நா. முருகானந்தம் 03.03.2020
மாநில பொதுச் செயலாளர்
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா?
கைலாஷ் , முக்திநாத் , மானசரோவர் போய் வந்தவர்களில் 500 பேர்களுக்கு ரூ10000/- உதவித்தொகை என இந்து அறநிலையத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது அப்பட்டமான நயவஞ்சகம், ஏமாற்றும் செயல்.
இந்துமுன்னணி இதை வன்மையாக கண்டிக்கிறது.
மெக்கா, மதீனா செல்ல முஸ்லீம்களுக்கு அரசின் பணம்.
ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசின் பணம்.
இந்துக்களுக்கு மட்டும் இந்துக்கள் உண்டியலில் போடும் பணத்தை எடுத்து 500 பேருக்கு மட்டும் விநியோகமா?
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கண்ணில் வெண்ணை , இந்துக்கள் கண்ணில் சுண்ணாம்பு! இதுதான் மதசார்பின்மையா?
இந்த பாரபட்சத்தை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
முஸ்லிம்களுக்கு வக்ப் வாரியப் பணத்திலிருந்தும் , கிறிஸ்தவர்களுக்கு அவர்களது நலவாரியத்திலிருந்தும் தான் கொடுக்கவேண்டும்.
மானியம் வழங்குவதிலும் அதுவும் வழிபாட்டிற்கு செல்ல பணம் கொடுப்பதில் கூட சிறுபான்மையினைரைத் தாஜா செய்யும் போக்கு மிக கேவலமான அரசியலாகத் தோன்றுகிறது.
இந்துக்கள் புனித யாத்திரை செல்வதற்கு மானியம் அரசின் பணத்திலிருந்துதான் தரவேண்டும் என இந்துமுன்னணி தமிழக அரசிற்கு கடுமையாக வலியுறுத்துகிறது.
தாயகப் பணியில்
நா. முருகானந்தம்
மாநில பொதுச் செயலாளர்