கோவை,திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கான மண்டலப் பொதுக்குழு மார்ச் 15 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் நடைபெறும்.
Category Archives: கோவை கோட்டம்
மழை நிவாரணப் பணிகளில் இந்துமுன்னணி
தமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. திருப்பூரில் பெய்த மிக பலத்த மழையின் காரணமாக மக்கள் வசிக்கும் பல குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக நொய்யல் கரைப்பகுதி ஓரமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்துமுன்னணி ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். மேலும் உணவு விநியோகமும் நடைபெற்றது.
கோபால் ஜி பிறந்த நாள் நிகழ்ச்சி
கோபால் ஜி பிறந்த நாள் நிகழ்ச்சி
ஒன்றிய பயிற்சிமுகாம்
திருப்பூர் கிழக்கு மாவட்டம் – குண்டடம் ஒன்றியம் – விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் மூலம் தொடர்புக்கு வந்துள்ள புதிய நபர்களுக்கான 3 மணி நேர கார்யகர்த்தர் பயிற்சிமுகாம் முத்துகவுண்டன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 69 பேர் கலந்துகொண்ட இப்பயிற்சி முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பெரியசாமி., திரு.தமிழ்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. ராஜேஷ் அவர்கள் வழிநடத்தினார்.
ராஜகோபால் ஜி- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி-கோவை
அவினாசி சதுர்த்தி விழா
குருகுலத்தில் ஆடிவெள்ளி-விளக்கு பூஜை
திருப்பூர் வஞ்சிபாளையம் பாரதியார் குருகுலத்தில் 108 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் திரு.மூர்த்தி ஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிகாட்டினார். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் திருமதி.சாவித்திரி மூர்த்தி அவர்கள் பூஜை நடத்தினார். குருகுல மாணவர்களின் சிறப்பு பஜனை நிகழ்ச்சியுடன் பூஜை சிறப்பாக நடந்தது. இந்துமுன்னணி மாநில பேச்சாளர் திரு.சிங்கை பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.