Tag Archives: #மதுவிலக்கு

மதுக்கடைகளை திறக்கும் முடிவு – கொரோனாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கும் முயற்சி- தமிழக நலன் கருதி இதை உடனடியாக கைவிட இந்துமுன்னணி கோருகிறது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

05.05.2020
பத்திரிகை அறிக்கை
காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

எதிர்வரும் 7 ம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது.

கொரோனா தாக்குதளில் வெகுவாக பீடித்துள்ள இந்த நிலையில் தமிழக அரசின் இந்தமுடிவு அதிர்ச்சியை அளிக்கிறது.

இதனால் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கேள்விக்குறியாகி கொரோனா பரவுவது அதிகரிக்கும் என்பது உறுதி.

கொரோனாவுக்கு அரசே சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தயாராகிவிட்டதா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

வேலை வாய்ப்புகள் இன்றி மக்கள் அன்றாட உணவிற்கே பெருத்த சிரமங்களை சந்தித்து வருகின்ற நிலையில், மதுக் கடைகள் திறக்கப்பட்டால் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்றுக் குடிக்க மக்களை அரசே தள்ளுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை, பணத்தை மதுக்கடைகள் மூலம் வசூல் செய்ய அரசு இந்த முயற்சியை மேற்கொள்கிறதோ என்று மக்கள் கருதுகிறார்கள்.

அரசு மதுக் கடைகளை திறக்க காண்பிக்கும் ஆர்வத்தை, பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோவில் அன்னதான திட்டத்திற்கு காண்பித்தால், மீண்டும் துவக்கினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று இந்துமுன்னணி எண்ணுகிறது.

50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவிலிருந்து காக்க வாய்ப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் இந்துமுன்னணி பேரியக்கம் கோரிக்கை விடுக்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்