இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.
தேர்தல் தொடர்பாக…
அன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.
இந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும். தீயவர்கள் வெற்றி பெற முடியாது.
நாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.
ரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.
சமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.
அரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை மாற்ற இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
கோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வி நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.
இந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,
இந்து ஓட்டு யாருக்கு ..? என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”
இந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்து ஓட்டு யாருக்கு..? ஊழியர் கூட்டங்கள்..
திருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு
மார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்டபத்தில் நடைபெறும்.
பவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.
கோவை நாடாளுமன்றம்,
27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,
29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.