கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

01.07.2020

கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வழிபாடு சார்ந்த விஷயங்களுக்கு குறிப்பாக கோவில்களைத் திறப்பது உள்ளிட்ட விஷயங்களில் தமிழக அரசு மெத்தனம் காட்டிவிட்டது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மக்கள் பீதியில் , மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான். இதை யாரும் மறுக்கமுடியாது.
இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிகம் இருக்கிறது. அதற்கு காரணம் கோவில்கள் தமிழகத்தில் திறக்கப்படாததுதான் என்று மக்கள் எண்ணுகிறார்கள். கோவில்கள் திறந்திருந்த பல மாநிலகளில் இன்று கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்த சமயத்தில் முழு முதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் வழிபாடு எத்தகைய கடும் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்துக்கள் அனைவரது வீட்டிலும் இது கொண்டாடப் படும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.
ஆகவே தமிழக அரசு இதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது.
அதே சமயம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரே அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவினை தக்க ஏற்பாடுகளுடன் எளிமையாக நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விநாகர் சதுர்த்தி முலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுகிறார்கள். வியாபார புழக்கம் பெரிய அளவில் ஏற்படுகிறது. கிராமியக் கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள், விநாயகர் திருமேனி செய்பவர்கள் வாகன ஓட்டுனர்கள் இப்படியாக பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடியது விநாயகர் சதுர்த்தி ஆகும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி இயக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக எளிய முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலம் சிறப்பாக கொண்டாடுவதில்லை என இந்து முன்னணி முடிவெடுத்துள்ளது.
பாரத பிரதமரின் அறிவுரையின் படி எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்திக்காக பொது மக்களிடம் நன்கொடை வாங்குவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது.
எனவே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதர்கான வழிமுறைகளை ஏற்படுத்தி விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தி விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு வழிகாட்டி உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணிகளில்

காடேஸ்வராசி.சுப்பிரமணிம்
மாநிலத்தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *