இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி .சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை செய்தி
வணக்கம்.
திரைப்பட நடிகர் யோகிபாபு அவர்கள் நடித்து வெளிவர உள்ள காக்டெய்ல் என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது .
இந்த விளம்பரத்தில் தமிழ் கடவுள் முருகனின் போன்று யோகிபாபுவின் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது .மது வகைகளின் பெயரைத் தாங்கி வரும் திரைப்படம் ஒன்றிற்கு முருகப்பெருமான் போல வேடமணிந்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது முருக பக்தர்களையும், இந்துக்களின் மனதையும் புண்படுத்தும் விதமாக உள்ளது .
சம்மந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் மற்றும் யோகி பாபு ஆகியோர் இந்த செயலுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
நடிப்புத்துறை, கலை என்ற பெயரில் இந்து கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் தொடர்ந்து புண்படுத்தும் போக்கு தமிழ் திரைப்படத்துறையில் வாடிக்கையாக உள்ளது.
இதே போன்று மற்ற மத விஷயங்களை கிண்டல் செய்ய இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? இந்துக்கள் தட்டிக் கேட்க ஆரம்பித்தால் இந்துக்களை புண்படுத்தும் தமிழ் திரையுலகம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ஆகவே உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன் விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
தாயக பணியில்
சி.சுப்பிரமணியம் மாநிலத்தலைவர் ஹிந்து முன்னணி