Tag Archives: #சித்திரை

ரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – மாநில செயலாளர் குற்றாலநாதன்

16.04.2020

அனுப்புநர்
கா.குற்றாலநாதன்
திருநெல்வேலி

பெறுநர்

சென்னை

வணக்கம்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 ) தை பொங்கலுக்கு அரிசியும் வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும். மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது.

2. ) அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. தற்போதுள்ள கொரோனா தடை காலத்திலும் அந்த PDSஅமைப்பு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது .

பொது விநியோக திட்டத்தில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. அவ்வாறு இருக்கும்போது அரசு வழங்கும் அரிசியை பள்ளிவாசலில் வழங்குவது சரியா ? தமிழகத்தில் கொரோணா பரவலுக்கு பெருமளவு காரணம் என்ன என்பதை அறிந்த அரசே மீண்டும் சமூக பரவலுக்கு வழிவகுக்கலாமா ?

3) ஊரடங்கு உத்தரவினால் கோவில்கள், சர்ச்சுகள் எல்லாம் கடந்த 21 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அரிசி வழங்குவதற்காக பள்ளிவாசலை மட்டும் திறக்க சொல்வது நியாயமா?

தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம், புனித வெள்ளி, ஈஸ்டர் என எந்த பண்டிகைக்கும் எந்த வழிபாட்டு தலத்திலும் எந்த மக்களும் அனுமதிக்கபடாத நிலையில் பள்ளிவாசலில் அரிசி வாங்க மட்டும்திறக்கலாமா ? பொதுமக்களை அனுமதிக்கலாமா ? இது பாரபட்சமான நடவடிக்கை என பொதுமக்கள் கருதுகிறார்கள்

4 ) கோவில்களையும் சர்ச்சைகளையும் திறந்தால் மட்டும் நோய் தொற்று பரவும் . ரம்ஜான் அரிசி கொடுக்க பள்ளிவாசலை திறந்து கூட்டம் சேர்த்தால் நோய் பெற்று பரவாதா?

ஆகவே ரமலான் நோன்பு அரிசியை வழிபாட்டு தலங்களை திறந்து பொதுமக்களை திரட்டி அரிசி வழங்கி கொரோணா தொற்று பரவலுக்கு அரசே வழிவகுக்காமல் தீபாவளி, பொங்கல் இனாம் போல அனைத்து மக்களுக்கும் மதசார்பற்ற அரசு மத பாகுபாடின்றி பொது விநியோக திட்டம் மூலம் ரேசன் கடைகளில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்

கா.குற்றாலநாதன்

மாநில செயலாளர்

இந்துமுன்னணி
நெல்லை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் கோரிக்கை

15.04.2020

பத்திரிகையில் அறிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அரசாங்கமே கூழ் காய்ச்சுவதற்கு உண்டான அரிசி மற்றும் தானியங்களை
இலவசமாகக் கொடுத்தது உதவ வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கின்றது.

கடந்த காலங்களில் இது போன்ற கொள்ளை நோய்கள் வந்த போது” குறிப்பாக பிளேக் நோய் வந்தபோது தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டி சிறப்பு வேண்டுதல்களை வைத்து ப்ளேக் என்ற பெயரிலேயே பல பிளேக் மாரியம்மன் கோவில்கள் நிறுவப்பட்டு
அவற்றில் வழிபாடுகள் நடத்தப்பட்டன என்பது கடந்த கால வரலாறு. இது இந்துக்களுடைய நம்பிக்கை.

ஆகவே தமிழக அரசாங்கம் தற்போது இந்துக்களின் பெரும் நம்பிக்கையான சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும்
நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பதுடன் அதற்குண்டான தானியங்கள்” அரிசி போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும்”

மேலும் கூழ் வினியோகிக்க ஏதுவாக அரசாங்கமே தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றக்கூடிய ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். அல்லது தன்னார்வலர்கள் கையில் அதை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது”
உடனடியாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்று இந்துக்களும் மற்றும் இந்துமுன்னணி இயக்கமும் ஆவலோடு
எதிர்பார்க்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்