V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்து முன்னணி
9443382380
கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற முதல்வரின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்
கொரானா பாதிப்பு காரணமாக கடந்த 21 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர் தொழிலின்றி வருமானமின்றி ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு பல்வேறு இடங்களில் உதவி பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் சேவாபாரதி போன்ற அமைப்புகள் இந்த கொரானா நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெருமளவில் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேவை பணிகளை தனிநபர்கள் தனி இயக்கங்கள் செய்யக்கூடாது அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்தார் அதனைத் தொடர்ந்து இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் தமிழகம் முழுவதும் தனியார் அமைப்புகள் தனிநபர்கள் யாரும் எந்த சேவை பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் அரசாங்கமும் அரசு இயந்திரமும் ஒவ்வொரு தனி நபரையும் தேடிச் சென்று அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.
மேலும் இதுபோன்ற சேவைப் பணிகளில் தனியார் அமைப்புகள் ஈடுபடுவதால் அரசாங்கம் மருத்துவம் போன்ற வேறுவேறு பணிகளில் தனது கவனத்தை செலுத்த முடியும்
வழக்கமாக பேரிடர் காலங்களில் தனியார் அமைப்புகள் சேவை செய்வது வழக்கமான ஒன்றாகும் இன்றைய நிலையில் சேவை செய்ய இயலாத சிலருடைய தூண்டுதலின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது
எனவே பேரிடர் காலங்களில் வழக்கம்போல் நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இது தமிழக அரசுக்கும் அரசு இயந்திரத்திற்கும் மிகவும் பேருதவியாக அமையும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.