Daily Archives: July 27, 2016

இஸ்லாமிய மதமாற்ற அபாயம்!  தீர்வு காண இந்துமுன்னணி களமிறங்கியது. …

நாகை மாவட்டம் வேதாரண்யம், கள்ளிமேடு  பத்ரகாளியம்மன் கோவில் பிரச்சைனையை முன்வைத்து அந்த பகுதியை சேர்ந்த 150 தலித்குடும்பங்கள் முஸ்லீம்களாக  மதம்மாறபோவதாக அறிவித்த செய்தியை அறிந்து இன்று 27/07/16 இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் திரு.பக்தன் ஜி சம்பந்தபட்ட மக்களை நேரில் சந்தித்து வருகிறார்கள்.

நாகைமாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள, கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை பல ஆண்டுகளாக   அனைத்து சமுதாய மக்களும்  தங்குதடையின்றி வழிபட்டு  வருகின்றனர். 

இந்தநிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக, திருவிழா மண்டகபடி சம்பந்தமாக  இந்து அறநிலையதுறையுடன் அப்பகுதி மக்களுக்கு பிரச்சனை இருந்து வருகிறது. 

பழங்கள்ளிமேடு மக்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க இந்து அறநிலையதுறை அலட்சியம் காட்டி வந்த காரணத்தல் அந்த மக்கள் நீதி மன்றத்தை நாடியுள்ளனர். அதன்  பிறகும் கூட மாவட்ட நிர்வாகம்  அலட்சிய போக்குடன் நடந்துகொண்ட காரணத்தால், ஆண்டு தோறும் நடைபெறும்  கோவில் திருவிழாவின்போது தேவையற்ற பதட்டம் நிலவிவருகிறது.

மேற்கண்ட கோவிலை கையில் வைத்திருக்கும் அரசும் மாவட்ட நிர்வாகமும் திடமான முடிவு எதையும் எடுக்காமால் பிரச்சனையை ஒத்திவைத்து கொண்டு வருவதால், மேற்கண்ட பிரச்சனை தீண்டாமை பிரச்சனைபோல் உருவெடுத்து மதமாற்ற சக்திகள் கிராமத்தில் ஊடுருவ வழிவகுத்திருக்கிறது. 

இந்தநிலையில் இந்துமுன்னணி மாநில அமைப்பாளர். க.பக்தவசலம் தலைமையில் மாநில செயலாளர் அ.வா.சனில்குமார்,

மாவட்ட தலைவர். k.s.விஜயன் ஆகியோர்கொண்ட குழுவினர் பழங்கள்ளிமேடு மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து உண்மை நிலவரத்தை கேட்டறிந்தபோது “ஆலய நிர்வாக அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர்களே” இப்பிரச்சனை மோசமான நிலைக்கு செல்ல காரணம் என்று தெரியவருகிறது.

இந்துசமுதாயத்தினரிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதில் ஆதாயம் பெற சில பிரிவினைவாத சக்திகள் வேலை செய்துவருவதை பழங்கள்ளிமேடு இந்துக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

மேலும் காவல் துறையும் தன் பங்கிற்க்கு இந்த விவகாரத்தை தவறானமுறையில் கையாண்டு அரசின் குளறுபடிகளை மூடிமறைக்க வேலை செய்துவருகிறது.  மாவட்ட நிர்வாகத்திற்க்கு பாடம் புகட்டுவதற்க்காகதான் பழங்கள்ளிமேடு கிராமத்தினர் மதம் மாறபோகிறோம் என்று அறிவித்துள்ளனர்.

காவால்துறையினர் இதை அறிந்திருந்தும்,” முஸ்லிம் அமைபினர்கள் குரானை திணிப்பதற்கு” அனுமதியளித்து மதமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.

கள்ளிமேட்டு பத்ரகாளியம்மனை ஆண்டுதோறும்  லட்சகணக்கான பொதுமக்கள்வழிபட்டு  வருகிறார்கள். ஆடிமாத கோவில் திருவிழாவான இந்தசமயத்தில் கோவிலை பற்றி சர்ச்சை எழுவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவிவருகிறது,

எனவே கோவிலை கையில்வைத்துள்ள அரசு நிர்வாகம்  இதில் தலையிட்டு இந்தபிரச்சனைக்கு உடனயாக தீர்வுகாண வேண்டுமென இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது.

     

க.பக்தவத்சலம்

மாநில  அமைப்பாளர் 

இந்துமுன்னணி