#இந்துமுன்னணி பேரியக்கத்தின் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்ற இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் துவங்கியது இந்து முன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மனோகர் கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் கோட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.அரசிடம் இருந்து பெறக்கூடிய நலத்திட்ட உதவிகள் குறித்தும், சமுதாய பாதுகாப்பில் ஆட்டோ ஓட்டுனர்களின் பங்களிப்பு குறித்தும் பேசப்படுகிறது.மேலும் ஆட்டோ ஓட்டுனர்களின் பாதுகாப்பு, காவல்துறை சார்ந்த பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வும் நடத்தப்படுகிறது….
Daily Archives: February 2, 2020
பயங்கரவாதத்திற்கு தீர்வு?
பாரிஸில் “சார்லி ஹெப்டோ‘ பத்திரிகை அலுவலகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு பெண் காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்ற இருவர் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர்.
இவர்களின் கூட்டாளியாகச் செயல்பட்ட அமேடி கூலிபலி, யூத பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளை சிறைப்பிடித்தார். இந்த சம்பவத்தில் பிணைக்கைதிகளாக இருந்த 4 யூதர்கள் கொல்லப்பட்டனர். போலீஸார் அங்கு நிகழ்த்திய தாக்குதலில் கூலிபலி கொல்லப்பட்டார்.
அவருடைய கூட்டாளியான ஹையட் பூமடியன் எனும் பெண்ணை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிரான்ஸ் எல்லையைக் கடந்து, துருக்கி வழியாக சிரியாவுக்குத் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது
பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலைகள் இஸ்லாமிய மதத்தின் உண்மை சொரூபத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியது.
எங்கெல்லாம் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமாகிறதோ அங்கெல்லாம் அவர்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல் தனித்து இயங்கி தேசத்தின் சுதந்திரத்திற்கு, இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக ஆவார்கள் என்ற வரலாற்று உண்மை மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.
சுதந்திரம்(தனி மனித ), சமத்துவம் , சகோதரத்துவம் , விமர்சனம் செய்வதற்கான உரிமை என்ற ஜனநாயகத்தின் அத்துணை கூறுகளையும் தகர்த்து எறியக்கூடிய “ஜிகாத்” எனும் மதவாத அசுர சக்தியை உலகம் காணத் துவங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோயாக ஜிகாத் பயங்கரவாதம் மாறி வருகிறது.
இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் ; அதே சமயம் பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எள்ளளவும் சகிப்புத்தன்மையற்ற ஒரு சமுதாயமாக இஸ்லாம் ஆகி வருகிறது.
இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எந்தவித அரசியல் முகமும் கிடையாது. தேசம், பண்பாடு, கலாசாரம் எனும் அடிப்படையும் கிடையாது. உலகை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் எனும் அடிப்படைவாத கருத்தை முன்னிறுத்தி பயங்கரவாத படுகொலைகளை அரங்கேற்றி அச்சுறுத்தும் செயலே முன்னிறுத்தப்படுகிறது.
அமெரிக்கா சந்தித்த அல் – குவைதா தாக்குதல், இந்தியாவில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் உட்பட சிரியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்தவை, நடப்பவை என அனைத்தும் மத நம்பிக்கை என்ற பெயரில் எழுந்த மதவெறித் தாக்குதல்கள்.
அதற்கு அடிப்படையாக மதநம்பிக்கையுடன், இணையதள தகவல் மூலம் ஒருங்கிணைப்பு, அதற்கேற்ப சந்தை பொருளாதாரம் மூலம் பண பரிவர்த்தனை, ஹவாலா, போதைப்பொருள் கடத்தல் ஆகியவை சேர்வதால், இவற்றை எளிதில் கண்டறிவது அல்லது தடுப்பது மிகுந்த சவாலாக அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது.
எனினும் இந்த சம்பவங்களுக்குப் பிறகு இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உலகநாடுகள் (குறிப்பாக – பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா) சிந்திக்க ஆரம்பித்துவிட்டன.
அதே சமயம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சில தினங்களுக்கு முன் நடந்த பேரணி, உலகின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தாக அமைந்தது. பயங்கரவாதத்தை அனுமதித்து, சுதந்திரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது என்ற இந்த அமைதிப் பேரணி, உலகிற்கு புதிய செய்தியை சொல்லியிருக்கிறது.
ஒன்றிணைந்த மக்கள் சக்தியே இத்தகைய பயங்கரவாத செயல்களை வேரறுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது.
எந்த நாடாயினும் பெரும்பான்மை மக்கள், பலம் மிக்கவர்களாக, ஒற்றுமை மிக்கவர்களாக இருப்பதன் அவசியம் உணர்ந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படாது என்பது உண்மை.
பாரதத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் ஜாதி, இன, மொழி வேற்றுமை கடந்து இந்துக்கள் எனும் ஓருணர்வில் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்பதை பாரிசில் நடந்த பேரணி வலியுறுத்துகிறது.
ஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அபூர்வமான ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல பேர் வலைதளங்களில் பதிவிட்டார்கள் -“தீவிரவாதிக்கு மதம் இருக்க முடியாது; தீவிரவாதி செலுத்தப்பட்டவன்; அவனுக்கு எண்ணங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, சரி-தவறு என்கிற பேதங்கள் இல்லை. அவன் வில்லில் இருந்து எய்தப்பட்ட அம்பு’ – என்று.
‘நாடியா முராட்’ போல…
சரியாக மூன்று வருஷம் முன்பு – 2016-ஆம் ஆண்டு மே மாதம், நாடியா முராட்-அமால் க்ளூனி சந்திப்பு நடந்தது. இருவரும் பெண்கள் என்பதைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லாதவர்கள். இரு வேறு துருவங்கள்.
அமால் பிரமிக்க வைக்கிற பேரழகுப் பெண். சரியான உயரமும் விளம்பர மாடல்களின் உடல் அமைப்பும் கொண்டவர். அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர ஒரு இணையதளமே (“வெப்சைட்’) இருக்கிறது. ஆக்ஸ்போர்டு- இல் படித்து , நியூயார்க்கில் வழக்குரைஞர் தொழில் செய்யும் மாபெரும் பணக்காரப் பெண்.
இது போதாது என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை மணந்திருக்கிறார் (“யார் ஜார்ஜ் க்ளூனி என்று யோசிக்கிறீர்களா? – நம்ம “தல’ அஜித் மற்றும் நம் பிரபல நடிகர்களுக்கு “சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை’ சொல்லிக் கொடுத்த நடிகர், ஆஸ்கர் விருது பெற்றவர்). அமால் எங்கே போனாலும் ஆயிரம் பேராவது வந்து “ஆட்டோகிராப்’ கேட்பார்கள்.
நாடியா முராட்- யாராலும் கவனிக்கப்படாது கடந்து போகிறவர். ஏழை இராக்கியப் பெண். அதிகம் படிக்காதவர். சிறிய உடலமைப்பும், தலையைத் தூக்கி, கண்களைப் பார்த்துப் பேச முடியாத தயக்கமும் கொண்ட சிறு பெண்.
இந்த இரண்டு பேரும்தான் தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை அறிவித்திருக்கிறார்கள்-இரண்டு தனி மனிதர்களாக இணைந்து!
இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள நாடியாவின் வாழ்க்கையை நீங்கள் அறிய வேண்டும்.
இராக்கின் அழகான கிராமம் கோச்சோ. சிஞ்சார் என்கிற மலையின் பக்கத்தில் இருக்கிறது. “யஸீதி’ என்கிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கிராம மக்கள். யஸீதிக்கள் மயில் வடிவில் பூமிக்கு ஒரு இறைத் தூதர் வந்தார் என்றும், அவர்தான் இந்த உலகுக்கு வண்ணங்களைத் தந்தார் எனவும் நம்பும் மக்கள். மயிலை வணங்குகிறவர்கள். சுற்றிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். எல்லாரும் நேசமாய் வாழ்ந்தார்கள்-அந்தக் கிராமத்தை “ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாதிகள் ஒருநாள் சுற்றிவளைக்கும் வரை.
தீவிரவாதிகள் வந்தவுடன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டனர். 312 ஆண்கள் ஒரு மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் நாடியாவின் 6 சகோதரர்களும் அடக்கம்.
பெண்களில் வயதான பெண்கள் தனியாகவும், இளம் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். வயதான பெண்கள் உடனே கொல்லப்பட்டனர். நாடியாவின் அம்மா அப்போதுதான் இறந்திருக்க வேண்டும்.
இளம் பெண்கள் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு மோசூல் என்கிற நகரத்துக்குக் கொண்டு போகப்பட்டனர்-துப்பாக்கி முனையில். தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த நாடியாவுக்கு அழுவதற்கு நேரம் இல்லை அப்போது.
அன்று மோசூல் முழுவதும் “ஐஎஸ்ஐஎஸ்’ கட்டுப்பாட்டில் இருந்தது. அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள் ஏலம் விடப்பட்டனர் பாலியல் அடிமைகளாக… நாடியாவை ஏலத்தில் எடுத்தவன் ராட்சஸன் போல இருந்தான். அழுதாள் நாடியா-கொஞ்சம் சின்னவனாக இருந்த இன்னொருவனைத் தன்னை ஏலத்தில் எடுக்கச் சொல்லி. அவன் காலில் விழுந்து கதறினாள்.
எந்த ஓர் உயிரும், ஒரு வாழ்வும் இதைவிட கீழான நிலைக்குப் போக முடியாது என்று ஒரு புள்ளி உண்டா? உண்டென்றால் அன்று நாடியா அந்தப் புள்ளியில்தான் இருந்தாள்.
அந்த இரவில்தான் அவளுடைய உண்மையான தண்டனை ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட 90 நாள்கள். ஒரு பெண்ணின் உடலையும் மனதையும் ஆன்மாவையும் சுட்ட தீவிரவாதிகளின் கோர நடனம் அங்கே நடந்தது. கை மாறி மாறி ஏலத்தில் விடப்பட்ட நாள்கள். இரவா, பகலா என அறியாத பயங்கர நாள்கள். தப்பிக்க நினைத்தால் கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட நாள்கள்.
ஒரு முறை, நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் பூத்தில் அடைக்கப்பட்டாள் நாடியா. சுற்றிப்போகும் வாகனங்களின் அதிர்வுக்கும், மோசூல் நகரின் தகிக்கும் பாலைவன வெப்பத்துக்கும் நடுவே, போகும் வரும் வண்டியில் இருப்பவர்கள் எல்லாம் அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து… போக…
சிதறிய ரத்தத்துக்கும் குமட்டி குமட்டி எடுத்திருந்த வாந்திக்கும் இடையே கிடந்தது அந்தப் பெண் உடல்.
கடைசியாக ஏலத்தில் எடுத்தவன் சாவின் விளிம்பில் இருந்த நாடியாவிடம் அறிவித்தான்-நாளை அவளை சிரியாவுக்கு கூட்டிப் போய் அங்கே ஏலத்தில் விடப்போவதாக…எழக்கூட முடியாமல் இருந்தவளை வீட்டில் வைத்து விட்டு கதவைப் பூட்டாமல் போனான் அவன் – சாகப் போகிறவளால் எப்படி தப்பிக்க முடியும் என்று…
உயிரின் கடைசித் துளி வாழும் இச்சை-அதுதான் நாடியாவுக்கு எழுந்து நிற்கும் சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். எழுந்து வீட்டின் பின்னே வந்தாள். ஏழடி உயர “காம்பவுண்ட்’ சுவர் கொண்ட வீடு அது. 90 நாள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்த 19 வயது சின்னஞ்சிறு பெண் நாடியா அந்த ஏழடிச் சுவரைத் தாண்டிக் குதித்தாள். அவள் உயரம் நாலடி சில அங்குலங்கள்தான்!
அப்புறம்…? அப்புறமென்ன…இரண்டரை மணி நேரம் இருட்டில் நடந்து, ஏதோ ஒரு வீட்டின் கதவைத் தட்டி அடைக்கலம் கேட்டு, அவர்கள் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களால் காப்பாற்றப்பட்டு , எஞ்சியிருந்த ஒரே ஒரு அண்ணனைச் சந்தித்து, அகதிகள் முகாமில் வாழ்ந்து, தன்னைப்போல போர் அடிமைகளாய் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பினால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற முடிவு எடுத்து, அமால் க்ளூனியைச் சந்தித்து, அவரின் உதவியுடன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குப் போய், தனக்கும் மற்ற பெண்களுக்கும் நேர்ந்ததைப் பேசி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி-பெண்களை அழிக்கும் “ஐஎஸ்ஐஎஸ்’ தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறாள் நாடியா. 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவளும் அவள்தான்.
பரிசு பெற்றதற்கான பாராட்டுகளை ஏற்க நேரம் இல்லாமல் அவளும் அமால் க்ளூனியும் தொடர்ந்து தங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.
நாடியாவின் வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சுவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அதன் அருகில் நின்று கொண்டு நாடியாவிடம் கேட்கவேண்டும் – “அந்த ஏழடிச் சுவரை நோக்கி ஓடும்போது என்ன நினச்சுக்கிட்டிங்க நாடியா?’
துரத்தப்படும் எல்லாருக்கும் அப்படி ஒரு சுவர் உண்டு. “ஏழடிச் சுவரைத் தாவிக் குதிக்க நாலடி உயரம் போதும்’ என்கிற புதிய பெளதிக விதிகள் பாதிக்கப்பட்டவர்களால் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
எது அமாலயும் நாடியாவையும் இணைத்தது? இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இரு பெண்கள் . ஒருத்தி பாதிக்கப்பட்டவள். இன்னொருத்தி பாதுகாப்பின் உச்சத்தில் வாழுகிறவள். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு முகம் உண்டு’ என்று எழுத்தாளர் அம்பை சொல்லுவார்.
“அவர்களுக்கென்று ஒரு குரல் உண்டு. அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த முகத்தின் கண்களுக்கு கீழே இருக்கும் கரு வளையங்களை வருட வேண்டும்…’
அமால் அதைத்தான் செய்திருப்பார். அப்புறம்தான் அவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு போவதைப் பற்றிப் பேசியிருப்பார்கள்…
எனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. புல்வாமாவில் இறந்த வீரர்களின் மனைவிகளின் கைகளை, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கைகளை, நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் தன் இனியவர்களை இழந்த பெண்களின் கைகளை, கொழும்பில் சிதறிய உடல்களின் அருகே அமர்ந்து கதறியழும் பெண்களின் கைகளை, இன்னமும் சிரியாவிலும் இராக்கிலும் பாலியல் அடிமைகளாய் விற்கப்படும் பெண்களின் கைகளை…
தீவிரவாதிக்கு மதம் உண்டா? எனக்குத் தெரியாது, ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதம் இல்லை…உண்மையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை.
நாம் நம் கைகளை நீட்டினால் பிடித்துக்கொள்ள அவர்களுக்கு விரல்கள் மட்டும் உண்டு.