Category Archives: கோவை கோட்டம்

மசூதிக்கு அனுமதி – அமைச்சருக்கு இந்துமுன்னணி கண்டனம்

திருச்செங்கோடு புராதன  நகரம் (heritage city) என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கு 9 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி உள்ளது. ஆனால் திருச்செங்கோடு பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள மசூதியில்  சேலம்  நகர ஊரமைப்புத் துறை (Town planning), மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் அனுமதி வாங்காமல்   சுமார் 90 அடி உயரத்திற்கு இரண்டு கோபுரங்கள் கட்டிக்கொண்டு உள்ளனர். (கைலாசநாதர் கோயில் கோபுரத்தைவிட இருமடங்கு) 19-06-2015 இந்துமுன்னணி சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட பிறகு திருச்செங்கோடு நகராட்சி நோட்டீஸ் கொடுத்து  கட்டுமானப்பணிகளை நிறுத்தி வைத்தனர். Town planning ல் இம்மசூதிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்ற தகவலும் RTI ல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் தங்கமணியின் வாய்மொழி உத்தரவின் பேரில் 31-08-2015 அன்று கட்டுமானப்பணிகளை தொடர்ந்தனர். மீண்டும் இந்துமுன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர், திருச்செங்கோடு RDO, DSP, நகர்மன்றத் தலைவர் , நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்த பின்பு    திருச்செங்கோடு RDO  2-09-2015 அன்று மசூதி நிர்வாகத்தினரை வரவைத்து, மசூதியில் அனுமதி இல்லாமல் கட்டுமானப்பணிகளை தொடரக் கூடாது , 07-09-2015 க்குள் சாரத்தை பிரிக்க வேண்டும் என எழுதி வாங்கினார். ஆனால் மீண்டும் அமைச்சர் தங்கமணியின் வாய்மொழி உத்தரவின் பேரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. RDO உத்தரவுக்கு மரியாதை கிடையாதா? வருவாய்த்துறையும், நகராட்சியும்  என்ன செய்து கொண்டுள்ளது?
அமைச்சர் தங்கமணி அவர்கள் சிறுபான்மையினரின்  ஓட்டு மட்டும் இருந்தால் போதும் என்று முடிவு செய்து விட்டார் போலும், இனி அவர் ஓட்டு கேட்டு பெரும்பான்மை இந்துக்களிடம் வரவேண்டாம். அர்த்தநாரீஸ்வரரை வணங்கும் உண்மையான பக்தர்கள் எவரும் இனி அமைச்சர் தங்கமணிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான்  நடக்கிறதா? தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம், பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம் உள்ளதா? சட்டம் அனைவருக்கும் சமமா? என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்தான் விளக்க வேண்டும்.

திடீர் சர்ச் – வழிபாடு நிறுத்தம் – சேலம்

சேலம் சூரமங்கலம் – அனுமதி இன்றி கிறித்தவ திடீர் சர்ச் – இந்துமுன்னணி தலையீட்டால் வழிபாடு நிறுத்தி வைப்பு. பெருகும் கிறித்தவ லேண்ட் ஜிகாத் , இந்துக்களே எச்சரிக்கை !!!

image

Scanned by CamScanner

ஈரோடு மாநகரில் சதுர்த்தி பொதுக்குழு

ஈரோடு மாநகர் மாவட்டத்தில் இந்து முன்னணி பொதுக்குழுக்கூட்டம்  நடைபெற்றது . 27 வது ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புற நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றிய  ஆலோசனைக்கூட்டம் மாநில செயலாளர் திரு.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

image

மண்டலப் பொதுக்குழு -மார்ச் 15 (மேற்கு மாவட்டங்கள்)

கோவை,திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கான மண்டலப் பொதுக்குழு மார்ச் 15 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் நடைபெறும்.

vvivekanandar sticker_2

மழை நிவாரணப் பணிகளில் இந்துமுன்னணி

தமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. திருப்பூரில் பெய்த மிக பலத்த மழையின் காரணமாக மக்கள் வசிக்கும் பல குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக நொய்யல் கரைப்பகுதி ஓரமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்துமுன்னணி ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.  மேலும் உணவு விநியோகமும் நடைபெற்றது.

IMG-20141028-WA0046[1]IMG-20141028-WA0029[1]IMG-20141028-WA0028[1]IMG-20141028-WA0022[1]IMG-20141028-WA0016[1]IMG-20141027-WA0129[1]IMG-20141027-WA0035[1]

கோபால் ஜி பிறந்த நாள் நிகழ்ச்சி

இந்து முன்னணி நிறுவன தலைவர் இராம.கோபாலன் ஜி அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு குருகுலத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைIMAG0625

ஒன்றிய பயிற்சிமுகாம்

திருப்பூர் கிழக்கு மாவட்டம் – குண்டடம் ஒன்றியம் –  விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் மூலம் தொடர்புக்கு வந்துள்ள புதிய நபர்களுக்கான 3 மணி நேர கார்யகர்த்தர் பயிற்சிமுகாம் முத்துகவுண்டன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 69 பேர் கலந்துகொண்ட இப்பயிற்சி முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பெரியசாமி., திரு.தமிழ்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. ராஜேஷ் அவர்கள் வழிநடத்தினார்.IMAG0611[1] IMAG0616[1]