10.10.2014 -அமரர் ராஜகோபால் ஜி நினைவுதினம்

இந்துமுன்னணி பேரியக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்து மிகச் சிறந்த வகையிலே இயக்கப்பணி ஆற்றி தேசப்பணிக்காகவே இன்னுயிர் ஈந்தவர் அமரர்.திரு.ராஜகோபால் ஜி.

வழக்கறிஞர் , சிறந்த சிந்தனையாளர், பேச்சாற்றல் மிக்கவர், அனைவரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவர் , எளிமையனாவர் எனப் பன்முக திறன் கொண்டவராகத் திகழ்ந்தவர் .

தமிழகத்தின் கீழக்கரை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட முடியாத வகையிலே இஸ்லாமிய எதிர்ப்பு இருந்துவந்தது. அங்கு எப்படியும் விநாயகர் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து விழாவினைக் கொண்டாடியே தீரவேண்டும் என முடிவு செய்தபோது, அங்கு தானே செல்வதாகக் கூறி, களப்பணி ஆற்றி, இந்துக்களை ஒன்றிணைத்து மிக தீரத்துடன், சாதுரியத்துடன் விநாயகர் சதுர்திவிழா கொண்டாட வைத்தவர்.

பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் விசர்ஜன விழாவிலே கலந்துகொண்டதைப் பொறுக்காத இஸ்லாமிய விஷமிகள் காங்கிரீட் ஆணிப் பந்துகள் செய்து அவர்மீது வீசி தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாது இயக்கப்பணி ஆற்றியவர்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக பக்தர்களுக்கு பெரும் தொந்தரவு இருந்துவந்தது. அதில் பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம், கிறிஸ்தவர்களாக இருந்தனர்.  ” கோவிலானது மக்கள் வழிபடும் இடம் ; அதை வியாபார ஸ்தலமாக ஆக்கிவிடக்கூடாது”  என்பதற்காக தொடர் போராட்டங்கள்  நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றிட வழிவகை செய்தார்.

திருப்பரங்குன்ற மலையின் மீது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த கார்த்திகை  தீபத் திருவிழாவினை, இஸ்லாமியர்களின் போக்குவரத்து இருக்கிறது என்பதற்காகவும் அங்கு அவர்களுடைய ஒரு கட்டிடம் இருக்கிறது என்பதாலும் நடத்த விடாது அரசும்,இந்து அறநிலையத்துறையும்,காவல்துறையும்   தடுத்து வந்தது. இதை எதிர்த்து கார்த்திகை தீப போராட்டங்கள்,  பதயாதிரைகள் நடத்தி அதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இவருடைய இந்த அரும்பணிகளைப் பொறுக்காத இஸ்லாமிய விஷமிகள் அவரை அவரது வீட்டின் முன்பாகவே 10.10.1994 அன்று படுகொலை செய்தனர்.

தேசப்பணியே தெய்வப்பணியாக செய்து வாழ்ந்த மாபெரும் வலிகாதஈ அவர்.

அவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது ஆசிகளால் நாம் சிறப்பாக இயக்கப் பணிகளை செய்திடுவோம்.

அன்னாரது 20 வது ஆண்டு நினைவு நாளில் அவரது பெயரால் ரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை  முகாம்கள், மரக்கன்றுகள் நாடும் விழாக்கள் உள்ளிட்ட சேவைப்பணிகள் ஆற்றிடுவோம் .

 

வந்தேமாதரம் ! பாரத் மாதா கீ  ஜெய்!!

DAL3FdPdYLEVbBXtH0BQbF0Y