மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக இருந்த, பள்ளி ஆசிரியர் திரு. பந்து மண்டல் மற்றும் அவரது குழந்தை, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த கொடூர செயலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருகிறது, மாநில அரசுகள், மதத்தின் பெயரால் கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சுயலாபத்திற்காக வழக்கை இழுத்தடிப்பதாலும், நீர்த்துப்போக செய்வதாலும் குற்றவாளிகளுக்கு பயமில்லாமல் போகிறது. இஸ்லாமிய மதவாதிகள் மூளை சலவை செய்து கொடூர செயலை செய்ய தூண்டுகிறார்கள். இது போன்ற கொடூரமான சம்பவங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இத்தகைய கொடூர செயல்களை செய்பவர்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள், குற்றவாளிகளுக்கு உதவுபவர்கள், குற்றவாளிகள் மறைந்திருக்க இடமும் பொருள் உதவியும் அளிப்பவர்கள் ஆகியோரும் தண்டிக்கும்போது மட்டுமே இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்க முடியும்.
இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தாலும், மதபயங்கரவாதிகளால் செய்யப்படும் தனிப்பட்ட முறையிலான கொலைகள் தொடர நமது நாட்டு நீதி பரிபாலனத்தின் பலவீனமும் காரணமாக இருக்கிறது என்பது வேதனையான உண்மை.
நமது தமிழகத்தில், தஞ்சையில் ராமலிங்கம் என்பவர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஓராண்டாக வழக்கு விசாரணை அளவிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இதுபோன்ற செயல்பாட்டால் குற்றவாளிகளுக்கு, பயம் விட்டுப்போகிறது. மேலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்படும் அவலம் நீடிக்கிறது. குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதும், தாக்குவதும் எந்த அளவு குற்றவாளிகள் தைரியமாக செயல்பட முடிகிறது என்பதற்கு அவை எடுத்துக்காட்டாகும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற கொடூர தாக்குதல் தொடர்கிறது என்பதை கவனத்தில்கொண்டு, குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மாநில காவல்துறைக்கு வழிகாட்டுவதன் மூலம் மத பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மேற்கு வங்க மாநில அரசு, குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்