டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் – முதலமைச்சருக்கு மாநில துணைத் தலைவர் கடிதம்

V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணை தலைவர்

2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி.628213
9443382380

பெறுநர் : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,

ஐயா வணக்கம்,

கடந்த மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் மேற்கு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாஅத் தலைமை பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்குச் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டினம் பகுதியை சார்ந்த அரசு மருத்துவர் Dr.பாஷில் என்பவர் கலந்து கொண்டு ஊர் திரும்பி உள்ளார். அவருடன் காயல்பட்டணத்தை சேர்ந்த ஷேக் முகமது என்பவரும் சென்று வந்துள்ளார் . ஷேக் முகமதின் மனைவி Dr.நசிலிம் பாத்திமா திருச்செந்தூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் மருத்துவர்).

சேக் முகமது அவர்கள் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தது அவருடைய மனைவி Dr.நசிலிம் பாத்திமா அவர்களுக்கு நன்கு தெரியும்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் இந்த சூழ்நிலையில் அந்த நோயின் தாக்கம் முழுவதும் ஒரு மருத்துவராகிய இவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் இவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளாமல் அவர்களுடைய மருத்துவப் பணியைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.இது மன்னிக்க முடியாத குற்றம்.

நம் பாரத பிரதமர் அவர்கள் பல முறை தொலைக்காட்சி வாயிலாக மக்கள் முன் இந்த கொடிய நோயின் உடைய தாக்கம் குறித்தும் பல முன்னேறிய நாடுகள் இந்த நோயினால் படும் திண்டாட்டம் குறித்தும் விளக்கம் கொடுத்து மக்களை சுயக்கட்டுப்பாடு உத்தரவு மூலம் வீட்டிலேயே இருப்பதற்கு அறிவுறுத்தினார். மேலும் வெளியூர் சென்று வந்தவர்கள் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அனைவரையும் பரிசோதனை மேற்கொள்ளவும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தினார்.

அதனையும் மீறி இந்த இரண்டு மருத்துவர்களும் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.

ஒரு பாமர மக்கள் கூட இந்த நோயின் கொடுமையை புரிந்துள்ள இன்றைய சூழ்நிலையில் இவர்கள் வெளியே வந்து மருத்துவம் பார்ப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

ஒரு நாளைக்கு எத்தனை பொதுமக்களை இவர்கள் சந்திக்க நேர்ந்திருக்கும், இவர்கள் மூலம் எத்தனை பேருக்கு அந்த நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு அந்த அறிகுறி தென்படாமல் இருந்தாலும் அவர்கள் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பரவும் என்பது மருத்துவத் துறையில் இருக்கும் இவ்விருவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.

ஆனால் இவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இவ்வாறு பணியை தொடர்ந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அரசாங்கமே அந்த மாநாட்டிற்கு சென்று வந்த பயணிகளின் விபரங்களை வைத்து அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது. இந்த இரண்டு மருத்துவர்கள் செய்த தவறினை வேறு யாரும் செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் இவர்களுடைய மருத்துவர் சான்றையும் (degree certificate) அவர்கள் மருத்துவம் பார்ப்பதற்கான அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்துமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யுமாறு இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

தாயகப் பணியில்

வி.பி. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *