Daily Archives: May 26, 2015

மாவோயிஸ்ட் – நக்ஸல் – ரெட் அலெர்ட்

கோவை அருகே கருமத்தம்பட்டியில் கடந்த 5 ம் தேதி இரவு மாவோயிஸ்ட் எனப்படும் நக்ஸல் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரிடம் இருந்து செல்போன்கள், டேப்லெட், பென் டிரைவ், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 50 ஆவணங்களும் சிக்கியுள்ளன. மேலும் தென் மாநில எல்லைப் பகுதிகளைக் குறிக்கும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

கேரளாவில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்து அவர்கள் அடிக்கடி தமிழகத்தின் பலபகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.

சில மாதங்களுக்கு முன், கோவை எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பை தீ வைத்துக் கொளுத்தியும், வனப் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் அட்டகாசம் செய்தனர் மாவோயிஸ்ட்கள். இந்நிலையில், கேரளாவில் மாவோயிஸ்ட்களைப் பிடிக்க போலீசார் சோதனையைத் தீவிரப்படுத்தினர். தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்குவதாகவும் தமிழக போலீசார் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள போலீசார் தமிழக போலீஸாரிடம் தகவல் கொடுத்திருந்தனர்.

 

ஆந்திர மாநிலப் பகுதிகளிலிருந்தும் பல அதிரடி தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது இந்த நக்ஸல்பாரி குழுக்கள்.  அந்த மாநிலத்தின் உளவுப் பிரிவும் தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் பதுங்கி இருப்பதாக ஆந்திர மாநில சிறப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசாரின் துப்பு கிடைத்த பிறகு, கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் காரில் வந்த 5 பேர் தாங்கள் வந்த காரை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது தமிழக கியூ பிரிவு போலீசாரும், ஆந்திர மாநில போலீசாரும் துப்பாக்கி முனையில் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். தங்களை போலீசார் அடையாளம் கண்டுகொண்டனர் என்பதை அறிந்த அவர்கள் 5 பேரும் கோஷம் போட்டபடி போலீசாரிடம் சரணடைந்தனர். அவர்கள் கேரள மாவோயிஸ்ட்கள் என்றும், அவர்களில் ஒருவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுத் தலைவர் என்றும் தெரியவந்தது.

அவர் பெயர் ரூபேஷ் (40) என்றும், கேரள மாநிலம், திருசூரைச் சேர்ந்த அவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவருடன் அவரது மனைவி சைனா என்ற திருசூரைச் சேர்ந்த பெண்ணும் பிடிபட்டார். மேலும், அனூப் (30), கண்ணன் (25) ஈஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கண்ணன், ஈஸ்வரன் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் தமிழகத்தில் பதுங்கியிருக்க இவர்கள் இருவரும் உதவியதாகத் தெரியவந்தது.

கேரளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவை உருவாக்கி தீவிரமாக செயல்பட்டு வந்த ரூபேஷுக்குக் கீழ் 50க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களாக செயல்பட்டு வந்துள்ளனர். ரூபேஷ் சட்டம் படித்துள்ளார். பின்னர் இந்த இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் தீவிரவாதி சுந்தரி என்பவரும், ரூபேசின் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது.

தமிழக காவல்துறை எடுபிடித் துறையாக மாறி உளவு விஷயங்களில் கோட்டை விட்டுள்ளது மிகவும் வெட்ககேடான விஷயம். அரசியல் சதுரங்க விளையாட்டுகளில் மூக்கை நுழைக்காது, தேச பாதுகாப்பினில் அக்கறை செலுத்துவதில் காவல்துறையின் கவனம் இருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த சிவப்பு நிற ரத்தவெறி பிடித்தவர்கள் தேசத்தின் மிகபெரும் விஷ வித்துக்கள். இன்று மாத்திரமல்ல எப்பொழுதுமே கம்யூனிஸ்ட், அது சார்ந்த நக்ஸல் மாவோயிஸ்ட் போன்ற இயக்கங்கள் தேச விரோதிகளாகவே இருந்து வருகின்றன. மக்களை தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்து, தேசம் மக்களுக்கு எதிராக இருக்கிறது என மூளைச் சலவை செய்து, அதற்காக ஆயுதம் ஏந்தி போராடவேண்டும் என மக்களைத் தூண்டி அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றி  இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்கள்.

இந்த தேசத்தின் மரியாதைக்குரிய தலைவர்களை, விடுதலைக்காக தியாகம் செய்துள்ள தலைவர்களை மதிக்காமல் வேறுநாட்டு வதலைவர்களை புரட்சிக்காரர்கள் என்று கொண்டாடுபவர்கள். நேதாஜியை ஜப்பானின் நாய் என்று தூற்றியவர்கள்.

இந்த நாடு அடிமைப்பட்டே கிடக்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலேயரிடம் கெஞ்சியவர்கள்.  சீனத்தையும், ரஷ்யாவையும் தங்களது தேசமாக கொண்டாடுபவர்கள்.

எல்லாவற்றையும்விட இந்த தேசத்தில் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரும் ரகசிய சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சீனத்தில் துவங்கி நேபாளம் வழியாக சத்திஸ்கர், ஜார்கண்ட்,ஓடிஸா, ஆந்திரா, வடக்கு கர்நாடகா, வழியாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம் ஈரோடு வழியாக கேரளா வரை மிகப்பெரிய கம்பளம் போன்ற ஒரு வடிவத்தில் இந்த தேசத்தில் கம்யுனிசத்தை நிலைநாட்டிட வேண்டும் என மிகப்பெரிய ஆயுத போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

இதை லட்சியமாக ஏற்று சபதம் செய்து நாட்டை துண்டாக்கிட எண்ணும் மாவோயிஸ்ட் நக்சல்களின் ஒரு குழுவின் தலைவன் மற்றும் சிலர் தான் இன்று கோவையில் பிடிபட்டுள்ளனர்.

இந்த தேசத்தில் எப்படி இஸ்லாமிய பயங்கரவாதம் பரவி புரையோடி வருகிறதோ, கிறிஸ்தவ மதமாற்றம் பரவி புரையோடி வருகிறதோ, அதைப்போலவே இந்த நக்சல் கம்யுனிசத் தத்துவமும் பரவி வருகிறது. இதை வேரும், வேரடி மண்ணுமாக களைந்து எறிவதில் அனைத்து மாநில காவல்துறைகளும், மத்திய அரசும் முனைப்போச்டு இருக்கவேண்டும். இதில் மெத்தனம் காட்டுவது தேசத்திற்கு ஆபத்தாக முடியும்.

தமிழக பாதுகாப்பு மாநாடு ஏன்? கோவை நோக்கி அணிவகுப்போம்

இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி இந்துமுன்னனியின் 7 வது மாநில மாநாடு ஜூன் 7 ஆம் தேதியன்று கோவை கொடீசியா வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடை பெற உள்ளது.

ஏன்இந்த மாநாடு ?

தமிழகத்தைச் சூழ்ந்துள்ள அபாயத்தை உணர வேண்டும். ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் உருவெடுத்து வருகின்றன.

சமீபகாலமாக மாவோயிஸ்ட்அச்சுறுத்தல் அதிகரித்துவருகிறது. கோவையில் சமீபத்தில் பிடிபட்ட பயங்கரவாதிகள் மூலமாக இது நிரூபணமாகியுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்ந்து பெருகி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஏராளமான மிரட்டல் கடிதங்கள், செய்திகள் தமிழகம் குரிவைக்கப்படுவதை உறுதி செய்கிறது. இருந்தும் காவல்துறை நடவடிக்கை பூஜ்யமாகவே இருக்கிறது.

கிறிஸ்தவ மதபிரச்சாரம் மதமாற்றத்திற்காகவும்,நாட்டின் இறையாண்மையை  குறிவைத்தும் வெளிநாடுகளிலிருந்து பல கோடான கோடி டாலர்கள்வெள்ளமெனப் பாய்கிறது. கூடன்குளம் ஒரு உதாரணம்.

நாத்திகவாதம் எனும் பேய்..கிறிஸ்தவ,முஸ்லீம்களின் உதவியோடு தமிழர் பண்பாட்டை சீர்குலைக்கிறது.சமீபத்தில் தி.க. நடத்திய தாலி அகற்றும் நிகழ்ச்சி,மாட்டிறைச்சி பிரியாணி விருந்து போன்றவை மூலம் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே இத்தகைய அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்துக்கள் தங்களது வலுவான ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தவேண்டும்.

தமிழக பாதுகாப்பு மாநாட்டிற்கு குடும்பத்தோடு பங்கேற்க இன்றே திட்டமிடுவீர்.

முதலில் உங்கள் குடும்பத்தினர் வருகைக்காக பேருந்தில், ரயில்களில் முன்பதிவு செய்திடுவீர்…

இந்துமுன்னனியின் 7 வது மாநில மாநாடு குறித்து உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலமோ, கடித கோலமோ,குறுஞ்செய்தி (SMS), மின்னஞ்சல்,முகநூல்,வாட்சப் போன்ற சமூக ஊடங்கங்கள் மூலம் பரப்புங்கள்.

நாம் அனைவரும் இதற்க்கு ஆதரவு தரவேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துங்கள்.

அவர்கள் எந்த வகையில் கோவை வரப் போகிறார்களோ அதற்க்கான ஏற்பாடுகளை இப்போதே தொடங்கிட வலியுறுத்துங்கள் …

ஒவ்வொரு விழிப்படைந்த இந்துவும் தனது நண்பர்கள்,உறவினர்களில் 50 பேரையாவது மாநாட்டிற்கு அழைத்துவர உறுதி எடுக்க வைக்கவேண்டும்!

பாரத்மாதா கீ ஜெய்

 

 

செல்வீர்;சொல்வீர் – மாநில மாநாடு

இந்து முன்னணி 1980 ல் துவக்கட்டது. கன்னியாகுமரியில் முதல் மாநாடானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

வருகிற ஜூன் 7 ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற இருக்கின்ற ஐயா தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

2016 இல் தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிறது. அதற்க்கு இப்போதே இந்துக்கல்லின் வலிமையை உணர்த்தவும்,நமது நியாயமான கோரிக்கைகளை ஏற்க்க வைக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்து சமுதாயம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளது.சாதிவாரியாக பிரித்து ஓட்டுப் பெரும் நரித்தந்திர  அரசியல்வாதிகளிடமிருந்து விழிப்போடு நமது பிரதிநிதித்துவத்தை பெற இந்துக்கள் வலிமையை,ஒற்றுமை உணர்வை எடுத்துக்காட்டும் வகையில் கோவை மாநாடு மாபெரும் நிகழ்வாக அமைய வேண்டும். அதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும்.

வெற்றி மாநாடாக அது மாறும்போது இந்துக்களின் ஒற்றுமை, விழிப்புணர்வு வெளிப்படும்.

அரசியல் கட்சிகள் இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்த முன்வருவார்கள்.

தமிழகம் ஆண்மீகபூமி!.,  நாயன்மார்களும்,ஆழ்வார்களும் கட்டிக்காத்த இந்து உணர்வை தட்டி எழுப்பிட வேண்டும்.

இந்துக்கள் அரசியல்வாதிகளின் அடிமை என்ற எண்ணத்தை முறியடிப்போம்.

முதலில் நான் ஒரு இந்து! அதன்பிறகே இன்ன ஜாதி., இந்த மொழி என்பதெல்லாம்…என்று உரக்க கூறுவோம்.கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்து சமுதாயத்தை கேவலப்படுத்தும் நூல்களை எழுதும் எழுத்தாளர்களுக்கும், அதனை ஆதரிப்போருக்கும் சாவு மணியாக இந்த கோவை மாநாடு விளங்க வேண்டும்.

கோவை குலுங்குவது தமிழகம் முழுதும் எதிரொலிக்க வேண்டும்….

ஒவ்வொரு வார்டுகளிலும் , கிராமங்களிலும் இந்துமுன்னணி கிளைக்கமிட்டியானது துவங்கும் வண்ணம் இந்த மாநாட்டின் பிரதிபலிப்பு இருக்கவேண்டும்.

விளிப்படிந்த சமுதாயமே தன்னை தற்காத்துக்கொள்ள முடியும்! வில்லிப்புணர்வு ஏற்படுத்த உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் குடும்பத்தோடு மாநாட்டிற்கு வருவதை உறுதிப்படுத்துவோம்.

ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், வார்டுகளிலிருந்தும் மக்களை மாநாட்டில் கலந்து கொள்ளவைப்போம்…

மாநாடு குறித்த தகவலை பரப்புவோம் …….