Tag Archives: #பயங்கரவாதிகள்

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா? மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை

27.11.2020

வி.பி. ஜெயக்குமார்
மாநிலத் துணைத் தலைவர், இந்து முன்னணி
தொலைபேசி: 04639-232240,

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா?
கடலோர காவல்படை, மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு துறை ஆகியன கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது..

நவம்பர் 26 மும்பை கடல் பகுதி வழியாக நுழைந்த, பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 8 இடங்களில் நடத்திய தாக்குதலில் 164பேர் உயிரிழந்தனர். அதே நாளான நேற்று தூத்துக்குடியில் 30 டன் ஹெராயின் போதைப்பொருள், 5 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

கடந்த சில நாட்கள் முன்பு இராமநாதபுரம் பெரிய பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், ரகசிய பயிற்சி முகாம் நடத்தியுள்ளனர். அதில் 32 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் சுமார் 130 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகாமும் காவல்துறைக்குத் தெரியாமல் நடந்துள்ளது.

அமரர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழக கடலோர பகுதிகள் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். மத்திய, மாநில அரசுகள் கடலோர காவல்படையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று மும்பை தாக்குதலுக்கு முன்பே எச்சரித்தார். இன்று அவரது தீர்க்க தரிசனத்தை நாம் உணர்கிறோம்.

கடந்த ஜனவரி மாதம், கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வில்சனை, முஸ்லீம்கள் இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்டவிரோத, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை சிறைச்சாலைகளில் அடைக்கும்போது, அவர்களை சந்திக்க வருபவர்களையும், வழக்கு விசாரணையில் பயங்கரவாதிகளுக்குத் துணைபுரிபவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் பாதுகாப்பில் மத்திய, மாநில அரசு புலானய்வுத் துறையும், கடலோர காவல்படையும் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுத்து தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
வி.பி. ஜெயக்குமார்,
மாநிலத் துணைத் தலைவர்

ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம்

04.05.2020
பத்திரிக்கை அறிக்கை

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பொது மக்களை பிணை கைதிகளாக பிடித்துவைத்து பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக தைரியமாக போரிட்டு, பொதுமக்களை காப்பாற்றும் பணியில் நான்கு இராணுவ வீரர்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஓய்வின்றி உழைத்த அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எதனுடனும் ஒப்பிடமுடியாது.

இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று பிணைக் கைதிகளாக இருந்த பொது மக்கள் அனைவரையும் இந்த ஐந்து தியாகிகளும் மீட்டுள்ளனர்.

அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலியை இந்து முன்னணி பேரியக்கம் சமர்பிக்கிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று இராணுவத்திற்கும் மத்திய அரசிற்கும் இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தாயகப் பணியில் காடேஸ்வராசுப்பிரமணியம் மாநிலத் தலைவர்