தூத்துக்குடி- சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்குவது நடக்கின்றன – ஆட்சியருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
மாநில துணைத் தலைவர்
‌இந்து முன்னணி

பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தூத்துக்குடி.

ஐயா :
தூத்துக்குடி மாவட்டம் பிரையன்ட் நகர் 1 ஆம் தெருவில் உள்ள மசூதியில் மாலை 7.30 மணிக்கு அரசு பிரப்பித்துள்ள 144 வழிமுறைகளுக்கு மாறாக கூம்பு ஒலிபெருக்கியில் (கூம்பு வடிவ ஒலி பெருக்கி உபயோகிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ள நிலையிலும்) அழைப்பு விடுத்து நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது , அதுமட்டும் அல்லாமல் CAA சட்டத்தை எதிர்ப்பதற்கு ஆதரவும் திரட்டப்படுகிறது, விசாரித்தால் “மைக் செக்” என்று கூறுகிறார்கள்.

அதே போல் பிரையன்ட் நகர் 9 ஆம் தெருவில் உள்ள இம்மானுவேல் சர்ச்சில் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது, தாசில்தார் சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தும், கூட்டு பிரார்த்தனை நடந்துகொண்டே தான் இருக்கிறது. தாசில்தார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனால் தூத்துக்குடி சிவன் கோவில் வாசலை திரை போடு மூடியுள்ளனர், மாவட்ட நிர்வாகத்திடம் சுவாமியை மறைக்க வேண்டாம் திரையை எடுங்கள் என வைக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஜெயராணி தெரு, தெற்கு புதுத்தெரு , மீ.கா. தெருக்களில் சுமார் 40 க்கு மேற்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். பர்மா காலனி, செல்வநாயகபுரம் பகுதியில் வாங்கு ஓதுவதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலே கூறியுள்ள விடயங்களுக்கு தாங்கள் சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *