இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
தொலைபேசி: 044-28457676
21-1-2019
பத்திரிகை அறிக்கை
அநாகரிமாக, தேசவிரோதமாக செயல்படும் லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
நேற்று லயோலா கல்லூரியில், ஓவிய கண்காட்சி ஒன்றை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் துவக்கி வைத்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை கொச்சைபடுத்தியும், மத வெறுப்பை வளர்க்கும் விதமாகவும், பாரத மாதாவையும், பாரத பண்பாட்டையும், பாரத பிரதமரையும் அவமதித்தும், எழுத்திலோ, படத்திலோ காட்டமுடியாக அநாகரிகமான ஓவியங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதனை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஓர் அரங்கில் நடந்தாலும், இது பொது நிகழ்ச்சி. அநாகரிமான முறையில் இதுபோன்று வேறு மதங்களைப் பற்றியோ, அரசியல் தலைவர்களை பற்றியோ சித்திரிக்கப்பட்டிருந்தால் காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருந்திருக்கும்?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொடுங்கோலன் ஔரங்கசீப் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரித்து ஓவிய கண்காட்சியை ஒரு பெண் நடத்தியபோது (இந்த கண்காட்சி வரலாற்று சம்பவங்களை பின்னணியில், நாகரிகமான முறையில் வரையப்பட்டிருந்தவை) தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தது என்பதை நினைவு கூர்கிறோம்.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இந்த ஓவிய கண்காட்சியை திறந்தது வைத்துடன் பார்வையிட்டிருக்கிறார். அவரது தலைமையில், வக்கிரமான, பாலியல் படங்கள் இக்கண்காட்சி நடைபெற்றிருக்கிறது என்றால், அவரது நம்பகத் தன்மையை, நடுநிலைமையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்று வரும்போது, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அதிகாரிகளானாலும் சரி, அரசியல்வாதிகளானாலும் சரி, அவர்கள் மதம் சார்ந்து இருப்பதோடு மட்டுமல்ல, இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த, கேவலப்படுத்தவும் ஆதரவு தருகிறார்கள் என்பதற்கு மேலும் இந்நிகழ்ச்சி ஒரு சான்று.
தேசவிரோத, மத வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்தி மதக் கலவரத்தை உண்டாக்கும் தீயநோக்கோடு பல காரியங்களுக்கு லயோலா கல்லூரி மையமாக இருந்து வருகிறது. இது ஒரு தன்னாட்சி கல்லூரி என்றாலும், இந்திய சட்டத்திற்குக் கட்டுப்பட்டதே ஆகும். மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறையினால் தான் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய நிதியை பெறும் கல்லூரியாக லயோலா கல்லூரி இருந்து வருகிறது. எனவே, தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெறுப்பை வளர்க்கும் இக்கண்காட்சியை நடத்திய லயோலா கல்லூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு இன்று அளிக்கப்படுகிறது. அந்த புகாரின் மீது தமிழக காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
நடுநிலையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய, ஆன்மிக பெரியோர்கள் அநாகரிமான, மதவெறுப்பை வளர்க்கும் இச்செயலை மனந்திறந்து கண்டிக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
இராம கோபாலன்