மத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா? – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம்! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

11.07.2020

மத பாகுபாடு பார்த்து கட்டணங்களை வசூலிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் நடைபெறும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மதப் பாகுபாடு பார்க்கின்றார்கள் என்பது இந்து முன்னணியின் தொடர் குற்றச்சாட்டு.

உதாரணமாக தமிழகத்திலுள்ள கோவில்களை மட்டும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகின்றது. கோவிலில் வருகின்ற வருமானத்தை அரசு எடுத்துக் கொள்கின்றது .

முஸ்லிம்களின் மசூதி ,தர்கா ,கிறிஸ்தவர்களின் சர்ச் இவர்களுடைய வருமானத்தில் அரசு கை வைப்பதில்லை .

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மத பாகுபாடு பார்த்து கட்டணங்களை வசூலித்து வருகின்றது .

அரசுக்கு வருமானம் தராத சர்ச் மசூதிகளுக்கு சாதாரண கட்டணம் 120 யூனிட்டுக்கு 2 ரூபாய் 85 பைசாவும், 500 யூனிட்டுக்கு மேல் 5 ரூபாய் 75 பைசாவும் வசூலித்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் நிர்வகிக்கும் கோவில்களுக்கு அதிகபட்சமாக எட்டு ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பது என்பது பாரபட்சமானது.

மதசார்பற்ற அரசாங்கம் அனைத்து மதத்தையும் ஒரே மாதிரி பார்ப்பதுதான் சரியானது. ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தினால் பெரும்பான்மையிடம் அதிக கட்டணம் வசூலித்து அவர்களுக்கு கொடுப்பது வேதனைக்குரியது.

தமிழக அரசாங்கம் ஹிந்துக்களை மட்டும் ஓரவஞ்சனையாக நடத்துகிறது என்று இந்து முன்னணி குற்றம் சாட்டுகின்றது ,வன்மையாக கண்டிக்கின்றது.

இதை உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும் அனைத்து இந்து கோயில்களுக்கும் மின்கட்டணச் சலுகை வழங்க வேண்டும். இல்லை என்றால் இந்து முன்னணி நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கும்.

அனைத்து மின்சாரத்துறை அலுவலகம் முன்பும் இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி! வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *