Monthly Archives: October 2015

சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்

சீனா தனது பண மதிப்பை குறைக்கவில்லை எனில் கடும்  பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கருத்தை உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இதனால் சீனா தனது பண மதிப்பை 30% குறைத்து இந்திய சந்தையில் சீன உற்பத்தி பொருட்களின் விலையை மிக மலிவாக்கியுள்ளது.
இந்தியர்கள் அனைவரும் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் சீன பொருட்களை வாங்காமல் இருந்தால் போதும்…

1.சீனா பொருளாதாரத்தில் பின் தங்கும் ….

2.இதன் விளைவாக இந்தியாவோடு எல்லை பிரச்சினை செய்யாது….

3.பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக தூண்டும் வேலையை செய்யாது …

4.இலங்கை அரசுக்கு ஆதரவான போக்கை நிறுத்தும் ….

5.தரமற்ற சீன  பொருட்கள் இந்தியாவிற்குள் வருவது குறையும்

ஆதலால் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் இந்தியர்கள் யாரும் சீன பொருட்கள் எவ்வளவு மலிவாக கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.

தீபாவளி வரப்போகிறது. சாதாரணமாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்டாசு வெடிக்க போகிறோம்..

வருடத்தில் ஒரு தடவை தான், பரவாயில்லை காசை பொருட்படுத்தாமல் வெடிப்போம்..ஆனால் வெடிப்பது சிவகாசி பட்டாசாக இருக்கட்டும்., சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்..

நமது காசில் தமிழர்கள் வாழ வேண்டும்…

சீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை.. தயவு செய்து பகிர்வு கொள்ள வேண்டும்…..

image

“விஸ்வரூபம் ” ஊழியர் சங்கமம் – திருப்பூர்

திருப்பூர் மாநகர் மாவட்டத்தில்  உள்ள 60 வார்டுகளிலும் இந்துமுன்னணி கிளை கமிட்டி உள்ளது.  சுமார் 500 கிளைக்கமிட்டிகள் மாநகர் முழுவதும் உள்ள நிலையில்,  வார்டுக்கு 100 பேர்  என்ற  இலக்கு வைத்து ஊழியர்கள் சங்கமம் நடந்தது. சுமார் 5000 பேர் திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு நோட்டீஸோ,  அறிவிப்போ,  வாட்ஸ் அப் செய்தியோ கொடுக்கப்படவில்லை, நேரடி கிளைக்கமிட்டிகளின் வார சந்திப்பில் மட்டுமே செய்தி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  திருப்பூர் இந்துமுன்னணி கோட்டை என்று நிரூபணமாகியுள்ளது. .

image