்துமுன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில தலைவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக தேனி #குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்!!!

11.10.18

நெல்லை மண்டல பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த இந்துமுன்னணி மாநில தலைவர் திரு. #காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
1. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இயக்க வேலைகளை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்டல பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

2.மேலும் விவசாயி என்று கூறிக்கொண்டு தமிழர்களின் மானத்தை தலைநகரில் வாங்கிய அய்யாக்கண்ணு திருச்செந்தூர் கோவிலில் பெண்ணிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட விதத்தை கண்டித்தார்.
3. ஈவேரா பிரச்சனையில் வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளை கண்டித்தார்.
4. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..

வைகோ, திருமாவளவன்
சீமான் போன்றோர் ஒன்றாக
சேர்ந்து ஒரு தேதி குறித்து
அறிவித்துவிட்டு இந்து
கோயில்களை இடிக்கவரட்டும்
இந்து முன்னணி
மாநில தலைவர்
காடேஸ்வரா C. சுப்ரமணியம்
கோவையில் சவால்

கோவையில் பாஜக அலுவலகம்
மீது பெட்ரோல் குண்டு வீசபட்ட
இடத்தில் பார்வையிட்ட
செய்தியாளர்களை சந்தித்த
அவர்பெரியார் வினை
விதைத்ததன் விளைவு தான்
தற்போது நடைபெற்று வருகிறது.

* H.ராஜா தனி மனிதர் அல்ல
அவருக்கு பின்னால்
இந்து முன்னணி துணை நிற்கும்.

* திரிபுராவில் கம்யூனிசம் தோற்றது
போல் தமிழகத்திலும் திமுக
மற்றும் அதிமுக காணாமல்
போய்கொண்டு இருக்கிறது.
கிறித்துவ, முஸ்லிம் மற்றும்
நக்சலைட்கள் இவர்கள்
பின்னனியில் இருந்து
தமிழகத்தில் ஒரு கலவரத்தை
தூண்ட முயற்சித்து வருவதாக
குற்றம் சாட்டினார்.

* பாரதிய ஜனதா கட்சி
அலுவலகத்தில் தொடர்ந்து
தாக்குதல் நடைபெறுவதாகவும்,
இந்து முன்னணியினரை
அமைதி காக்க கூறியதால்
வன்முறைகள் ஏதும் நடக்காமல்
கட்டுக்குள் இருப்பதாகவும்
எனவே இதன் பின்னணியில்
யார் உள்ளார்கள் என்பது
குறித்து காவல் துறை விசாரிக்க
வேண்டும் என கேட்டு கொண்டார்.

* திருமாவளவனுடன் சேர்ந்து
வைகோ, திருமுருகன்காந்தி,
நாம்தமிழர் கட்சியினர் போன்றோர்
கோவிலை இடிக்க வரட்டும் எனவும்
அப்போது இந்துக்கள்கையை
வெட்டுவார்களா வேறேதும்
வெட்டுவார்களா என தெரியும்
என வைகோவிற்கு
பகிரங்க சவால் விடுத்தார்.