23.03.2020
SDPI மற்றும் PFI அமைப்புகளை தடை செய்யவேண்டும் மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம்
திருப்பூர் கோட்ட செயலாளர் திரு. மோகன சுந்தரம் கார் எரிப்பு சம்பவத்தில் SDPI அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் SDPI அமைப்பானது சம்பந்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மிக பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மறு பதிப்பே ஆகும்.
கேரளாவில் ஒரு பேராசிரியரை வெட்டியது முதற்கொண்டு , ராமலிங்கம் கொலை மற்றும் பலவேறு கார் எரிப்பு சம்பவங்களிலும் SDPI சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது கேரளா, கர்நாடக, தமிழ்நாடு, அஸ்ஸாம், உபி ஆகிய இடங்களை தலைமையகமாகக் கொண்டு KPF, KGF, PFI போன்ற பல்வேறு பெயர்களில் இயங்கிய இந்த அமைப்புகள் தற்போது SDPI என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு திட்டமிட்ட பொய் செய்திகளை பரப்புகிறது. முஸ்லீம் இளைஞர்களிடம் பல்வேறு பொய் வீடியோக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு ஆபத்து என்று கூறி மூளைச் சலவை செய்கிறது. ISIS அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையை செய்கிறது. இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் SDPI தடை செய்யப்பட்டுள்ளது .
எனவே அமைதிப்பூங்காவான தமிழகத்தைக் காக்க மத்திய , மாநில உளவுத் துறைகள் நன்கு கண்காணிக்க வேண்டும். இந்த SDPI வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பெற்று பாரத நாட்டில் வன்முறைகளை தூண்டுகிறது. எனவே இந்த அமைப்பை மாநில உளவுத்துறை மட்டுமல்லாமல் மத்திய உளவுத் துறையும் சேர்ந்து இவர்களது செயல்பாடுகளைக் கவனித்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும். மேலும் இவர்களது பண ஆதாரத்தையும் கண்டு பிடிக்க வேண்டும் . இவர்களது மறைமுக ஆதரவாளர்கள், இவர்களுக்கு இடம் கொடுக்கும் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டித்து, இரும்புக் கரம் கொண்டு அடக்கி தமிழகத்தையும், பாரதத்தையும் பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்