தற்போது நடந்து முடிந்த பொதுக்குழுவில் ஆலோசித்தபடி நாம் உடனடியாக செய்ய வேண்டியது, ஒன்றிய அளவிலான ஒரு நாள் பயிற்சிமுகாம்கள் . தமிழகம் முழுதும் நடந்துமுடிந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் எண்ணற்ற புதிய இளைஞர்கள் இந்து முன்னணியில் இணைந்து பணியாற்றிட முன்வந்துள்ளனர். புதிய பல தொடர்புகள் நமக்கு வந்துள்ளது. இவர்களுக்கு தகுந்த பயிற்சிகள் கொடுத்து சிறப்பான வகையிலே இயக்கப்பணி ஆற்றிட வகை செய்யும் வகையில் ஒரு நாள் பயிற்சிமுகாம்கள் திட்டமிட்ட வகையிலே மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்பட உள்ளன.
பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.