Tag Archives: surgical strike
தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…
இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.
மோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.
நாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
பயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

புல்வாமா தாக்குதல் – பதிலடியே சரியான தீர்வு- மத்திய அரசுக்கு இந்துமுன்னணி முழு ஆதரவு மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை
ஜம்மு & காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் CRPF படை வீரர்கள் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 42 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள மாவீரர்களை வணங்கி வீரவணக்க அஞ்சலி செலுத்துகிறது இந்துமுன்னணி மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கொடூர சம்பவத்தை தாங்கள்தான் நிகழ்த்தியதாக ஜெய்ஷ்- இ -முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இதனுடைய தலைவரான மசூத் அசார் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் , 1999 ஆண்டு விமானத்தை காந்தஹாருக்கு கடத்தி தீவிரவாதிகள் அவனை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்.
பாரத நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுகிறது . பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவி புரிகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும் , ஆயுத உதவியும் செய்கிறது.
பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் ஜம்மு காஷ்மீர் முழுதும் பரவி உள்ளார்கள். அவர்களுக்கு பண உதவி செய்து நமது நாட்டுக்கு எதிராக செயல்பட இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகள் உதவுகின்றன.
நேற்று நடந்த படுகொலை சம்பவத்தில் இறந்த வீரர்களின் உடலை எடுக்க சென்ற மற்ற வீரர்கள் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் . இதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
மத்திய அரசு இந்த தேச விரோத இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.
நாட்டின் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் இனி எண்ணம் கூட ஏற்படாத வண்ணம் வெறும் வேரடி மண்ணும் இல்லாமல் அடியோடு அழிப்பதே சரியான நடவடிக்கையாக அமையும். அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாட்டு மக்களும், இந்துமுன்னணி அமைப்பும் வழங்கும்.
மேலும் இந்த கொடூர தாக்குதல்களை ஆதரித்து, வரவேற்று ,மகிழ்ச்சி தெரிவித்து,சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டாடும் பயங்கரவாத ஆதரவாளர்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசை இந்த சமயத்தில் இந்துமுன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.