பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்

18.11.2020

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவைப் போற்றுவோம்..
சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம், பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு
`பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்டிட
இந்து முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

செக்கிழுத்த செம்மல், சுதேசி கப்பல் ஓட்டி, வெள்ளைக்கார கிறிஸ்தவர்களை நடுங்க வைத்த சுதந்திர போராட்ட சிங்கம் வ.உ.சிதம்பரனார் 84வது நினைவு தினம் இன்று. தியாகி வ.உ.சிதம்பரனார் தனது கடைசி காலத்தில் சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்தார். அவரது 84வது நினைவு தினத்தை முன்னிட்டு, அப்பகுயில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இந்து முன்னணி சார்பில், எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து, நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட இருக்கின்ற மெட்ரோ ரயில் திட்டத்தில், வ.உ.சி. அவர்கள் பெரம்பூர் பகுதியில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம், `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ ரயில் நிலையம்’ என பெயர் சூட்டிட சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நாடு சுதந்திரம் அடைய தனது சொத்து, சுகங்களை இழந்து தனது முதுமையில் வறுமையில் வாடிய பொழுதும் கலங்காத உள்ளத்தோடு இருந்தவர் வ.உ.சி. நாடு சுயசார்புடன் முன்னேற சுதேசி சிந்தனை அவசியம் என பாரத பிரதமரால் சுட்டிக்காட்டப்படுகிறது. அத்தகைய சுதேசி உணர்வால், ஆங்கிலேய வெள்ளையனுக்கு எதிராக சுதேசி கப்பல் இரண்டை வாங்கி செலுத்தியவர் வ.உ.சி.

இந்து முன்னணி சார்பில் இன்று, தமிழகம் முழுவதும் வ.உ.சி. திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, அவரது நினைவு போற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(த. மனோகரன்)
மாநில செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *