Tag Archives: ஹஜ் மானியம்

கைலாஷ் யாத்திரை உதவித்தொகை- கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா? மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் கேள்வி

நா. முருகானந்தம் 03.03.2020
மாநில பொதுச் செயலாளர்

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா?

கைலாஷ் , முக்திநாத் , மானசரோவர் போய் வந்தவர்களில் 500 பேர்களுக்கு ரூ10000/- உதவித்தொகை என இந்து அறநிலையத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது அப்பட்டமான நயவஞ்சகம், ஏமாற்றும் செயல்.

இந்துமுன்னணி இதை வன்மையாக கண்டிக்கிறது.

மெக்கா, மதீனா செல்ல முஸ்லீம்களுக்கு அரசின் பணம்.

ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசின் பணம்.

இந்துக்களுக்கு மட்டும் இந்துக்கள் உண்டியலில் போடும் பணத்தை எடுத்து 500 பேருக்கு மட்டும் விநியோகமா?

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கண்ணில் வெண்ணை , இந்துக்கள் கண்ணில் சுண்ணாம்பு! இதுதான் மதசார்பின்மையா?

இந்த பாரபட்சத்தை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கு வக்ப் வாரியப் பணத்திலிருந்தும் , கிறிஸ்தவர்களுக்கு அவர்களது நலவாரியத்திலிருந்தும் தான் கொடுக்கவேண்டும்.

மானியம் வழங்குவதிலும் அதுவும் வழிபாட்டிற்கு செல்ல பணம் கொடுப்பதில் கூட சிறுபான்மையினைரைத் தாஜா செய்யும் போக்கு மிக கேவலமான அரசியலாகத் தோன்றுகிறது.

இந்துக்கள் புனித யாத்திரை செல்வதற்கு மானியம் அரசின் பணத்திலிருந்துதான் தரவேண்டும் என இந்துமுன்னணி தமிழக அரசிற்கு கடுமையாக வலியுறுத்துகிறது.

தாயகப் பணியில்
நா. முருகானந்தம்

மாநில பொதுச் செயலாளர்

தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம்  உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
தொலைபேசி: 044-28457676
4-7-2018
பத்திரிகை அறிக்கை
உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது.
நேற்று, சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் நிதியை ஹஜ் செல்லும் முஸ்லீம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.
ஓட்டு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டுதான் இந்த மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும் நிதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மூச்சுக்கு முன்னூறு தடவை மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்து சமய அறநிலையத்துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும். ஜெருசலம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் இவர்கள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசுத் துறை நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவே தமிழக அரசு தட்டுத்தடுமாறி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால், மேலும் நிதி சுமை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் மோசமடையும்.
சிறுபான்மையினரை திருப்தி செய்யும் தாஜா அரசியலால் மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்படுகிறது. இப்படி வரிப்பணத்தை சீரழித்துவிட்டு, கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வருவதை தமிழக முதல்வரும், நிதி அமைச்சரும் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறது.
உச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)