Tag Archives: #சந்தர்ப்பவாத அரசியல்

வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.

27.06.2020

வி பி ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்

வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம்

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அதே சமயம் இரண்டு மனித உயிர்களின் மரணத்தை வைத்து இங்கு பலர் அரசியல் செய்வது மிகுந்த வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

இரண்டு வியாபாரிகள் மரணத்திற்காக இரண்டு வணிகர் சங்கங்களும் போட்டிபோட்டு கொண்டு கடையடைப்பு ,ஆர்ப்பாட்டம், போராட்டம் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

இவர்கள் சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிகள் தாக்கப்பட்ட போதும், சென்னையில் இதே சமூகத்தைச் சார்ந்த மிகப்பெரிய இந்து துணிக்கடை அதிபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்ட போதும், ஹலால் உணவு இல்லை என போர்டு வைத்ததற்காக இந்து வியாபாரி கைது செய்யப்பட்டபோதும், நெல்லை மாநகரம் பேட்டையில் வேற்று மதத்தினரால் இந்து வியாபாரிகள் அடித்து விரட்டப்பட்ட போதும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இந்து வியாபாரி காவல்துறையினரால் தாக்கப்பட்ட போதும் எங்கே போனார்கள் ?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டால் தான் வணிகர் சங்கங்கள் களமிறங்குமா ?

இந்து வியாபாரிகளுக்கு பாதிப்பு , பிரச்சனை , வழக்கு என்றால் பாதுகாப்பு , நீதி கேட்டு இரண்டு வணிகர் சங்கங்களும் போராடாதா?

தென்காசி மாவட்டம் சம்பன்குளத்தில் இதே சமூகத்தைச் சார்ந்த மக்களின் கோவில்கள் இடிக்கப்பட்ட போது எந்த அரசியல் கட்சியும் எந்த சங்கங்களும் வாய் திறக்கவில்லையே ஏன் ?

இன்று மனிதநேயம், ஜீவகாருண்யம், ஈவு இரக்கம், மனிதாபிமானம், மனித உயிர் என்றெல்லாம் வசனம் பேசும் பலர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் காவல்துறை உதவிஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் வாய்மூடி மௌனமாக இருந்தார்கள் ?

குற்றவாளிகள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் அனைவரும் வாய் திறக்க மறுப்பது அஞ்சுவது ஏன் ?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட போது அனைவரும் வாய்மூடி வேடிக்கை பார்த்தது ஏன் ?

திருச்சி சிறுவன் சுஜித் வில்சன், சாத்தான்குளம் பெனிக்ஸ் என சிறுபான்மையினர் இறந்தால் மட்டும் உடனடியாக பல லட்சம் ரூபாய் நிதியுதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு வேலையும் வழங்கும் தமிழக அரசு இந்து குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்தால் பாதிக்கப்பட்டால் நிதி உதவியும் அந்தக் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க மறுப்பது ஏன் ?

முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இறந்த கோவை சசிகுமார் , பாடி சுரேஷ் , ராமலிங்கம் என பல இந்துக்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு பல லட்சம் நிதி உதவி வழங்கியதா ?

அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு தற்கொலை செய்து இறந்த தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் மாணவி குடும்பத்திற்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியதா?

மரணத்தை மதரீதியாக அணுகலாமா என சிலர் வியாக்கியானம் பேசுகிறார்கள் ஒவ்வொருவருடைய மதத்திற்கு ஏற்ப தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் சங்கங்களும் மதரீதியாக பாரபட்சமாக நடவடிக்கை மேற்கொள்ளும் போது மதரீதியாக கேள்வி எழுவது இயல்புதானே

சாத்தாங்குளம் வியாபாரிகள் படுகொலையில் கூட மதரீதியாக சில அதிகாரிகளை காப்பாற்ற முயல்வதாக செய்திகள் வருகிறது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

மாண்புமிகு உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை தானாக முன்வந்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது. அந்த இருவரையும் ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடுநிலையோடு நீதி வழங்கப்படும் என இந்து முன்னணி நம்புகிறது

இரண்டு வியாபாரிகளின் மரணம் கண்டனத்திற்குரியது அதை வைத்து அரசியல் நடத்தும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வணிகர் சங்கங்களின் செயல் அதைவிட மிகுந்த கண்டனத்திற்குரியது ஆகும். இத்தகைய மதரீதியான பாரபட்சமான போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி

கொரோனா பரவக் காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து – மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்- திமுக தீர்மானத்திற்கு இந்துமுன்னணி பதில்

17.04.2020

சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

பத்திரிகை செய்தி

கொரானா நோய்த்தொற்றை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் தன்னலம் கருதாது சேவை புரிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் திரு.மு .க .ஸ்டாலின் காணொளி கூட்டம் நடத்தியதுடன், கொரானா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது வாக்கு வங்கி அரசியலாகும்.

திமுக கூட்டணி கட்சிகள் கொரானா தொற்றுநோய் துவங்கிய ஆரம்ப முதலே பொதுமக்களின் நலனை கருதாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், அறிக்கை விடுவதுமாக இருந்து வருகிறார்கள்.

அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் ஈன செயல்களில் ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தாதது ஏன்?

இவர்களின் பொறுப்பற்ற செய்கையினால் பாதிப்புக்குள்ளாகும் டாக்டர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் பற்றி சிந்திக்காமல் பிணத்தின் மீது அரசியல் செய்யும் திமுக வின் கேவலமான சிந்தனையை இந்துமுன்னணி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த – அரசு விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள், டாக்டர்கள் மீது எச்சில் துப்பியவர்கள்,
செவியர்களை அவமதித்தவர்கள், அம்மணமாக ஆடியவர்கள்,
வீட்டு சாப்பாட்டு கேட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள், சட்ட விரோதமாக வெளிநாட்டுக் காரர்களை அழைத்து வந்து மதப்பிரச்சாரம் செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கவேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் கேள்வி??

இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக பரவிவரும் சூழ்நிலையில் நேற்று (08/04/2020) நம் பாரத பிரதமர் அவர்கள் அனைத்து எதிர் கட்சி தலைவர்களுடனும் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அதில் திமுக கட்சி சார்பாக பங்கேற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்கள் பங்கேற்றார்.

அப்போது பிரதமரிடம் அவர், சிலர் கொரோனா நோய் தொற்றை மதச்சாயம் பூசுவதாகவும் தாங்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இந்த கருத்தை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்கிறது.

அதேசமயம் வங்காளதேசத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்குள் வந்த 11 நபர்கள்
[அவர்களின் பெயர் விபரங்கள்: ஏ. கம்ரன் இஸ்லாம்.(19),ஏ. தன்வீர் ரெய்ஹாகான் (26),எஸ் .மனீர்ஹாசன்(19),ஏ. சுலைமான்(36).,கே. அப்துல் ஹாலீக்(59)., ஹெச். கமால்பப்ரீ(32).,சோ. அப்துர் ரசாக்(62)., எஸ். மொக்தர் அலி(59).,
ஓ .ரபியுல் ஹாசி(26)., ஏ.சம்சுல்லாஹ்(66)., ஷபின் மத் மத்(43),]

டெல்லி தப்லிக் மத மாநாட்டில் கலந்துகொண்டு அதன் பின்னர் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அடியானூத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் அந்தப் பதினொரு பெயரையும் கைது செய்து விதியை மீறி மதப்பிரச்சாரம் செய்தல் கொரோனா வைரசை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதித்துறையின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின்பேரில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஏன் திண்டுக்கல் வந்தனர்? வங்காளதேசத்தில் இருப்பவர்களுக்கும் திண்டுக்கல்லில் இருப்பவர்களுடன் என்ன தொடர்பு?? அந்தத் தொடர்பு உள்ள நபர்களை காவல்துறை கைது செய்ய வேண்டாமா?? தமிழக அரசு இந்த விசயத்தில் மென்மையான போக்கை கையாண்டு வந்தால் பல உயிர் பலிகள் ஏற்படும் அல்லவா??

மதச்சார்பின்மை மீது பெரும் அக்கறை உள்ள திமுக முன்னாள் அமைச்சர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்திய நாட்டின் மீதும் தமிழகத்தின் மீதும் பெரிதும் அக்கறை இருந்தால் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களை தாங்களாகவே முன் வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்த பயப்படுவது ஏன்??

இஸ்லாமியர்கள் மீது பெரிதும் அக்கறையோடு அவர்கள் நடத்தும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளும் ஒரு கட்சி உங்களுடைய திமுக கட்சி, அவ்வாறு இருக்கையில் உங்களுடைய கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இதனை உங்களால் வலியுறுத்தி பேச முடியுமா??

அவ்வாறு தங்களால் சொல்ல முடியவில்லை எனில் இதில் மதரீதியாக செயல்படுவது நீங்கள்தான் என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வீர்களா?? அதை ஒத்துக் கொள்ளும் துணிச்சலாவது உங்களுக்கும் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கிறதா??

என்றும் தாயக பணியில்

V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி.
9486482380

காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
-மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கொடிய தொற்று நோய் அனைவருக்கும் பரவி விடாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை
முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நோய் தொற்றிலிருந்து நம் மக்களை காப்பதற்காக நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பவர்கள், காவல்துறையினர்,
வருவாய்த்துறையினர் என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில்
நோய்த்தொற்று பரவாமல் இருக்க நம் அனைவரின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு மிகவும் அவசியம்.

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தமிழகத்தின் சில பகுதிகளிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பல பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை என்ற பெயரிலே கூட்டமாக கூடும் அராஜக போக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஏற்கனவே இஸ்லாமியர்கள் அரசினுடைய அறிவுரையையும், நிபந்தனைகளையும், உத்தரவுகளையும் பின்பற்றாமல் டெல்லியில்
தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை நடத்தியதன் விளைவுதான் இன்று நாடு முழுக்க வைரஸ் தொற்று நோய் பரவி இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்
இவர்கள் கூட்டமாக கூடுவது நமக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் அவ்வாறு ஒன்று சேர்ந்தவர்களை கலைந்து போக அமைதியான முறையில் அறிவுறுத்தியும் கேட்காமல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்
இதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

அரசாங்கம் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் துறையைச் சார்ந்த நண்பர்கள் விரைவில் குணமடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது
நன்றி வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா

சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கைக்கு பதில்

நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான் அவர்களுக்கு வணக்கம்.

நான் நலம் அதுபோல் நீங்களும் நலமாக இருக்க செந்தில் ஆண்டவன் அருள் புரிவார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் பிரிவினைவாத அரசியலை கைவிட்டு , மத உணர்வை புறந்தள்ளி, துளியாவது மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அறிக்கை கொடுத்துள்ளீர்கள்.

அவ்வாறு மத உணர்வு உள்ளவர்கள்தான் சிகிச்சைக்கு வர மறுக்கிறார்கள்.

அந்தத் தலைவர்களிடம் நீங்கள் பேசி மேலும் இந்த கொடிய நோய் பரவாமல் இருக்க, தடுக்க முயற்சி செய்யலாம் அல்லவா??

ஒரு இஸ்லாமியர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உறவினர் மற்றும் பலபேர் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் மதச்சார்பின்மை பேசும் நல்லவர்கள், மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நீங்கள் ஏன் இந்த முயற்சி எடுக்க கூடாது??

தனிமையில் இருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் இந்திய மருத்துவர்கள் மட்டுமல்ல உலக மருத்துவர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். இதை ஏன் அவர்கள் மறுக்கிறார்கள்.

ஒரு பதிவு எனக்கு வந்தது அதில் ஒரு இஸ்லாமிய டாக்டர் அந்த நோய் எப்படி கண்டுபிடிக்கப்படும் என்று தெளிவாக சொல்லி இருந்தார். அந்த பதிவை நான் பலருக்கும் பகிர்ந்துள்ளேன். அவர் பெயர் டாக்டர் பீர்மைதீன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பனிபுறிந்தவர். அப்படிப்பட்ட நல்ல மனிதரும் நாட்டில் உள்ளனர் .

மதம் என்று நாங்கள் பார்க்கவில்லை நீங்கள்தான் பார்க்கின்றீர்கள். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களை ஓட்டுக்காக பிரிக்கின்றனர். இந்த பிரிவினை வருங்கால இந்தியாவுக்கு நல்லதல்ல.

இன்று எங்கள் ஊரில் நடைப்பெற்ற ஒரு சம்பவம்! எங்கள் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் காயல்பட்டினத்தில் துப்புரவு பணிக்கு செல்கிறார்கள் அவர்களை திமுக பிரமுகர்கள் அங்கு போகக் கூடாது என்று தடுத்து காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து வந்த வாகனத்தை எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

இதற்கு காரணம் யார்? காயல்பட்டினத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பஷீர்.

டெல்லியில் நடைபெற்ற இசுலாமிய மத மாநாட்டிற்கு சென்றுள்ளார் அவருக்கு கொடிய நோய் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

ஆண்டவன் அருளால் அவருக்கு நோய் வரக்கூடாது… ஆனால் அந்த டாக்டர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி இருக்க வேண்டுமல்லவா? மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இஸ்லாமிய மத தலைவர்களிடம் உங்கள் வாதத்தை ஆணித்தரமாக வைத்து அவர்களை சுயபரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள். அது தான் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்லது.

நன்றி வணக்கம்
பாரத் மாதா கீ ஜெய்!!

V.P. ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி 628213
9443382380