Category Archives: சென்னை கோட்டம்

வீரத்துறவி அறிக்கை- லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
தொலைபேசி: 044-28457676
21-1-2019

பத்திரிகை அறிக்கை

அநாகரிமாக, தேசவிரோதமாக செயல்படும் லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நேற்று லயோலா கல்லூரியில், ஓவிய கண்காட்சி ஒன்றை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் துவக்கி வைத்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை கொச்சைபடுத்தியும், மத வெறுப்பை வளர்க்கும் விதமாகவும், பாரத மாதாவையும், பாரத பண்பாட்டையும், பாரத பிரதமரையும் அவமதித்தும், எழுத்திலோ, படத்திலோ காட்டமுடியாக அநாகரிகமான ஓவியங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதனை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஓர் அரங்கில் நடந்தாலும், இது பொது நிகழ்ச்சி. அநாகரிமான முறையில் இதுபோன்று வேறு மதங்களைப் பற்றியோ, அரசியல் தலைவர்களை பற்றியோ சித்திரிக்கப்பட்டிருந்தால் காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருந்திருக்கும்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொடுங்கோலன் ஔரங்கசீப் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரித்து ஓவிய கண்காட்சியை ஒரு பெண் நடத்தியபோது (இந்த கண்காட்சி வரலாற்று சம்பவங்களை பின்னணியில், நாகரிகமான முறையில் வரையப்பட்டிருந்தவை) தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தது என்பதை நினைவு கூர்கிறோம்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இந்த ஓவிய கண்காட்சியை திறந்தது வைத்துடன் பார்வையிட்டிருக்கிறார். அவரது தலைமையில், வக்கிரமான, பாலியல் படங்கள் இக்கண்காட்சி நடைபெற்றிருக்கிறது என்றால், அவரது நம்பகத் தன்மையை, நடுநிலைமையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்று வரும்போது, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அதிகாரிகளானாலும் சரி, அரசியல்வாதிகளானாலும் சரி, அவர்கள் மதம் சார்ந்து இருப்பதோடு மட்டுமல்ல, இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த, கேவலப்படுத்தவும் ஆதரவு தருகிறார்கள் என்பதற்கு மேலும் இந்நிகழ்ச்சி ஒரு சான்று.

தேசவிரோத, மத வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்தி மதக் கலவரத்தை உண்டாக்கும் தீயநோக்கோடு பல காரியங்களுக்கு லயோலா கல்லூரி மையமாக இருந்து வருகிறது. இது ஒரு தன்னாட்சி கல்லூரி என்றாலும், இந்திய சட்டத்திற்குக் கட்டுப்பட்டதே ஆகும். மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறையினால் தான் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய நிதியை பெறும் கல்லூரியாக லயோலா கல்லூரி இருந்து வருகிறது. எனவே, தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுப்பை வளர்க்கும் இக்கண்காட்சியை நடத்திய லயோலா கல்லூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு இன்று அளிக்கப்படுகிறது. அந்த புகாரின் மீது தமிழக காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

நடுநிலையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய, ஆன்மிக பெரியோர்கள் அநாகரிமான, மதவெறுப்பை வளர்க்கும் இச்செயலை மனந்திறந்து கண்டிக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

இராம கோபாலன்

சென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை

இராம கோபாலன்நிறுவன அமைப்பாளர்இந்து முன்னணி,தமிழ்நாடு59, ஐயா முதலித் தெரு,சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.தொலைபேசி: 044-28457676பத்திரிகை அறிக்கைஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில்இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு!தமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறிவைத்துத் தாக்குப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தை பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோத போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை எப்போதும் எதிர்ப்பு. எதற்கும் எதிர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத்தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் அவர்கள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணைபோயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட, ராஜராஜசோழன், லோகாமாதேவி சிலைகள் மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்தபின் தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்துவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது. கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவனைவாதகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசைத்திருப்பி வருகிறது.இப்படிப்பட்ட ஆபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.வருகின்ற ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது.தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.ஊடக நண்பர்களும், இம்மாநாடு பற்றிய செய்தியினை வெளியிட்டும், மாநாட்டிற்கு முதன்மை செய்தி ஆசிரியர், மற்றும் புகைப்பட/விடியோ கலைஞர்களை அனுப்பி நிகழ்வினை தொகுத்தும் வெளியிட வேண்டுகிறோம்.நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம்.தர்மம் வென்று தீரும். தர்மத்திற்கு அனைவரும் துணை நிற்போம். தமிழகத்தைப் பாதுகாப்போம், பாரத தேசத்தை வலிமைப்படுத்துவோம்.நன்றி,என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்(இராம கோபாலன்)

புதுமனை புது மனை புகு விழா 

இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் காரணமாக  உயிர் நீத்த  அமரர் பாடி சுரேஷ்  அவர்கள் குடும்பத்தினருக்கு இயக்கம் சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. 

விழாவில் வீரத் துறவி  இராம.கோபாலன் கலந்து கொண்டு  ஆசீர்வதித்தார் 

சென்னை – பதினோறு தொகுதிகளில் ஊழியர்கள் சந்திப்பு

28.01.2016 அன்று சென்னை மாநகரின் 10 தொகுதிகளில் ஒரே நாளில் ஊழியர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாநகரின் அனைத்து டிவிக்ஷன்களிலும் , வீதிகளிலும் கிளைக்கமிட்டிகள்  அமைக்கப்பட வேண்டும்  என்பதற்கான  ஆயத்தப்பணிகள் துவங்கியது.

மாநில பொருப்பாளார்கள் 10 பேர்கள் வழிநடத்த மிகச் சிறந்த முறையில் நிகழ்ச்சிகள் நடந்தேறின.
11 பகுதியில் 40 வார்டிலிருந்து 563 பேர் பங்கு கொண்டனர்.

image

திடீர் சர்ச் – தடுக்கப்பட்டது

வெற்றிச்செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று திடீர் சர்ச்கள் கட்டப்படுவது தடுத்து நிறுத்தபட்டது.

RTO தலைமையில் நடைபெற்ற meeting யில் மாவட்ட ஆட்சியர் இடம் அனுமதி பெற்ற பின் மட்டுமே Chruch கட்ட வேண்டும் என்ற தகவலை நாம் கூறியும், அதிகாரிகள்  ஏற்க மறுத்து மிக பெரிய வாக்குவாதம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாட்டு கலவரத்திற்கு பிறகு அரசு நியமித்த கமிஷன் தந்த அறிக்கையின் அடிப்படையில்  பிறப்பித்த ஆணையை காண்பித்த பிறகும் அதிகாரிகள்  ஒப்புக்கொள்ளவில்லை , அதோடு மட்டுமல்லாது அது அரசு ஆணையே அல்ல எனவும் அரசுக்கு பரிந்துரை மட்டுமே  என வாக்குவாதம் செய்தனர்.

பிறகு 2015 Feb மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற வழக்கில் உள்ள தீர்ப்பு காண்பித்த பிறகு சர்ச்க்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டனர்

கிறித்தவ ஆதரவாளர்களாக அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்க தக்கது

வேலூர் ஆர்ப்பாட்டம் – ஆலயத்தின் மீது கைவைக்காதே!!

வேலூர்மாவட்டம் திமிரியில் புதியதாக சொந்த இடத்தில் கட்டிய கோவிலை இடித்த திமிரிEO முகம்மது ரிஸ்வானை கண்டித்து ராணிப்பேட்டை RDO அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது

image

ஊழியர் கூட்டம் வேலூர்

வேலூர் மாவட்ட இந்துமுன்னணி ஊழியர் கூட்டம் வேலூர் ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்றது இதில் மாநில அமைப்பாளர் பக்தன்ஜி கலந்துதுகொண்டு வழிநடத்தினார்.

image

மண்டல பொதுக்குழு – மார்ச் 1( வடக்கு மாவட்டங்கள் )

சென்னை உட்பட தமிழகத்தின் வாடா பகுதி மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு எதிர்வரும் மார்ச் 1 ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) ஆம்பூரில் நடைபெறும்.

AriseAwake_p

ஆர்பாட்டம் -போச்சம்பள்ளி

IMG-20141013-WA0026IMG-20141013-WA002112.10.14 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில்

பாலாறு – தென்பென்னை இணைப்பு பழைய வழி தடத்தை மாற்றி புதிய வழிதடத்தில் அமைப்பதை கண்டித்து

(புதிய வழிதடத்தில் 9பழைமை வாய்ந்த திருக்கோவில்கள் விவசாயநிலங்கள் பாதிக்கபடுகிறது. பழைய வழிதடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. புதிய வழிதடத்தை உருவாக்கிய பொறியாளர் பெயர் சித்திக்)

பாதிக்கபட்ட கிராம மக்கள் நூற்றுகணக்கில் திரண்டு வந்து

இந்துமுன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது.  . . .