திருப்பூர் கிழக்கு மாவட்டம் – குண்டடம் ஒன்றியம் – விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் மூலம் தொடர்புக்கு வந்துள்ள புதிய நபர்களுக்கான 3 மணி நேர கார்யகர்த்தர் பயிற்சிமுகாம் முத்துகவுண்டன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 69 பேர் கலந்துகொண்ட இப்பயிற்சி முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பெரியசாமி., திரு.தமிழ்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. ராஜேஷ் அவர்கள் வழிநடத்தினார்.