தமிழக பாதுகாப்பு மாநாடு ஏன்? கோவை நோக்கி அணிவகுப்போம்

இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி இந்துமுன்னனியின் 7 வது மாநில மாநாடு ஜூன் 7 ஆம் தேதியன்று கோவை கொடீசியா வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடை பெற உள்ளது.

ஏன்இந்த மாநாடு ?

தமிழகத்தைச் சூழ்ந்துள்ள அபாயத்தை உணர வேண்டும். ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் உருவெடுத்து வருகின்றன.

சமீபகாலமாக மாவோயிஸ்ட்அச்சுறுத்தல் அதிகரித்துவருகிறது. கோவையில் சமீபத்தில் பிடிபட்ட பயங்கரவாதிகள் மூலமாக இது நிரூபணமாகியுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்ந்து பெருகி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஏராளமான மிரட்டல் கடிதங்கள், செய்திகள் தமிழகம் குரிவைக்கப்படுவதை உறுதி செய்கிறது. இருந்தும் காவல்துறை நடவடிக்கை பூஜ்யமாகவே இருக்கிறது.

கிறிஸ்தவ மதபிரச்சாரம் மதமாற்றத்திற்காகவும்,நாட்டின் இறையாண்மையை  குறிவைத்தும் வெளிநாடுகளிலிருந்து பல கோடான கோடி டாலர்கள்வெள்ளமெனப் பாய்கிறது. கூடன்குளம் ஒரு உதாரணம்.

நாத்திகவாதம் எனும் பேய்..கிறிஸ்தவ,முஸ்லீம்களின் உதவியோடு தமிழர் பண்பாட்டை சீர்குலைக்கிறது.சமீபத்தில் தி.க. நடத்திய தாலி அகற்றும் நிகழ்ச்சி,மாட்டிறைச்சி பிரியாணி விருந்து போன்றவை மூலம் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே இத்தகைய அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்துக்கள் தங்களது வலுவான ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தவேண்டும்.

தமிழக பாதுகாப்பு மாநாட்டிற்கு குடும்பத்தோடு பங்கேற்க இன்றே திட்டமிடுவீர்.

முதலில் உங்கள் குடும்பத்தினர் வருகைக்காக பேருந்தில், ரயில்களில் முன்பதிவு செய்திடுவீர்…

இந்துமுன்னனியின் 7 வது மாநில மாநாடு குறித்து உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலமோ, கடித கோலமோ,குறுஞ்செய்தி (SMS), மின்னஞ்சல்,முகநூல்,வாட்சப் போன்ற சமூக ஊடங்கங்கள் மூலம் பரப்புங்கள்.

நாம் அனைவரும் இதற்க்கு ஆதரவு தரவேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துங்கள்.

அவர்கள் எந்த வகையில் கோவை வரப் போகிறார்களோ அதற்க்கான ஏற்பாடுகளை இப்போதே தொடங்கிட வலியுறுத்துங்கள் …

ஒவ்வொரு விழிப்படைந்த இந்துவும் தனது நண்பர்கள்,உறவினர்களில் 50 பேரையாவது மாநாட்டிற்கு அழைத்துவர உறுதி எடுக்க வைக்கவேண்டும்!

பாரத்மாதா கீ ஜெய்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *