Daily Archives: February 7, 2020

முடியாததை!! முடித்து காட்டியது !! இந்து முன்னணி – தூத்துக்குடியில் இந்து ஒற்றுமையின் வெளிப்பாடு

முடியாததை!!
முடித்து காட்டியது !!
இந்து முன்னணி .

எங்கே…?என்ன….?

தூத்துக்குடி மாநகர்
மேட்டுப்பட்டி, முத்தரையர் நகர் திரேஸ்புரம்(பெரிய ஊர்),விவேகானந்தர் நகர் (கரைவலை),புதிய துறைமுகம்( சுனாமி காலனி). இந்த ஊர்களை இந்து முன்னணி ஒருங்கிணைத்தது ….எதற்காக?

1.முத்தரையர் நகர் மீனவர்களை மணப்பாடு,ஆலந்தலை,போன்ற ஊர்களில் கிறிஸ்தவ மீனவர்கள் அவர்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று இந்து மீனவர்களின் படகுகளை பிடுங்கி வைத்து கொண்டனர்.

பாதிரியார் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் பஞ்சாயத்து செய்து ஒரு லட்ச ரூபாயை கிறிஸ்துவ சர்ச்க்கு அபதாரமாக கொடுத்தபின் படகுகளை விடுவித்தனர். தகவல் அறிந்த இந்துமுன்னணி இந்த விஷயத்தில் களமிறங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,மீன்வளத்துறை அமைச்சர் ,ஆகியோரிடம் மனுக்களை கொடுத்த பின் இன்றுவரை அந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

2. தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தீர்த்த நீரெடுக்க சங்கு முக விநாயகர் ஆலயத்திற்கு செல்வதுதான் வழக்கம்.
அந்த கோவில் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்த நேரத்தில் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி இதில் தலையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து பின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக அந்த ஆலயம் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

3.தூத்துக்குடி துறைமுகம் சார்பாக அந்தப் பகுதியில் 40 லட்சம் மதிப்பில் கழிப்பறை, குளியலறை,வலைக் கூடம்,மீனவர்களுக்கான உபகரணங்கள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.

4.விவேகானந்தர் நகர் (கரைவலை) பகுதி மீனவர்களை கிறிஸ்துவ மீனவர்களால் மீன் பிடிக்க கூடாது என்று தடை விதித்த போது மீன்வளத்துறை இணை இயக்குனரிடம் நேரடியாக சென்று இது சம்பந்தமாக பேசி இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த ஊர்களையெல்லாம் இணைத்து நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவினை இந்து முன்னணி சார்பாக மிகவும் கோலாகலமாக கொண்டாடியது.

அறநிலையத்துறையே பொருளாதார தீண்டாமையை உடனே நிறுத்து – இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அறிக்கை

அறநிலையத்துறையின் திருக்கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வாங்குவது என்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ! அதுவும் அதிக காசு கொடுப்பவர்களுக்கு ஒரு வசதியும், காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு ஒரு எந்த வசதியின்மையும் என்பது மட்டரகமான செயல்பாடு !

இது அரசாங்கமும் அறநிலையத்துறை செய்கின்ற அநியாயம் ! அட்டூழியம் ! அக்கிரமம் !

மேலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி கடந்த பல வருடங்களாக இந்து முன்னணி போராடி வரும் சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல இப்பொழுது திருச்செந்தூர் அறநிலைத்துறை 250 ரூபாய் தரிசனகட்டணம் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்டும் இலை விபூதி பிரசாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளது .

இது இந்துக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான செயலாகும் . இதை உடனே திருச்செந்தூர் அறநிலையத்துறை தடுத்து நிறுத்த வேண்டும் .

இந்த பொருளாதார தீண்டாமை இந்துக்களை பிளவுபடுத்தி இந்துக்கள் உள்ளேயே ஒரு வெறுப்பு வேற்றுமையை உருவாக்கும்சதி செயலாகும் .

உடனே இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்து முன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது .

அறநிலையத்துறையின் இந்த கொடுமையான செயல்திட்டத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டிக்க கூட முன்வராதது இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாகும் !

இந்த கேடுகெட்டதனம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டாவிட்டால் திருச்செந்தூர் அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் . ஆகவே தமிழக அரசும் அற நிலைய துறையும் உடனே இந்த பொருளாதார தீண்டாமையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

V P ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்