All posts by Admin

மதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

இந்துமுன்னணி – தமிழ்நாடு

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்- மாவட்டம் தோறும் நடைபெறும்

தேதி 21.03.18, புதன்

மதவெறியை மாய்ப்போம்

1. சட்டவிரோதமாகவும், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தும் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுகளை அகற்றக் கோரியும்,

2. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன் அவர்களின் தீர்ப்பை நடைமுறைப் படுத்தக் கோரியும்,

3. இந்துக்கள் வாழ்கின்ற பகுதியில் மதமாற்றம் செய்வதற்காக இந்து மதத்தை இழிவு படுத்தியும், இந்து கடவுள்களை பேய், பிசாசு என்று கூறி அவதூறு செய்வதை கண்டித்தும்,

4. சிறுவயது இந்து குழந்தைகளுக்கு போட்டி என்ற பெயரில் சாக்லெட் கொடுத்து மூளைச் சலவை செய்து மதத்தை பிரச்சாரம் செய்பவர்களை கண்டித்தும்,

5. இவர்களுக்கு துணை போகும் நயவஞ்சக, இந்து விரோத அரசியல் வாதிகளை கண்டித்தும்

21 மார்ச் 2018 (வியாழக்கிழமை) அன்று
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்துமுன்னணி – தமிழ்நாடு

மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை  விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2.
தொலைபேசி : 044 28457676
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
16.3.2018
பத்திரிகை அறிக்கை
மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை
விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம
இந்து முன்னணி பேரியக்கம், அச்சுறுத்தி, ஆசைகாட்டி மோசடியாக செய்யப்படும் மதமாற்றத்தைத் தடுக்கும் முக்கிய பணியை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சட்டவிரோத கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று பிரசங்கம் செய்து மதமாற்றத்தை செய்து வருகின்றன. சிறு குழந்தைகளை அழைத்து சென்று அவர்களிடம் பொய்யான கதைகளைக் கூறி, சிறுவயதிலேயே மதம் மாற்றுகின்றனர். இச்சட்டவிரோத மோசடி ஜெபக்கூடங்களின் மீதும், அந்த ஜெபக்கூடங்களுக்கு வரும் நிதி ஆதாரம் குறித்தும் மாவட்டந்தோறும், தாசில்தார் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வரையும், காவல்துறையில் இன்ஸ்பெக்டர் தொடங்கி டி.ஜி.பி. அலுவலகம் வரையிலும் நூற்றுக்கணக்கானப் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை. மோசடியாக நடைபெறும் மதமாற்றத்தை இந்துக்கள் தடுக்கும்போது மட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மதச் சுதந்திரம் பறிபோயிற்று என்று போலி மதமாற்ற சக்திகளும், வாக்கு வங்கி அரசியல் கட்சிகளும் கூப்பாடு போடுகின்றன.
மதுரையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி சட்டவிரோத ஜெபக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று (11.3.2018) மதுரையின் ஒருபகுதியில் இவ்வாறு நடைபெறும் சட்டவிரோத ஜெபக்கூடமொன்றில் 6,7,8 வயதுடைய இந்து சிறுமிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, இந்து கடவுள்களை சைத்தான்கள், அவை உங்களுக்கு கெடுதல்களை செய்யும் என பயமுறுத்தி, நீங்கள் ஏசு ஒருவரையே வணங்குகள், அவரே உங்களைக் காப்பாற்றுவார் என ஹிப்னாட்டிஸம் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் அச்சத்தில் அலறித்துடித்து கத்த துவங்கினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொது மக்கள், இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த இந்து முன்னணியினர், பொதுமக்கள் இணைந்து ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, திறக்கச் சொல்லியுள்ளனர். அந்த அறையை திறந்தவுடன் குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். உண்மையில் நடந்தது இதுதான்.
அப்பகுதியில் இந்த செய்தி பரப்பரப்பானதால், இனி இந்த இடத்தில் மோசடி மதமாற்ற ஜெபக்கூடத்தை நடத்த முடியாது, இதனால் வெளிநாட்டு நிதியும் கிடைக்காது என பயந்த பாதிரிகள் திட்டமிட்டு, பிரச்னையை திசைத்திருப்பியுள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு மறைமுகமாக மாறிய மதிமுத தலைவர் வைகோவும், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், உண்மையை மறைத்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்து முன்னணியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத இந்து விரோத சக்திகள் இத்தகைய அரசியல்வாதிகள் மூலம் அரசை நிர்பந்தப்படுத்தி இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குப்போட்டு கைது செய்ய வைத்துள்ளனர்.
மதுரையில் இந்த சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களை தடை செய்யக்கோரி கடந்த மாதம் மதுரை காவல்துறை கமிஷனர், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேதகு ஆளுநர் அவர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக இப்புகார்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நேற்று (15.3.2018) அரசு நிர்வாகம் இந்து முன்னணியினர் மீது நடவடிக்ககை எடுப்பதில் மட்டும் போர்கால அவசரத்தில் செயல்பட்டுள்ளது. இது எந்தவிதத்தில் நியாயம்?
இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 21.3.2018 புதன் கிழமை அன்று இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
நாடு சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் சதி செய்து தமிழகத்தின் முக்கிய ஊர்களில், முக்கிய இடங்களில் சர்ச்சுகளை கட்டி விட்டு சென்றனர். அந்த இடங்களில் இன்றும் பிரார்த்தனைகளை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர். யாரும் இதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. ஆனால், பணத்தாசையாலும், மதவெறியாலும், சட்டவிரோத மோசடி மதமாற்றம் செய்யும் ஜெபக்கூடங்களின் மதமாற்ற முயற்சிகளைத்தான் இந்துக்கள் எதிர்க்கிறார்கள்.
ஆகவே, அரசு உடனடியாக சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களைத் தடை செய்ய வேண்டும். மோசடி மதமாற்றத்திற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய வரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
(காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்)
மாநிலத் தலைவர்

வைகோ அடக்கி வாசிக்க வேண்டும்! மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி…

இந்துமுன்னணி ஊழியர்களை தரக்குறைவாக பேசும் வைகோ, தமிழகம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நடந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ வன்முறை சம்பவங்கள் குறித்து வாய் திறவாமல் எங்கே சென்றார்?

குரங்கனி மலை தீ விபத்து நக்ஸல் அமைப்புகளின் திட்டம் என இந்துமுன்னணி கருதுகிறது…

மதுரை இந்துமுன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில தலைவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக தேனி #குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்!!!

11.10.18

நெல்லை மண்டல பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த இந்துமுன்னணி மாநில தலைவர் திரு. #காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
1. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இயக்க வேலைகளை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்டல பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

2.மேலும் விவசாயி என்று கூறிக்கொண்டு தமிழர்களின் மானத்தை தலைநகரில் வாங்கிய அய்யாக்கண்ணு திருச்செந்தூர் கோவிலில் பெண்ணிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட விதத்தை கண்டித்தார்.
3. ஈவேரா பிரச்சனையில் வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளை கண்டித்தார்.
4. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..

வைகோ, திருமாவளவன்
சீமான் போன்றோர் ஒன்றாக
சேர்ந்து ஒரு தேதி குறித்து
அறிவித்துவிட்டு இந்து
கோயில்களை இடிக்கவரட்டும்
இந்து முன்னணி
மாநில தலைவர்
காடேஸ்வரா C. சுப்ரமணியம்
கோவையில் சவால்

கோவையில் பாஜக அலுவலகம்
மீது பெட்ரோல் குண்டு வீசபட்ட
இடத்தில் பார்வையிட்ட
செய்தியாளர்களை சந்தித்த
அவர்பெரியார் வினை
விதைத்ததன் விளைவு தான்
தற்போது நடைபெற்று வருகிறது.

* H.ராஜா தனி மனிதர் அல்ல
அவருக்கு பின்னால்
இந்து முன்னணி துணை நிற்கும்.

* திரிபுராவில் கம்யூனிசம் தோற்றது
போல் தமிழகத்திலும் திமுக
மற்றும் அதிமுக காணாமல்
போய்கொண்டு இருக்கிறது.
கிறித்துவ, முஸ்லிம் மற்றும்
நக்சலைட்கள் இவர்கள்
பின்னனியில் இருந்து
தமிழகத்தில் ஒரு கலவரத்தை
தூண்ட முயற்சித்து வருவதாக
குற்றம் சாட்டினார்.

* பாரதிய ஜனதா கட்சி
அலுவலகத்தில் தொடர்ந்து
தாக்குதல் நடைபெறுவதாகவும்,
இந்து முன்னணியினரை
அமைதி காக்க கூறியதால்
வன்முறைகள் ஏதும் நடக்காமல்
கட்டுக்குள் இருப்பதாகவும்
எனவே இதன் பின்னணியில்
யார் உள்ளார்கள் என்பது
குறித்து காவல் துறை விசாரிக்க
வேண்டும் என கேட்டு கொண்டார்.

* திருமாவளவனுடன் சேர்ந்து
வைகோ, திருமுருகன்காந்தி,
நாம்தமிழர் கட்சியினர் போன்றோர்
கோவிலை இடிக்க வரட்டும் எனவும்
அப்போது இந்துக்கள்கையை
வெட்டுவார்களா வேறேதும்
வெட்டுவார்களா என தெரியும்
என வைகோவிற்கு
பகிரங்க சவால் விடுத்தார்.

பொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீச்சு..  இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
7-3-2018
பத்திரிகை அறிக்கை
பொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீச்சு..
இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..
ஜனநாயகத்தில், கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிப்பது என்பதைத் தாண்டி வன்முறையை தூண்டி, தமிழகத்தில் பொது அமைதியை கெடுக்கும் தீய சக்திகளின் கை ஓங்கி வருகிறது. இப்படி பேசுகிறவர்கள், மனிதம், மனித உரிமை பற்றியும், ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் பற்றியும் பேசுவது வேடிக்கையானது!
நேற்று இரவு கோவையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் அருகில் நடந்து சென்ற வயோதிகர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களின் பூணூல், குடுமியை அறுத்து, அவர்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவு பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.
இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூர செயல்கள், தமிழகத்தை ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு கொண்டு செல்கிறது.
இத்தகைய நடவடிக்கைகளை, எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை. அப்படியானால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் வன்முறையைக் கட்டவழித்துவிட திட்டமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கான ஒத்திகையாகக்கூட இது நடந்திருக்கலாம். காரணம், தமிழக ஆட்சியின் கைப்பிடி தளர்ந்துள்ளதை பயன்படுத்திக்கொள்ள எல்லோரும் முயலுகிறார்கள். அதில் ஒரு பகுதிதான், பிரிவினைவாத, பயங்கரவாதத்தை அரவணைக்கும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நடவடிக்கைகளாக இருக்கின்றன.
எனவே, இதுபோன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை, காவல்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கும், பெட்ரோல் பாம் போன்ற ஆயுத கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

பத்திரிகை அறிக்கை

காஞ்சி காமகோடி மடத்தின் 69வது பீடாதிபதியாக எழுந்தருளி ஆன்மிக பேரொளியை கொடுத்து வந்த ஷ்ரீ ஜயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார். அவரது நினைவை போற்றுகிறோம்..

காஞ்சி காமகோடி மடத்தின் 69வது பீடாதிபதியாக எழுந்தருளி ஆன்மிக பேரொளியை கொடுத்து வந்த ஷ்ரீ ஜயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார். அவரது நினைவை போற்றுகிறோம்..
இருள்நீக்கியில் தோன்றிய காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக எழுந்தருளிய ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழகத்தில் நாத்திகம், மதமாற்றம் போன்ற காரிருளை அகற்றிட இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து ஆன்மிக வழியில் பெரும்பங்காற்றியவர் அவர்.

இந்து முன்னணி இயக்கத்தின் ஆரம்ப காலம் முதலே உறுதுணையாக இருந்து, நமக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் என எண்ணி பார்க்கிறோம். திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் ஒரு லட்சம் பேரை முஸ்லீமாக மதமாற்ற செய்ய முயன்றபோதும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காட்டில் கிறிஸ்தவர்கள் செய்த கலவரத்தின் போதும் இந்து சமுதாயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திட இந்து முன்னணி ஏற்பாடு செய்த பாதயாத்திரையில் பங்கேற்று சிறப்பான பணியை செய்தார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருப்பணியின் போது நேரிடையாக எழுந்தருளி அருளாசி வழங்கியவர்.

பல தாழ்த்தப்பட்ட காலனி பகுதியில் கோயில்கள் அமைவதற்கு பேருதவி செய்தவர். ஏழ்மை நிலையில் உள்ள இந்துக்கள் பசிப்பிணி போக்கவும், நோய் நீங்கவும், கல்வியில் மேம்படவும் அருந்தொண்டாற்றினார்.

ஆன்மீகப்பணியின் மூலம் எல்லா சமுதாயத்தினரின் அன்பையும், மதிப்பையும் பெற்று உலக அளவில் போற்றப்பட்டவராக திகழ்ந்தார்.

அயோத்தியில் ஷ்ரீராமர் ஆலயம் அமைந்திட எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து பேசி, நல்லுறவு காண அரும்பாடுபட்டார்.

சுவாமிகள் மீது அவதூறு பரப்பி, அவமானப்படுத்திட, பொய் வழக்கு போட்ட போது, இந்து முன்னணி இயக்கமானது தொடர் போராட்டங்களை நடத்தி காஞ்சி மடத்தின் பாரம்பரியத்தை காத்திட களத்தில் இறங்கி போராடியது.

சென்ற ஆண்டு சுவாமிகளின் ஜெயந்தி நாளன்றும் இந்து முன்னணி சார்பில் ஒரு குழு நேரில் அவ்விழாவில் கலந்துகொண்டு ஆசி பெற்றது.
இன்றளவும் இந்து முன்னணியின் வளர்ச்சிப் பணியை பாராட்டி, அருளாசி வழங்கி வந்தவர் காஞ்சி பெரியவர் அவர்கள்.

இன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஷ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்துவிட்டார். அவரது இழப்பு ஆன்மிக உலகிலும், பாரத தேசத்திற்கும் பேரிழிப்பாகும்.

அவரது அருளாசியோடு இந்து முன்னணி, இந்து சமுதாய மக்கள் பணியில் என்றென்றும் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சுவாமிகளுக்கு, இந்து முன்னணி சார்பில் இறுதி மரியாதை செய்து, வணங்குகிறோம்.

இந்துமுன்னணி முதல் மாநில தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் பிறந்த நாள் பிப்ரவரி 17 – சமுதாய சமர்பண தின விழா

இந்து முன்னணியின் முதல் தலைவர்
தாணுலிங்க நாடார் அவர்களின் வாழ்கைத் துளிகள்…

17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.
இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.

1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.

1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.

1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.

1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்.

1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாதம் சிறை தண்டனை பெற்றார்.

1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.

1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகதேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.

1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகாரப்போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.

14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.

16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.

1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறிஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.

1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.

13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமைஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.

1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த RSS ஸ்டாதாபகர் டாக்டர் ஜி அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.

அவரது பிறந்த நாளை இந்துமுன்னணி பேரியக்கம் சமுதாய சமர்பண தின விழாவாக அனைத்து கிளைக்கமிட்டி களிலும் நடத்தி வருகிறது.

தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம் – இராம கோபாலன் பத்திரிகை அறிக்கை

தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி
தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..

திருச்செந்தூர் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானதும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டதும் பக்தர்களின் மனங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.

இறைவன் வாழும் இல்லங்களான கோயில்களில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிக பெரியோர்களின் கருத்தாக இருக்கிறது.

கடந்த காலங்களில் சுனாமி, வெள்ளம், புயல் பாதிப்புகளினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.

அதுபோல், தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்க, இது போன்ற அசந்தர்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சிறந்த வழியாகும்.

எனவே, வருகின்ற, தை வெள்ளியான பிப்ரவரி 9ஆம் தேதி மாலை அனைத்து இந்துக்களின் வீட்டின் வாசல்களிலும் கோலமிட்டு, வீட்டின் முன்பு தீபம் ஏற்றி அன்னை மீனாட்சியையும், திருச்செந்தூர் முருகப்பெருமானையும் தமிழக நலனுக்கு வேண்டுவோம்.

இந்த நற்செயலுக்கு, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு, தமிழகம் பாதுகாப்பாக இருப்பதற்கு எல்லா இந்து ஆன்மிக அமைப்புகளும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

கூட்டுப் பிரார்த்தனை, அனைவரும் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்வது நல்ல பலனையும், மக்களிடையே நேர்மறை சிந்தனையையும் ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே.

தமிழக நலனுக்காக எல்லோர் வீடுகளிலும் 9-2-2018 வெள்ளி அன்று மாலை வீட்டின் வாசலில் கோலமிட்டு, தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.