காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
-மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கொடிய தொற்று நோய் அனைவருக்கும் பரவி விடாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை
முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நோய் தொற்றிலிருந்து நம் மக்களை காப்பதற்காக நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பவர்கள், காவல்துறையினர்,
வருவாய்த்துறையினர் என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில்
நோய்த்தொற்று பரவாமல் இருக்க நம் அனைவரின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு மிகவும் அவசியம்.

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தமிழகத்தின் சில பகுதிகளிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பல பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை என்ற பெயரிலே கூட்டமாக கூடும் அராஜக போக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஏற்கனவே இஸ்லாமியர்கள் அரசினுடைய அறிவுரையையும், நிபந்தனைகளையும், உத்தரவுகளையும் பின்பற்றாமல் டெல்லியில்
தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை நடத்தியதன் விளைவுதான் இன்று நாடு முழுக்க வைரஸ் தொற்று நோய் பரவி இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்
இவர்கள் கூட்டமாக கூடுவது நமக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் அவ்வாறு ஒன்று சேர்ந்தவர்களை கலைந்து போக அமைதியான முறையில் அறிவுறுத்தியும் கேட்காமல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்
இதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

அரசாங்கம் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் துறையைச் சார்ந்த நண்பர்கள் விரைவில் குணமடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது
நன்றி வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா

சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *